ஒரு முறை விஞ்ஞானிகள் பரிசோதனை ஒன்றை
மேற்கொண்டனர். அது என்னவென்றால், ஒரு பாத்திரத்தில்
நன்றாக சூடாக்கப்பட்ட தண்ணீரில் ஒரு தவளையை போட்டனர்.
அது மறு வினாடியே துள்ளி குதித்து வெளியே வந்தது. பின்
மற்றொரு பாத்திரத்தில் குளிர்ந்த தண்ணீரை எடுத்து அதில்
ஒரு தவளையை விட்டனர். முதலில் அது மிகவும் மகிழ்ச்சியாக
சுற்றி வந்தது. பின் அந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக
சூடேற்றி கொண்டே வந்தனர். தவளையும் எவ்வித வித்தியாச
உணர்வுமின்றி வெதுவெதுப்பான நீரில் சுகமாய் நீந்தி
கொண்டு வந்தது. தண்ணீரும் சற்று நேரத்தில் நன்றாக
சூடானது. நீந்தி கொண்டிருந்த தவளை சிறிது சிறிதாக தன்
பெலனை இழந்து வெளிவர நினைத்தும் முடியாமல் செத்து
பரிதாபமாக மிதந்தது.உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்'. - (எண்ணாகமம் 32:23).
No comments:
Post a Comment