பதினெட்டு வயது வாலிபன் ஒருவன் தீ விபத்திற்க்குட்பட்டான். உடையில் தீ பற்றியவுடன் அவன் தன் மேல்சட்டையைக் கழற்றி எறிந்தான்.
ஆனால், அவன் அணிந்திருந்த இடுக்கக் காலாடையை கழற்றி ஏறிய முடியவில்லை. அது தன் பெயருக்கேற்ப, அவன் காலோடு ஒட்டிக்கொண்டது.
இதற்குள் பற்றி எரிந்த நெருப்பு அவன் உடலை பெருமளவில் பாதித்துவிட்டது.
தாங்க முடியாத வேதனையுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். மருத்துவர்கள்
அவன் உயிரைக் காக்க போராடிக்கொண்டிருந்தனர்.
இறுதியில் அவர்கள்,
அவன் உடலுக்குப் பொருத்தமான மனித தோல் கிடைத்தால் மட்டுமே அவன் உயிரைக்
காப்பாற்ற முடியும் என்று கூறிவிட்டர்கள். அங்கு கூடிநின்ற அவனது
நண்பர்களும், உறவினர்களும் மாறி மாறி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து
விளித்தர்களே தவிர, தோல் கொடுக்க யாரும் முன்வரவில்லை.
அப்பொழுது
அங்கு நெஞ்சம் துடிதுடிக்க ஓடி வந்தார்கள் அவன் தாயார். மருத்துவர்களின்
தேவையை அறிந்த அவர்கள், ஐயா! எவ்வளவு தோல் வேண்டுமோ அதை என் உடம்பிலிருந்து
எடுத்துக்கொள்ளுங்கள். என்னைப் பற்றிக் கவலையில்லை. என் மகன் பிழைத்தல்
போதும் என்று கெஞ்சினார்கள். தாயின் தோல் மகனுக்கு வாழ்வளித்தது!
தாயன்பு எவ்வளவு சிறந்தது! ஆனால், இறைவன் கூறுவது என்ன?
ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
இறைவனின் அன்பு அளவிடமுடியா மகத்துவமானது.
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Sunday, April 7, 2013
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment