ஒரு
தோட்டக்காரனிடம் இரண்டு அழகான புஷ்டியான பப்பாளி மரக்கன்றுகள் இருந்தன.
அவைகளை தன் தோட்டத்தில் நடப்போவதாக கூறினான் அந்த தோட்டக்காரன்.
அந்த இரண்டு பப்பாளி கன்றுகளில் ஒன்று அதை விரும்பவில்லை. ஐயோ அந்த
தோட்டத்திலா நான் நிற்க வேண்டும்? அழுக்கான அந்த சேற்று நிலம்! அங்கு
நிற்கும் அழகற்ற மரங்கள்!... இவற்றை நினைக்கும் போது அந்த பப்பாளிக்
கன்றுக்கு குமட்டிக்கொண்டு வந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அந்த நடு வெயிலில்
காலகாலம் வாழ வேண்டுமே என்பதை நினைத்து வேதனைப்பட்டது. எனவே
தோட்டக்காரரிடம் கெஞ்சியது, ''ஐயா என்னால் அந்த வெயிலையும், அந்த
உபத்திரவம் நிறைந்த தோட்டத்து சூழலையும் தாங்க முடியாது. தயவு செய்து என்னை
வீட்டுக்குள் ஓர் தொட்டியில் நட்டு விடுங்கள்'' என்று அடம் பிடித்தது.
மற்றைய பப்பாளிக் கன்றோ தோட்டக்காரரின் விருப்பத்துக்கு இணங்கியது
தோட்டக்காரனும் அடம் பிடித்த கன்றை வீட்டினுள் ஒரு தொட்டியிலும் மற்றைய
கன்றை அழுக்கு நிலமான அந்த தோட்டத்திலும் நட்டுவிட்டார்.
நாட்கள்
சென்றன தோட்டத்தில் வைத்த கன்று அழுக்கையும் வெயிலையும் சகித்துக்கொண்டு
நன்கு புஷ்டியாக வளர்ந்தது. மற்ற கன்றோ வெயிலும், சேறும்
இல்லாததைக்குறித்து சந்தோஷ ப்பட்டாலும் வெயில், பசளை என்பன போதியளவு
இன்மையால் நன்கு வளர முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டது. அதன் இலைகள்
சுருண்டன, அதன் உடல் மெலிந்தது. கனி கொடுக்கும் காலமும் வந்தது.
தோட்டத்தில் இருந்த பப்பாளி மரம் மிகவும் பெரிதும் இனியதுமான கனிகளைக்
கொடுத்தது. வீட்டுக்குள் நின்ற பப்பாளி மரத்தால் கனி கொடுக்க முடியவில்லை.
குட்டிக்குட்டி கனிகளையே கொடுக்க முடிந்தது. தன்னுடைய நிலமையையும் தன்னுடைய
கனிகளையும் பார்த்து தானே வெட்கப்பட்டுக் கொண்டது.
''வெயிலை
வெறுத்தவன் வாழ்க்கை'' என்பது இதுதான் பிரியமானவர்களே. மரத்தின் வாழ்வில்
வெயிலும் சேறும் தேவை யானது போலவே மனிதனின் வாழ்வில் உபத்திரவமும் வலியும்
அவசியமானது.
அழகான ஒரு கவிதையில் நான் ரசித்த வரிகள் இவை "முள்முடி இல்லாமல் பொன்முடி இல்லை, சிலுவை இல்லாமல் சிங்காசனம் இல்லை"
தேவ பிள்ளையே உன் வாழ்க்கையில் தொடர் உபத்திரவமா, கலங்காதே.
உபத்திரவத்தின் குகையை நீ கடந்து வரும் போது , அந்த குகையை கடந்ததற்கான
பரிசுடன் இயேசப்பா உன்னை வரவேற்பார் உபத்திரவத்தின் முடிவில் ஏதோவொரு
மிகப்பெரிய ஆசீர்வாதம் உனக்கு உண்டு.
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment