பிப்ரவரி மாதம் என்னால் மறக்க முடியாத ஓர் மாதம். அப்போது எனக்கு வயது 20. 1955, பிப்ரவரி 11ம் தேதி என்னுடைய வாழ்கையை முடித்து கொள்வதற்காக ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ளும் நோக்குடன் சென்றேன். என்னுடைய வீட்டின் அருகாமையில் அதிவேக புகைவண்டி செல்லும். தற்கொலை செய்பவர்கள் அதின் முன் பாய்ந்தால் சுக்கு நூறாக உடல் சிதறிவிடும்.
நான் படிப்பில் தோல்வியுற்றவன். வீட்டின் வறுமை மற்றும் வேலைகிடைக்காத காரணம் என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள தீர்மானித்தேன். சிறிது நேரத்திற்குள்ளாக என் உயிர் போயிருக்கும். அந்த வேலையில் அங்கு வந்த என் மாமா அலெக்ஸ் ரத்தினம் என்னை சந்தித்தார். காவல் துறையில் பணியாற்றி வந்த இவர் "மகனே, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தேவனுடைய குமாரன் மாம்சமாக வந்தார். முடிவில்லாத வாழ்க்கையை கொடுக்க கல்வாரியில் தொங்கினார். உனக்கு நித்திய வாழ்வு கொடுக்க, உன் பாரங்கள், வலிகள், தோல்விகள், வறுமை, வேலையில்லாத போராட்டம் மற்றும் எல்லாவிதமான நோவுகளை அவர் சுமந்தார். அவரிடத்தில் உனக்கு நம்பிக்கை உண்டு" என்றார்.
என் கண்களில் கண்ணீரோடு "மாமா எனக்கு வேலை கிடைக்குமா? என் குடும்பத்தின் வறுமை நீங்குமா? என்று கேட்டேன். அவர் நிச்சயம் தருவார் என்று கூறி என்னை ஆறுதல் படுத்தி அழைத்து சென்றார்.
அன்று முதன் முதலாக தேவனுக்கு முன் முலன்கால்படி போட்டு 4 மணி நேரம் கண்ணீரோடு ஜெபித்தேன். என் பாவங்கள், புலம்பல்களை அவரிடம் அறிக்கையிட்டு ஜெபித்தேன். தெய்வீக அபிஷேகம், உலகம் தரகூடாத சமாதானம் என்னை நிரப்பியது. புதுமனிதன் ஆனேன்.
வேதாகமத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்கள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கண்ணீரோடு "நான் எதற்கு சாகவேண்டும்? தேவனே எனக்கு உதவிசெய்யும்" என்று ஜெபித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக பாடங்களில் தேர்ச்சியுற்று நல்லதொரு வேலையும் பெற்றேன். தேவன் என்னை வங்கி அதிகாரியாக உயர்த்தினார். அந்த வங்கிக்கு சுமார் 700 கிளைகள் இருந்தது.
என் தேவனை முகமுகமாக சந்திக்க நாளுக்கு நாள் ஆசை அதிகமானது. 7 வருடம் தொடர்ந்து ஜெபித்தேன். 1962ம் வருடம், எனக்கு 27 வயதை இருந்த போது என் குடும்பம், உறவினர்களோடு ஜெபித்துகொண்டிருந்த போது இயேசு கிறிஸ்து எனக்கு வெளிபட்டார். ஓர் பெரிய மகா வெளிச்சத்தை கண்டேன். அதின் மத்தியில் இயேசு கிறிஸ்து தோன்றி "நானே இயேசு கிறிஸ்து, என்னை தொடர்ந்து நீ ஜெபத்தில் சந்திக்க வேண்டும் என்றதால் உன்னை ஆசீர்வதிக்க வந்தேன்" என்றார். என் உறவினர்கள் என்னை சூழ்ந்திருக்க தேவன் "மகனே, இந்த உலகம் என் அன்பையும், பரிவையும் தெரிந்து வைத்துள்ளது, ஆனால் அதை வெளிபடுத்த யாரும் முன்வருவதில்லை. உன்னில் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை ஊற்றுகிறேன், எப்பொழுதெல்லாம் பரிவோடு மக்களுக்காக ஜெபிகிராயோ, நான் கேட்பேன்" என்றார்.
அன்றிலிருந்து என் வாழ்க்கை புதிய புத்தகமாக மாறிவிட்டது. அதுவரை சுயநலவாதியாக இருந்த என்னை தேவனின் அன்பு உடைத்து போட்டது. இந்த அன்பு என்னை அவரை பற்றி சொல்வதற்கு ஏவியது.
ஆமென்.
நீங்கள் பல தோல்விகளால் துவண்டு போய் உள்ளீர்களா? வாழ்க்கையே நரகம் போல் தெரிகிறதா? யாரும் இல்லை என்று நினைக்க தோன்றுகிறதா? இதோ இந்த சாட்சி உங்களை உயிர்பித்திருகும் என்று நம்புகிறேன். உங்களை அழைத்த தேவன் உங்களுக்காக காத்திருக்கிறார். அவரிடத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் ஆசீர்வாதங்களை விட பெரிய திட்டங்கள் இருக்கின்றன. தேவன் எதிர்பார்ப்பது, அவருடைய பாதத்தில் நீங்கள் இருக்கிற வண்ணமாகவே சென்று முழுவதுமாக ஒப்புகொடுப்பது. அவரோடு நேரம் செலவிடுவது. "அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறிந்து கொள்ளுங்கள்" என்ற அழைப்பு இதை படித்து கொண்டிருக்கும் உங்களுக்குதான்.
வேதம் வாசித்து ஜெபிக்க ஆயத்தமா? தேவன் உங்கள் மூலம் சில ஆசீர்வாதங்களை இப்பூமியில் நிறைவேற்ற ஆயத்தமாய் உள்ளார். அர்ப்பணிப்போடு கீழ்படிதல் மிக முக்கியம். தேவன் உங்களை ஆசீர்வதிபாராக. ஆமென்
Dr. D.G.S. தினகரன். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுரண்டை - யில் ஜூலை 1, 1935ல் பிறந்தார். தந்தை பெயர் திரு. துரைசாமி (ஆசிரியர்) தாய் ஹெப்சிபா.
1970 ம் ஆனது வேலூரில் நடந்த ஓர் பெருவிழா முதன் முறையாக "இயேசு அழைக்கிறார்" என்ற பெயரில் ஆரம்பமானது.
முதல் வானொலி (ரேடியோ) செய்தி மார்ச் 2, 1972 FEBA மூலம் வழங்கினார்
1973, முதன் முறையாக வெளிநாடு (ஸ்ரீலங்கா) சென்று ஊழியம் செய்தார்.
மே 1973 ல் முதன் முறையாக இயேசு அழைக்கிறார் ஊழிய பத்திரிகை வெளிவந்தது.
1983 ஜெப கோபுர திட்டம் தொடங்கப்பட்டது
1993 பெதஸ்தா ஜெப மையம் ஆரம்பமானது
1986 காருண்யா கல்லூரி தொடங்கப்பட்டது.
மே 21, 1986ம் ஆண்டு கொடூரமான விபத்தில் தன் மகள் இவாஞ்சலீன் மறித்து போனார்.
பிப்ரவரி 20, 2008 சென்னையில் சகோதரர் அவர்கள் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள்.
No comments:
Post a Comment