ஒரு சாது தன்
சீடர்களிடம் 'கோபப்படும்போது ஏன் ஒருவர் மற்றவரைப்
பார்த்து கத்துகிறார்?' என்று கேட்டார். ஒவ்வொருவரும்
ஒவ்வொரு பதிலைத் தந்தார்கள். ஒரு சீடன் 'நாம் நம்முடைய
பொறுமையை இழந்து விடுகிறோம். அதனால் சத்தம் போட்டு
கத்துகிறோம்' என்றான். அதற்கு சாது, 'ஏன், அவர்கள்
பக்கத்தில் தானே இருக்கிறார்கள்? பின் ஏன் கத்த வேண்டும்'
என்று மீண்டும் கேட்டார்.
.சீடர்கள் ஒவ்வொரு பதிலை கொடுத்தார்கள். அதில் ஒன்றிலும் திருப்தி அடையாத சாது சொன்னார், 'ஏன் கோபம் வரும்போது கத்துகிறார்கள் தெரியுமா? கோபம் வரும்போது அவர்களின் இருவரின் இருதயமும் ஒருவரையொருவர் விட்டு, தூர போய் விடுகிறது. அவர்களையுமறியாமல், தாங்கள் மற்ற நபரோடு தூர போய் விட்டோம் என்கிற எண்ணத்தினால் சத்தமாய் கத்துகிறார்கள்' என்றார்.
.
.அப்போது ஒரு சீடன், 'கோபம் வரும்போது கத்துகிறார்கள், ஆனால் அன்பு வரும்போது?' என்று கேட்டான். 'அன்பு வரும்போது அவர்கள் மெதுவாக பேசுகிறார்கள். காதில் கிசுகிசுப்பாய் பேசினாலும் அது நன்கு கேட்கும், ஏனெனில் அவர்கள் இருதயம் மிகவும் அருகில் இருப்பதால். கடைசியில் அவர்கள் பேசக்கூட வேண்டாம். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டாலே போதும், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று விளங்கிக் கொள்ளும்' என்றுக் கூறினார். அது எத்தனை உண்மை!.
.
திருமணமான புதிதில் மற்றவர்கள் கேட்காத வண்ணம் மெதுவாக பேசிக் கொள்ளும் தம்பதியர், நாளாக நாளாக ஒருவர் ஏன் பேசுகிறார் என்று நினைக்கும் வண்ணம் மிகவும் சத்தமாக கத்தி, பேசி சண்டைப் போட்டுக் கொள்ளுகிறார்கள்.
அதே தம்பதியர், நாளாக நாளாக எதுவும் பேசாமலே கண்களினாலே பார்த்து ஒருவரை யொருவர் புரிந்துக் கொள்ளும் காலக்கட்டத்திற்குள்ளும் வருகின்றனர். புது தம்பதியினர் போல பழைய தம்பதிகள் அதிகம் பேசிக் கொள்ளாவிட்டாலும், இருவரும் இருதயம் ஒத்திருப்பதால் அதிகமாய் பேசாவிட்டாலும், ஒருவரையொருவர் புரிந்துக் கொள்கின்றார்கள். .
.சில வேளைகளில் பழைய தம்பதியராயிருந்தாலும், கோபம் அளவு கடந்து வரும்போது, எதையுமே நினைக்காமல் ஒருவரையொருவர் வார்த்தைகளால் தாக்கி, புண்பட்டு, அன்று முழுவதும் சாப்பிடாமலும், அப்படியே ஜெபிக்காமலும் தூக்கத்திற்கு செல்கின்றனர்;. பசியினாலும், கோபத்தினாலும் தூக்கமும் வராமல், எழுந்துப்போய் சாப்பிடவும் வறட்டு கௌரவம் விட்டுக் கொடுக்காமல், பாடுபடுவார்கள். ஏன் இந்தப்பாடுகள்?சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்பாக மன்னித்து மறந்து, ஜெபித்துவிட்டுபடுத்தால், அடுத்தநாள் புதிய நாளாக, அன்றலர்ந்த மலராகபுத்துணர்ச்சியோடு எழுந்தரிக்கலாமில்லையா?
No comments:
Post a Comment