அப்போது
அவளுடைய தாயார் கேக் செய்து கொண்டிருந்தார்கள். அவளிடம்,
'உனக்கு கேக் செய்கிறேன், பிடிக்கும்தானே' என்று
கேட்டார்கள். அப்போது அவள், 'ஆம், அம்மா எனக்கு நீங்கள்
செய்கிற கேக் மிகவும் பிடிக்கும்' என்று கூறினாள்.
அப்போது
அவளுடைய தாயார், ' இந்தா, கொஞ்சம் எண்ணெயை எடுத்து
குடித்து கொள்' என்றார்கள். அதற்கு அவள், 'ஐயெ, சீ' என்றாள்.
'சரி, இந்தா, இரண்டு பச்சை முட்டை அதையும் வாயிலே போட்டு
கொள்' என்றார்கள், 'என்னம்மா, நீங்கள்' என்று அந்த பெண்
கேட்டாள். அம்மா விடாமல், 'கொஞ்சம் மாவையும் அதோடு, சோடா
உப்பையும் கூட சேர்த்து வாயில் போட்டு கொள்' என்று
கூறினார்கள். அப்போது அந்த பெண், 'என்னம்மா நீங்கள்
சொல்கிறீர்கள், அதையெல்லாம் எப்படி நான் அப்படியே வாயில்
போட்டு கொள்ள முடியும்' என்று கேட்டாள்.
அப்போது அந்த
தாயார், 'ஆம் மகளே, இவையெல்லாம் தனியாக பார்த்தால்,
அப்படியே சாப்பிட்டு விட முடியாது, அவையெல்லாம்,
பச்சையாக, பிரயோஜனமற்றதாக விரும்பதகாததாக தோன்றும்,
ஆனால், அவற்றை சரியான விகிதத்தில் கலந்து, சரியான
முறையில் சமைக்கும்போது, எல்லரும் விரும்புகிற அருமையான
கேக் ஆக மாறும்.
அதுபோல,
தேவனும் நம்முடைய வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு துன்பமான
நிகழ்ச்சிகளையும், விரும்பதகாத காரியங்களையும், நாம்
அவரை சார்ந்து கொள்ளும்போது, இனிமையாக மாற்றி தருவார்'
என்று கூறினார்கள். அவர் எல்லா காரியத்தையும் தமது
சித்தத்தின்படி செய்யும்போது, அவை நன்மையாக முடியும்
என்பது அவருக்கு தெரியும். ஆனால், நாம் அவரை சார்ந்து,
அவரை மாத்திரம் பற்றி கொண்டிருக்கும்போது, நம்முடைய
எல்லா நம்பிக்கையற்ற நிலைமைகளையும் அவர் மாற்றி,
நிச்சயமாக அற்புத விடுதலையை தருவார்.
No comments:
Post a Comment