ஒரு போதகர் தன் குடும்பத்திலுள்ள
ஒவ்வொருவரையும், வீட்டில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில்
பறிகொடுத்தவராய், மிகுந்த வியாகுலத்தோடு ஒரு நாள்
தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு ஒரு
ஆலயத்தை கட்டும்படி வேலையாட்கள் வேலை செய்து
கொண்டிருந்தனர். அவர்கள் செய்யும் வேலையை சற்று நேரம்
நின்று அந்த போதகர் பார்த்து கொண்டிருந்தார். அதில்
ஒருவர், உளியையும், சுத்தியலையும் வைத்து, முக்கோண
வடிவில் கல்லை செதுக்கி கொண்டிருந்தார். அதை பார்த்த
போதகர், அவரிடம் சென்று, 'நீர் என்ன செய்து
கொண்டிருக்கிறீர்' என்று கேட்டார். அந்த ஆலயத்தின்
முகப்பு பகுதியை அவர் போதகரிடம் காட்டி, 'இந்த வடிவம்,
இந்த இடத்தில் பொருத்தும்படிக்கு இதை நான் செதுக்கி
கொண்டிருக்கிறேன்' என்று கூறினார்.
.
அவர் அப்படி
சொல்லி கொண்டிருக்கும்போதுதானே, ஆவியானவர் அவருடன் பேச
ஆரம்பித்தார். போதகர் சென்று கொண்டிருக்கும்
பள்ளத்தாக்கின் அனுபவம் அவரை தேவனிடம் நெருங்கி
சேரும்படியாகவும், தேவனோடு அவருடைய சித்தத்தில் தன்னை
சரியாக இடத்தில் பொருத்தும்படிக்கு தேவன்
அனுமதித்திருக்கிறார் என்று அந்த நாளில் அறிந்து
கொண்டார்.
No comments:
Post a Comment