எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Friday, October 4, 2013
ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள்
ஒரு தம்பதியினர் ஒரு ஞாயிற்று கிழமை
காலையில் சோம்பலாக படுத்திருந்தனர். அதில் மனைவி
எழுந்து ஆலயத்திற்கு செல்ல புறப்பட ஆரம்பித்தார்கள்.
ஆனால் கணவரோ எழுந்து புறப்படுகிற வழியாக இல்லை. அப்போது
மனைவி, 'என்னங்க. ஆலயத்திற்கு புறப்படவில்லையா?' என்று
கேட்டார்கள். அதற்கு கணவர், 'நான் இன்று ஆலயத்திற்கு
வரப்போவதில்லை, ஆகையால் புறப்படவில்லை' என்று கூறினார்.
அதற்கு மனைவி, ஏன் என்று கேட்டதற்கு, 'நான் ஆலயத்திற்கு
வராததற்கு மூன்று காரணங்கள் உண்டு, முதலாவது, ஆலயம்
அனலுமில்லாமல், குளிருமில்லாமல் இருக்கிறது. இரண்டாவது,
அங்கு என்னை விரும்புகிறவர்கள் யாரும் இல்லை, மூன்றாவது,
எனக்கு போக வேண்டும் போல இல்லை' என்று கூறினார். அதற்கு
மனைவி, 'எனக்கும் அதேபோல் மூன்று காரணங்கள் உண்டு,
முதலாவது, சபை அனலாக இருக்கிறது, இரண்டாவது,
குறைந்தபட்சம் 10 பேராவது உங்களை நேசிக்கிறவர்கள் அங்கு
இருக்கிறார்கள். மூன்றாவது, நீங்கள் தான் அங்கு போதகர்,
ஆகவே எழுந்து புறப்படுங்கள்' என்று கூறினார்கள். இது
வேடிக்கையாக இருந்தாலும், சிந்திக்க வேண்டிய காரியம்
ஆகும்.
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment