ஆப்பிரிக்காவில்
ஒரு இனத்தவரிடம் ஒரு வினோத பழக்கம் உண்டு. யாராவது ஏதாவது
தவறு செய்தால் அங்குள்ள வைத்தியர் அந்த கிராமத்தில் உள்ள
ஒவ்வொருவரிடம் கேள்விகள் கேட்பார். ஆனால் யாரும் தங்கள்
தவறை ஒப்புக் கொள்ளவில்லை என்றால், யாரையெல்லாம்
சந்தேகப்படுகிறார்களோ அவர்களை அழைத்து, அவர்கள் முன்பாக
ஒரு ஈட்டியின் முனையானது
சூடுபடுத்தப்படும். அது நன்கு சூடாகும்போது அதை கொண்டு
வந்து சந்தேகப்படுபவர்களின் நாவில் வைக்கப்படும். தவறு
செய்தவன் நாவில் வைக்கும்போது அவன் வலியில் துடிப்பான்.
மற்றவர்கள் நாவில் வைக்கும்போது அது ஒன்றும் செய்யாது
என்பது அவர்களின் நம்பிக்கை.
.அந்த சூடாக்கப்பட்ட ஈட்டி தங்கள் வாயின் அருகில் வர இருக்கும்போது தவறு செய்தவர்கள் காட்டிற்குள் ஓடி ஒளிவார்கள். ஏனெனில் பொய் சொன்னவர்களின் நாவை அந்த சூடு பொசுக்கி விடும் என்று பயந்து. ஆனால் மற்றவர்களின் நாவுக்கு அந்த சூடு ஒன்றும் செய்யாது.
இது ஒரு குருட்டு நம்பிக்கை என்று நாம் நினைக்கலாம், ஆனால் அறிவியற்பூர்வமாக தவறு செய்யாதவர்கள் பதறாதபடியால், அவர்கள் நாவு ஈரமாயிருக்கும். அதனால் அந்த நாவு ஒரளவு சூட்டை தாங்க முடியும். ஆனால் தவறு செய்தவர்களின் நாவு வறண்டு போய் இருக்கும். சூடு வைக்கப்படும்போது அது பொசுங்கி போகும் என்று கூறப்படுகிறது. ஆதலால் அந்த கிராமத்தில் யாரும் தவறு செய்யவோ, பொய் பேசவோ பயப்படுவார்கள்.
.
கர்த்தருக்கு அருவருப்பான ஆறு காரியங்களில் பொய் நாவும் ஒன்று வேதம் கூறுகிறது. 'ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே' (நீதிமொழிகள் 6:16- 19). கர்த்தர் வெறுக்கும் இந்த ஆறு காரியங்களில் பொய் நாவு இரண்டாவதாக வருகிறது.
.
சிலருக்கு பொய் என்பது சரளமாக வரும். ஏன் விசுவாசிகள் என்று சொல்பவர்களுக்கும் பொய் சொல்வது என்பது ஒரு குற்றமாகவோ, பாவமாகவோ தெரிவதில்லை. சும்மா ஒரு சிறிய பொய் தானே சொன்னேன் என்று பொய் சொல்வதை மிகவும் எளிதாக எடுத்துக் கொள்ளுகிறவர்களும் உண்டு. கர்த்தர் பொய் நாவை அருவருக்கிறார் என்று வேதம் சொல்கிறது.
No comments:
Post a Comment