டச்சுக்காரரான ஜோகன் ஹூபர் (Johan Huibers) நெதர்லாந்தில் தன் சொந்த ஊரான
சாஜென் (Schagen) என்னுமிடத்தில் ஒரு அழகிய பேழையை கட்டியிருக்கிறார்.230
அடி நீளமும் 43 அடி உயரமும் 43 அடி அகலமுமாக இது கட்டப்பட்டுள்ளது.
வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது போல கொப்பேர் மரத்தால் இது கட்டப்படாமல்,
ஸ்டீல் அடிவாரமும் சேடர் மற்றும் பைன் மரங்களைக் கொண்டு இது
கட்டப்பட்டுள்ளது. மூன்றடுக்கு மாடி கட்டடத்தின் உயரத்தில் இருக்கும்
இந்தப் பேழையினுள் நிஜ மிருக அளவுகளில் பொம்மைகளை செய்து வைத்துள்ளனர்.
இப்படி ஒட்டகச்சிவிங்கிகள், யானைகள், சிங்கங்கள், முதலைகள், வரிக்குதிரைகள்
என பல்வேறு மிருகங்களை ஜோடு ஜோடாக நிஜம் போல ஆங்காங்கே நிற்க
வைத்துள்ளனர்.ஒரு காஃபி ஷாப்பும்,கண்காட்சியும்,வேறு பல வேதாகம கதைகளை
விளக்கும் சித்தரிப்புகளும் அங்கே உள்ளன. முழுக்க முழுக்க சொந்தமாகவே
தற்கால உபரகரணங்களை பயன்படுத்தி இந்த மிதக்கும் பேழையை இவர் கட்டி
முடித்துள்ளார். 17 வயதான மகன் ராய் மட்டும் கட்டுமானத்தின் போது
அவ்வப்போது சில உதவிகள் செய்தாராம்.2005 மே மாதத்தில் இதை கட்டத்துவங்கி மே
2007 வாக்கில் கட்டி முடித்துள்ளார். இப்போது இது பொதுமக்கள் பார்வைக்கு
திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பேழையின் வழி சுவிசேசத்தை கேள்விப்பட்டு
ஏற்கனவே அநேகர் இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவுக்குள் வந்துள்ளனராம். ”மக்கள்
ஆலயங்களுக்கு வருவதை நிறுத்தி விட்டால் நாம் அவர்களிடம் சுவிசேசத்தை
சேர்க்க தோதாக பிற வழிகளை தேட வேண்டும்” என்கிறார் ஜோகன் ஹூபர்.”இன்னொரு
ஜலப்பிரளத்தை நான் எதிர்பார்கவில்லை.ஆனால் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை
நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது இன்னும் 50 வருடமாகலாம் அல்லது
நூறு வருடமாகலாம் யாருக்கும் தெரியாது” என்கிறார் இவர்.உண்மையில் நோவாவின்
பேழை இந்த டச்சுக்காரரின் பேழையை விட ஐந்துமடங்கு பெரியதாகும்.வேதத்தின்
படி நோவாவின் பேழை 492 அடி நீளமும் 82 அடி உயரமும் 49 அடி அகலமுமாக
இருந்திருக்க வேண்டும்.அதே அளவில் பெரிதாக இன்னொரு பேழையை கட்ட இரண்டாவது
புராஜெக்ட்டை இப்போது தொடக்கியிருக்கிறார் ஜோகன் ஹூபர். 2012 லண்டன்
ஒலிம்பிக் போட்டியின் போது தனது பேழையை தேம்ஸ் நதியில் ஓட விட்டு லண்டன்
குழந்தைகளுக்கு வேதாகம கதை சொல்ல இவருக்கு விருப்பமாம். லண்டன் நகர
மேயருக்கு அனுமதி கேட்டு விண்ணப்பக் கடிதம்
எழுதியிருக்கிறார்.எப்படியாகிலும் கர்த்தரின் நாமம் மகிமை பட்டால் சரி.
I கொரிந்தியர் 9:22
பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப்
பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான்
எல்லாருக்கும் எல்லாமானேன்
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment