ஒரு மனிதர் சபைக்கு ஒழுங்காக செல்பவர்,
ஒரு முறை ஒரு செய்தித்தாளில் எடிட்டர் பக்கத்திற்கு,
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சபைக்குச் செல்வது
பிரயோஜனமில்லை என்றும், தான் கடந்த30 வருடங்களாக
சபைக்குச் செல்வதாகவும், அங்கு, ஏறக்குறைய 3000 போதகங்களைக்
கேட்டிருப்பதாகவும், ஆனால் இப்போது, போதகர் செய்த
பிரசங்கங்களில் ஒன்றுக் கூட தன் நினைவில் இல்லையென்றும்,
போதகர் தன் நேரத்தையும், அவருடைய நேரத்தையும்
வீணடிப்பதாகவும் எழுதியிருந்தார். மற்றவர்களும் அதில்
சேர்ந்து விவாதிக்க ஆரம்பித்தார்கள். இது சில வாரங்களுக்குச் சென்றது. கடைசியில் ஒரு விசுவாசி எழுதினார், “எனக்கு திருமணமாகி 30 வருடங்கள் ஆகிறது. என் மனைவி ஏறக்குறைய 3200 தடவை உணவுகளை சமைத்து தந்திருக்கிறாள். அவள் என்ன சமைத்தாள் என்று கேட்டால் எனக்கு எதுவும் ஞாபகமில்லை, ஆனால் அவைகள் என் உடலுக்கு ஆரோக்கியத்தையும் நான் வேலை செய்வதற்கு எனக்கு சக்தியையும் கொடுத்து வருகின்றன. என் மனைவி சமைத்துக் கொடுத்திருக்கவில்லை என்றால், நான் இந்நேரம் சரீரபிரகாரமாக மரித்திருப்பேன். அதுப் போல நான் ஆலயத்திற்குச் சென்று கர்த்தருடைய வார்த்தைகளை கேட்கவில்லை என்றால் ஆத்தும ரீதியாக எப்போதோ மரித்திருப்பேன். தேவன் எனக்கு கொடுத்த சரீர, ஆத்மீக உணவுகளுக்காக ஸ்தோத்திரம்” என்றார்.
No comments:
Post a Comment