.
அங்குள்ள
சாலை அருகில் கல் உடைக்கும் ஒருவரை பார்த்தார். பெரிய பெரிய கற்களை
அவர் சம்மட்டியால் உடைத்து கொண்டிருந்தார். ஊழியர் அவரிடம்
சென்று, 'ஐயா உங்களால் எப்படி இவ்வளவு பெரிய கடினமான பாறைகளை
உடைக்க முடிகிறது?' என்று கேட்டார். அதற்கு கல் உடைப்பவர்,
'ஐயா கடினமான பாறையை உடைக்கும்போது. முழங்காலில் நின்று
உடைக்க வேண்டும். முழங்காலில் நிற்கும்போது, நமது வல்லமை அதிகரிக்கும். எப்படிப்பட்ட கடினமான பாறையையும்
உடைத்து விடலாம்' என்றார். அவர்
மூலம் தேவன் தன்னோடு பேசுவதை ஊழியர் ஒரு நொடிப்பொழுதில் புரிந்து கொண்டார். உள்ளத்தில்
உற்சாகமடைந்தவராக வீடு
திரும்பினார். அன்றிலிருந்து பல மணி நேரம் முழங்காலில்
நின்று ஜெபித்து
வெற்றி பெற்றார்.
.
உண்மைதான்,
முழங்காலில் நிற்பதுதான் வெற்றியின் இரகசியம்! வேதத்திலே
தானியேல், எலியா, பவுல், எஸ்தர் இவர்களெல்லாம் ஜெபித்து வெற்றி
கண்டனர். நாமும் முழங்காலில் நின்று இருதயத்தை
ஊற்றும்போது, மிகுந்த
பெலனை பெற் முடியும். முழங்கால் ஜெபம் பல தடைகற்களை தகர்த்து
வெற்றி பெற செய்யும்.
No comments:
Post a Comment