ஒரு முறை ஒரு இஸ்ரவேல் ரபியிடம் ஒரு
மாணவர், 'தேவன் ஏன் ஒரு வருடத்திற்கு வேண்டிய உணவை ஒரே
நாளில் கொடுக்காமல், ஒவ்வொரு நாளுக்கு வேண்டிய உணவை
மாத்திரம் ஒவ்வொரு நாளும் வனாந்தரத்தில் இருந்த
இஸ்ரவேலருக்கு கொடுத்தார்?’ என கேட்டார். அதற்கு அந்த
ரபி, ‘நான் உனக்கு ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன்'
என்றுகூறி, ‘ஒரு ராஜாவுககு ஒரு மகன் இருந்தான். அவனுக்கு
ஒரு வருடத்திற்கு வேண்டிய செலவை ஒரு குறிப்பிட்ட நாளில்
முழுவதுமாக அந்த ராஜா கொடுப்பது வழக்கம். ஆனால் என்று
அந்த பணத்தை கொடுப்பாரோ அந்த நாளில் மட்டுமே அந்த மகனை
அவரால் காண முடிந்தது. மற்ற நாட்களில் பார்க்க வேண்டும்
என்றாலும் அவரால் பார்க்க முடியாதபடி மகன் அந்த பணத்தை
கொண்டு சந்தோஷமாய் செலவழித்து கொண்டிருந்தான்.
அப்போது
அந்த ராஜா நினைத்தார். ‘என் மகனுக்கு தினந்தோறும்
வேண்டிய பணத்தை மாத்திரம் தருவேன். அப்போது அவன்
தினந்தோறும் என்னிடம் வருவான்' என்று நினைத்து,
தினந்தோறும் அந்த நாளுக்கு வேண்டிய பணத்தை மாத்திரம்
கொடுக்க ஆரம்பித்தார். அப்போது அந்த மகன், அவரிடம்
தினமும் வந்து, பணத்தை வாங்க வேண்டி அவரிடம் வர
ஆரம்பித்தான். அவன் தினமும் வர ஆரம்பித்தபோது,
தகப்பனுடயை அன்பையும் ஞானத்தையும் மகனோடு உள்ள
ஐக்கியத்தையும், உணர ஆரம்பித்தான். அதுப்போலத்தான், நம்
கர்த்தர் வனாந்தரத்திலே அந்த இஸ்ரவேலரை நடததினார்.
இன்றும் நம்மையும் நடத்துகிறார் என விளக்கினார்.
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment