.
கிறிஸ்துவை
மறுதலிக்கும் தேசத்தில் இப்படி ஒரு நபரா என
மகிழ்ச்சியடைந்து, அம்மனிதனுக்கு பின்பாக இவ்வூழியரும்
பின் தொடர்ந்தார். யாரும் பார்த்து விட்டால் பிரச்சனை
வரலாம் என்பதால் சிறுது தூரம் அமைதியாய் சென்ற அவர், பின்
அந்த பாட்டை இவரும் விசில் அடிக்க ஆரம்பித்தார். அந்த
பாட்டைக் கேட்டவுடன் அந்த ருமேனியர் பிரகாசமுள்ள
முகத்தோடு திரும்பி வந்து, ஊழியரை கட்டிப்பிடித்து
கொண்டு தனது தாய் மொழியில் ஏதோதோ சொல்ல ஆரம்பித்தார்.
சிறிது நேரத்தில் தனது மொழி அவருக்கு புரியவில்லை என்பதை
அறிந்து தனது இருதயத்தின் மேல் கைகளை வைத்தார். பின்
கைகளை வானத்திற்கு நேராய் உயர்த்தினார். சிலுவை
அடையாளத்தை வரைந்து காண்பித்தார். கட்டுக்கடங்காத
மகிழ்ச்சியோடு மொழி, கலாச்சாரம், அரசியல் பின்னணி என
ஏதோதோ வித்தியாசத்தில் வாழும் ஒருவருக்கொருவர்
சம்மந்தமில்லா அவ்விருவரும் ஒரு சில நிமிடத்தில்
இணைக்கப்பட்டனர். காரணம் என்ன? கிறிஸ்துவின்
இரட்சிப்பின் சந்தோஷமே!
No comments:
Post a Comment