நன்றி: HI CHRISTIANS
“அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பத்தை நீ இணைக்கக் கூடுமோ?” (யோபு 38.31)
என்று வேதாகமம் கேட்கிறது. ஈர்ப்பு
சக்தியின் சட்டத்தினால்தான் எல்லா கிரகங்களும் ஒன்றுக் கொன்று இழுத்து
தாங்கிய நிலையில் உள்ளது. அவைகளை இணைக்கவும் பிரிக்கவும் முடியாது. என்பதை
வான சாஸ்திரிகள் நமக்கு கற்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு முன்பதாகவே
வேதாகமம் நமக்கு கூறி விட்டது.
மிருகசீரிஷத்தின் கட்டுக்களை அவிழ்ப்பாயோ? (ஆமோஸ் 5.8, யோபு 38.31)
மிருகசீரிஷம்
எனும் நட்சத்திர கூட்டத்தின் ஒழுங்கு முறையையும், அவைகள் ஒன்றாக இணைக்கப்
பட்டடிருப்பதைப் போல இருப்பதையும் வான சாஸ்திரம் கண்டு கொண்டுள்ளது. அநேக
நட்சத்திர கூட்டங்களிலுள்ள நட்சத்திரங்கள் தனித் தனியே பிரயாணம் செய்து
கொண்டிருக்கிறன. ஆனாலும் கார்த்திகை நட்சத்திர கூட்டமான, ஆறுமீன்
நட்டசத்திர கூட்டமும் மிருகசீரிஷம் என்ற நட்சத்திர கூட்டமும் இணைந்து
செல்லும் நட்சத்திர கூட்டங்களாகும்.
துருவ சக்கர நட்சத்திரத்தையும் அதை சேர்ந்த நட்சத் திரங்களையும் வழி
நடத்துவாயோ? (யோபு 38.32)
சுவாதி
நட்சத்திரமான துருவ சக்கர நட்சத்திரம் ஓடும் நட்சத்திரமென்றும், அது
வினாடிக்கு 84 மைல் வேகத்தில் பிரயாணம் செய்கிறதென்றும் விஞ்ஞானம் கண்டு
பிடித்திருக்கிறது. இடி பாடுகள் இல்லாமல் இவைகள் செய்யும் பிரயாணத்தின்
மகத்துவத்தை செய்தது யார்?
உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப் பண்ணி, அவைகளை யெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே.. ஏசா 40.26)
No comments:
Post a Comment