.
இன்று
கைகடிகாரம் செய்வதிலும், விற்பனையிலும் முதலிடம்
வகிப்பவர்கள் ஜப்பானியர்களாவர்கள். 1968-ம் வருடம்
வரைக்கும் அவர்களுடைய கடிகாரங்கள் அத்தனை புகழ்
பெறவில்லை. பின் எப்படி அவர்கள், கடிகாரங்கள்
புகழ்பெற்றன? அவர்கள் தாங்கள் செய்த கடிகாரங்களில்
மின்னணுக்களால், படிகத்தை (Electronic Quartz) வைத்து உருவாக்க
ஆரம்பித்தனர். அவை மற்ற கடிகாரங்களைவிட துல்லியமானதாக,
ஒரு சிறிய பாட்டரி மூலம் வருடக்கணக்கில் ஓடும்
கடிகாரங்களை உற்பத்தி செய்தனர்.
.
இந்த
மின்னணுக்களால் படிகத்தை வைத்து, கடிகாரங்களை முதலில்
உருவாக்கினவர்கள் யார் தெரியுமா? சுவிஸ் மக்களே! அதை
கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் சுவிஸ் கம்பெனியிடம்
முதலில் காண்பித்து விளக்கியபோது, அது ஒரு போதும் வேலை
செய்யாது என்று கடிகார உற்பத்தியாளர்கள் அதை ஏற்க
மறுத்தனர். ஆகவே சோர்வடைந்த ஆராய்ச்சியாளர்கள், அதை உலக
அளவில் நடைபெற்ற கடிகாரங்களின் கருத்தரங்கில் அதை வைத்த
போது, ஜப்பானியர்கள் அதை உடனே ஏற்றுக் கொண்டு அதன்படி
செய்ய ஆரம்பித்தனர். அதனால், இன்று வரை அவர்களுடைய
கடிகாரங்கள் உலக பிரசித்த பெற்று விளங்குகின்றன.
No comments:
Post a Comment