ஒரு போதகர், தனது சபைக்கு எப்போதும்
வரும் ஒருவர் தொடர்ந்து வராததை கண்டார். சில வாரங்கள் கழித்து, அவர் வராததால், அவரை காண சென்றார். அங்கு
அந்த மனிதர், தனியாக நெருப்பு எரியும்
இடத்திற்கு பக்கத்தில் அனலுக்காக அமர்ந்திருப்பதை கண்டார். ஆரம்பத்தில் அவரை குசலம்
விசாரித்து விட்டு, அவர் பக்கத்தில் போய்
அமர்ந்தார். ஆனால் ஒன்றும் பேசவில்லை.
இருவரும் பேசாமல் அமர்ந்து இருந்தனர். அந்த போதகர் நெருப்பு எரிவதையே
பார்த்து கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து, அவர் ஒரு கரண்டியை
எடுத்து, எரிந்து கொண்டிருந்த ஒரு
கரித்துண்டை எடுத்து தனியே வைத்தார். கனகனவென்று எரிந்து கொண்டிருந்த அந்த
கரித்துண்டு சற்று நேரம் ஆனவுடன், சாம்பல் பூத்து
போய், அப்படியே அடங்கி அணைந்து
போனது.
பின்னர், அந்த போதகர் 'சரி நான் போக
வேண்டும்' என்று சொல்லி எழுந்தார்.
போவதற்கு முன், மீண்டும் அந்த கரித்துண்டை
எடுத்து, நெருப்பில் போட்டார். உடனே
அது பற்றி கொண்டு எரிய ஆரம்பித்தது. இதை கவனித்து கொண்டிருந்த அந்த
மனிதர், ' போதகர் ஐயா
அவர்களே, உங்களுடைய அமைதியான இந்த
செய்திக்காக நன்றி! நான் அடுத்த வாரம் உங்களை ஆலயத்தில் பார்க்கிறேன்' என்று
கூறினார்.
No comments:
Post a Comment