எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Saturday, September 8, 2012
ஜெபத்தினால் சாத்தான் ஓடிப் போவான்
ஒரு முறை பாலைவனப்பகுதியில் ஒரு சில கிறிஸ்தவ வியாபாரிகள் பிரயாணம் செய்தார்கள். அப்போது அவர்களை கண்ட வழியிலுள்ள கொள்ளையர்கள் கூட்டம் ஒன்று அவர்களிடம் இருககும் பெரிய தொகையை கொள்ளையடிக்க பின்தொடர்ந்தது. இரவு நேரமானதும் வியாபாரிகள் ஒரு கூடாரம் போட்டு அங்கு தங்கினர். இது தான் நல்ல சமயம் என அறிந்த கொள்ளையர் கூட்டம் அங்கு சென்றது. ஆனால் அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி! காரணம் அவர்களின் கூடாரத்தை சுற்றிலும் ஒரு கோட்டை போல இருந்ததே காரணம்! மிகவும் குழப்பமடைந்த கொள்ளையர்கள் 'நாளை பார்த்து கொள்வோம்' என திரும்பி சென்றனர். மறுநாளும் அதே நிகழ்ச்சிதான். அடுத்தநாள் வியாபாரிகளிடம் கொள்ளை கூட்ட தலைவன் சென்று விசாரித்தபோது, வியாபாரிகள் அதிசயித்து தேவனை மகிமைப்படுத்தினர். 'நாங்க்ள ஒவ்வொரு நாளும் இரவில் கைக்கோர்த்து ஜெபிப்பது வழக்கம். விட்டு வந்த எங்கள் குடும்பத்தினரை தேவன் பாதுகாக்கும்படியாகவும், எங்கள் பிரயாணத்திலும் தேவகரம் இருக்கும்படியாகவும் ஜெபிப்போம். அந்த ஜெபம் கோட்டை போல் எழும்பி எங்களை பாதுகாத்துள்ளது' என்றார். கொள்ளையர் தலைவன் ஜெபத்தை கேட்கும் இப்படிப்பட்ட தேவன் ஒருவர் இருக்கிறாரா என எண்ணி வியந்து, தேவனை ஏற்று கொண்டான்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment