உலக பிரசித்தி
பெற்ற தேவ ஊழியரான பில்லி கிரகாம் தனது சுய வரலாற்று
புத்தகத்தில் ஒர நிகழ்ச்சியை பின்வருமாறு
எழுதியிருந்தார்: “உலகிலுள்ள மிகப்பெரிய
செல்வந்தர்களில் ஒருவராக இருந்த ஒரு மனிதர் தனது
ஆடம்பரமான பங்களாவிற்கு என்னையும் என் மனைவி ரூத்தையும்
மதிய உணவிற்கு அழைத்திருந்தார். எழுபத்தைந்து வயதான அவர்
நாங்கள் இருந்த நேரம் முழுவதும் கண்ணீர் சிந்த கூடிய
நிலையிலேயே இருந்தார். ‘உலகிலுள்ள அனைவரைக் காட்டிலும்
மிகுந்த வேதனையுள்ளவனாக நான் இருக்கிறேன், உலகில் நான்
எங்கு எந்த இடத்திற்கு போக வேண்டுமென்று விரும்பினாலும்
என்னால் அங்கு செல்ல முடியும். எனக்கு சொந்தமாக ஆகாய
விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களும் இருக்கின்றன. எனக்கு
மகிழ்ச்சி தரக்கூடிய எல்லா காரியங்களும் என்னிடம் உள்ளன.
ஆனால் நான் எப்போதும் நரகத்திலிருப்பதை போலவே
உணர்கிறேன்’ என்றார். நாங்கள் அவருக்காக ஜெபித்து விட்டு
கடந்து வந்தோம்.
.
அன்று மதியம்
அப்பகுதியிலுள்ள 70 வயது நிரம்பிய போதகர் ஒருவரை
சந்தித்தோம். அவர் உற்சாகத்தினாலும், கிறிஸ்துவின்
மேலும், பிறரின் மேலும் கொண்டிருந்த அன்பினாலும்
நிறைந்திருந்தார். அவர், ‘என்னுடைய பெயரில் இரண்டு பவுண்
நாணயங்கள் கூட இல்லை. ஆனால் நான் மிகுந்த
மகிழ்ச்சியோடிருக்கிறேன்’ என்றார். அவர் எங்களை
விட்டுசென்ற பிறகு, ‘இவ்விருவரில் அதிக ஐசுவரியமுளள்வர்
யார்’ என்று நான் ரூத்திடம் கேட்டேன். எங்களிருவருக்கும்
அதற்குரிய விடை தெரியும்” என்று எழுதியிருந்தார்
No comments:
Post a Comment