என் பெயர் ஸ்ரீனி சாமுவேல். நான் இயேசுவை அறியாமல் வாழ்ந்து வந்தேன்.
எனக்கு பனிரெண்டு வயது இருக்கும்பொழுது என தந்தை வேலைக்கு செல்லாமல்
இருந்ததால் எங்கள் குடும்பம் மிகுந்த வறுமை அடைந்தது. அப்பொழுது என தாயார்
கேழ்வரகை வைத்து பலகாரம் செய்து கொடுப்பார். காலையில் பள்ளிக்கு செல்வேன்,
மாலையில் தெருக்களில் சென்று என தாய் செய்து கொடுக்கும் பலகாரங்களை
விற்பேன். ஒரு இனிப்பு பத்து பைசாவிற்கு விற்றால் ஒரு நாளைக்கு பாத்து
ரூபாய் வருமானம் மட்டுமே கிடைக்கும். பல நாட்கள் உணவு கூட இல்லாமல்
கஷ்டப்பட்டோம்.
அந்நாட்களில் என் தாயார் செய்து தரும் பலகாரம்
மட்டுமே எங்கள் உணவாக இருக்கும். மதிய உணவு முடிந்தபின் மீதமாக வரும் சிறு
அளவு சாதத்தில் மோர் கலக்கிக் கொடுப்பார் என் தாயார், பல நாட்கள் அதுவே என்
இரவு உணவாக இருந்தது. முதலாவது என் சகோதரி ஏசுவை ஏற்றுக் கொண்டார்.
அதன்பின், என் தாயாரும் ஏசுவை ஏற்றுக் கொண்டார். அப்பொழுதெல்லாம் என்
தாயாரின் வற்புறுத்தலுக்காக மட்டுமே நான் ஆலயம் செல்வேன். அதன்பின், எனக்கு
ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை கிடைத்தது. இப்பொழுது ஆலயத்தைக்
காட்டிலும் வேலை எனக்கு முக்கியமாக தெரிந்தது. நண்பர்களோடு ஊர் சுற்றுவது,
சினிமா என்று ஜாலியாக நாட்களை கழித்தேன்.
என் தாயார் ஆலயத்துக்கு
அழைக்கும்போது எல்லாம் எனக்கு வேலை இருக்கிறதென்று சென்று விடுவேன். என்
தாயார் எனக்காக அதிகமாக ஜெபிப்பார்கள். பின்னாட்களில் நானும் என் தாயரோடு
ஆலயத்திற்கு செல்லத் தொடங்கினேன். என்னுடைய வழிகள் தவறானவை என்பதை உணர
ஆரம்பித்தேன். எனக்குள்ளே பல மாற்றங்கள், வாரம் தவறாமல் சபைக்கு செல்ல
தொடங்கினேன், என் தாயாரை விட அதிகமாக ஜெபிக்க ஆரம்பித்தேன். ஆண்டவரை அறிந்த
நாள் முதல் என் வாழ்வில் பெருத்த மகிழ்ச்சி, பூரண நிம்மதியுடன்
வாழ்கிறேன், எங்கள் வீட்டில் ஒருநாளும் உணவில்லாமல் இருந்ததில்லை. என்
குடும்பத்தில் திருமணமாகி பத்து வருடங்கள் கழித்தே என் மூத்த சகோதரிக்கு
குழந்தை பிறந்தது, என் இளைய சகோதரிக்கு எட்டு வருடங்கள் ஆகியும் குழந்தை
இல்லாத நிலை, என் தாயாருக்கும் திருமணமாகி பத்து வருடங்கள் கழித்தே குழந்தை
பிறந்துள்ளது. என் வாழ்வில் இப்படிப்பட்ட சாபங்கள் இருக்க கூடாது என்பதில்
மிக உறுதியாக ஜெபித்து வந்தேன். எனக்கு திருமணமான முதல் ஆண்டிலேயே முதல்
குழந்தையை பெற்றெடுக்கும் பாக்கியத்தை தேவன் தந்தார்.
எனக்கு
அருமையான மனைவியை தேவன் கொடுத்துள்ளார். இப்பொழுதும் எனக்கு இரண்டு
குழந்தைகள். நான் எக்க்ஸ்போர்டிலேயே தொடர்ந்து வேலை செய்து வந்தாலும், ஒரு
குறைவும் இல்லாமல் என் தேவன் என்னை வழி நடத்தி வருகிறார். ஒவ்வொரு நாளும்
கண்ணின் மணியைப் போல பாதுகாத்து நடத்தி வரும் தேவனுக்கு ஸ்தோத்திரம்.
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment