இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வந்த மிஷனெரி
வில்லியம் கேரி அவர்கள் வங்காள மொழியில் வேதத்தை மொழி
பெயர்த்ததுடன், இந்தியாவில் சுவிஷேசம் பரவ அரும்
பாடுபட்டார். இந்து மதம் மேலோங்கியிருந்த பகுதியில் தானே
அவர் செராம்பூர் கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தை நிறுவினார்.
இந்திய மக்களுக்கு அவர் செய்த தொண்டினை பாராட்டும்
வகையில் இந்திய அரசு அவர் பெயரில் ஒரு தபால் தலையை
வெளியிட்டது. ஒரு கிறிஸ்தவ மிஷனெரியின் பெயரில் ஒரு
தபால் தலை வெளிவந்தது, இந்திய சரித்திரத்திலேயே முதல்
முறையாகும். அவரை கௌரவிக்கும் வகையில் ஒரு விருந்தும்
ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
.
அவ்விருந்தில் கலந்து கொண்ட மற்றொரு ஆங்கிலேயர் இவர் மீது பொறாமை கொண்டவராய், 'கேரியை இங்கிலாந்திலேயே எனக்கு தெரியும், அவர் ஒரு சாதாரண காலணி தயாரிப்பாளராகத்தான் இருந்தார்' என எல்லாரும் கேட்கும்படி சொன்னார். உடனே கேரி புன்முறுவலுடன், ' ஐயா நான் காலணி தயாரிப்பாளராக அல்ல, பிய்ந்த செருப்பை தைப்பவனாகத்தான் இருந்தேன்' என பணிவுடன் கூறினார்.
.
கிறிஸ்தவரல்லாதவராயினும், இயேசுகிறிஸ்துவின் மலை பிரசங்கத்தை நேசித்து வாழ்வில் நடைமுறைப்படுத்தியவர் காந்தியடிகள். நம் நாடு சுதந்திரமடைய மறியல் நடத்திய போது, ஒரு அரசு அலுவலகத்தின் முன் தன் கூட்டத்தாரோடு படுத்திருந்தார் அவர். ஆங்கிலேயன் ஒருவன் அவருடைய வாயில் உதைக்கவே, வாய் முழுவதும் இரத்தம் கொட்டியது. அந்த நேரத்திலும், 'ஐயா உங்கள் காலில் ஏதேனும் காயம் ஏற்பட்டு விட்டதா' என்று ஆங்கிலேயனிடம் கேட்டார். அவன் தலைகுனிய வேண்டிதாயிற்று.

dear selvan, shall i get this in english?
ReplyDeletefrom the settings change the word verification.
wish u all the best
This blog is for tamil stories annan. Let me try to publish in english. thanks a lot for your comment and idea. will process it. thanks
Delete