.
கேரி
மிகச்சிறந்த மொழி பெயர்ப்பாளர். முழு வேதத்தை 20
மொழிகளிலும், புதிய ஏற்பாட்டை 40 மொழிகளிலும் மொழி
பெயர்க்க காரணமாயிருந்தவர். வேதத்தின் சில பகுதிகளை
12க்கும் அதிகமான இந்திய மொழிகளில் மொழி பெயர்த்தார்.
இவ்வாறு தான் மொழி பெயர்த்த அநேக முக்கிய எழுத்து
சுருள்களை தன் சேமிப்பு அறையில் பத்திரப்படுத்தி
வைத்திருந்தார். இது ஒரு நாள் இரண்டு நாள் முயற்சியல்ல, பல
ஆண்டுகள் இரவு பகலாய் கண் விழித்து செய்த கடினமான
மற்றும் விடா முயற்சியின் பயன்கள். அன்று அவர் எழுதியதை
சேமித்து வைக்க கம்ப்யூட்டர் வசதியோ, எழுத்துபணியை
எளிதாக்க ஜெராக்ஸ் வசதியோ இல்லை. கட்டுகடடாக எழுதி
வரிசைப்படி அடுக்கி வைததிருந்த எல்லா முக்கிய தாள்களும்
அந்தோ இரண்டு மணி நேரத்திற்குள் சாம்பலாய் கிடந்தன. என்ன
ஒரு இழப்பு!
.
இந்த பேரழிவை
குறித்து தன் நண்பர் அன்ரூமுரேக்கு, ஒரு கடிதத்தை
எழுதினார். அதில், 'திரும்பவும் இந்த நிலம் உழப்பட
வேண்டும். ஆனால் நாங்கள் முற்றிலும் சோர்ந்து விடாதபடி
காக்கப்பட்டு வருகிறோம். சகலத்தையும் ஆளுகை செய்யும்
தேவனின் தெய்வீக தன்மையையும் ஞானத்தையும் நான்
சிந்தித்து பார்க்கும்போது ஆறுதலை பெற்று கொள்கிறேன்.
போன ஞாயிற்றுக்கிழமை சங்கீதம் 46:10 ல்
கூறப்பட்டுள்ள 'நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று
அறிந்து கொள்ளுங்கள்' என்ற வசனத்தை தியானித்து என்னுடைய
உபத்திரவத்தின் மத்தியில் என்னை பெலப்படுத்தி கொண்டேன்.
தேவன் நமக்கு செய்யக்கூடிய எல்லாவிதமான காரியங்களையும்,
நாம் அமைதியுடன் ஏற்று கொள்ள கூடியவர்களாக இருக்க
வேண்டும். என்ற கருத்தை என் உள்ளத்தின் ஆழத்தில் வைத்து
சிந்தனை செய்கிறேன்' என எழுதியிருந்தார். நஷ்டத்தின்
மத்தியிலும் தேவன் மீது அவர் வைத்திருந்த அசையாத
நம்பிக்கையை பாருங்கள்.
.
பிரியமானவர்களே, வில்லியம் கேரியின் இந்த மனநிலை
நம்மை உற்சாகப்படுத்தட்டும். செழிப்பின் நேரத்தில்
தேவனை மனதார துதிப்பது எளிது. ஆனால் தோல்வியில்,
நஷ்டத்தில், வியாதியில், கடனில், கண்ணீரில், அவர் மேல்
நம்பிக்கை வைப்பது அதை அனுபவித்தவர்களுக்குத்தான்
தெரியும்.
No comments:
Post a Comment