(மூல ஆதாரம்: BBC செய்தி நிறுவனம்)
2011ம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு ஓர் அற்புதமான ஆண்டு. ஏன்???
இயேசு கிறிஸ்து என்ற ஓர் தெய்வம் உலகில் இருந்ததுண்டா? அவரை சிலுவையில் அறைந்தார்களா? அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தாரா? என்ற பல கேள்விகள் இன்றும் பலருக்கு முளைத்து கொண்டே இருக்கிறது. இதற்கு சரித்திர பூர்வமாகவும், வேதாகமத்தின் அடிப்படையிலும் நாம் பல ஆதாரங்களை எடுத்து வைத்தும் சிலர் வேண்டும் என்றே முரண்டு பிடிப்பது நமக்கு தெரிந்த உண்மை.
சரி.. 2011 ல் நமக்கு ஓர் ஆச்சரியமூட்டும் வகையில் ஓர் அதிசய புதைபொருள் கிடைத்துள்ளது. அதை பற்றி இங்கே பார்ப்போம்.
பரிசுத்த வேதாகமத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த சவக்கடலில் தோல் கையெழுத்து பிரதிகள் வேதாகமத்திற்கு மிகப்பெரிய பொக்கிஷமாக திகழ்ந்து வருகிறது. அதைப்போல தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த 70 உலோக புத்தகங்கள் சவக்கடல் கண்டுபிடிப்புக்கு பின் கிடைக்கப்பெற்ற அரியதொரு விலையேறப்பெற்ற பொக்கிஷமாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இந்த உலோக புத்தகத்தின் பக்கங்கள் கிரெடிட் கார்டை காட்டிலும் பெரிதாக காணப்படவில்லை, அது முழுவதும் படிமப்படங்கள், குறியீடுகள்(symbols) மற்றும் வார்த்தைகளால் நிறைந்துள்ளது. அவை எல்லாமே மேசியாவை உலகுக்கு வெளிப்படுத்தும் மையக்கருவாகவே அமைந்துள்ளது. இன்னமும் சொல்லப்போனால் கிறிஸ்து இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
எப்படியெனில் இந்த உலோகங்களில்
"‘That struck me as so obviously a Christian image. There is a cross in the foreground, and behind it is what has to be the tomb [of Jesus], a small building with an opening, and behind that the walls of the city.
Read more: http://
அந்த படத்தில் ஓர் கல்லறை தெரிவதாகவும், அதன் பின்பு கல்லறை திறந்திருப்பதாகவும், அதன் பின்பு ஓர் நகரத்தின் சுவர் இருப்பதாகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கண்டு பிடிப்பு கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த ஓர் அறிய பொக்கிஷம். இயேசு கிறிஸ்து வாழ்ந்தது உண்மை, அவர் மரித்தது உண்மை, பின்பு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தது உண்மை. இதை நிருபிக்கும்வன்னமாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.
இந்த உலோக புத்தகங்கள் ஜோர்டானிலுள்ள தொலைதூர பின் தங்கிய பகுதியை சேர்ந்த ஒரு குகையில் 5 ஆண்டுகளுக்கு முன்னதாக கண்டெடுக்கப்பட்டுள்ளது, கி.பி 70ல் எருசலேம் ரோமர்களால் அழிக்கப்பட்டபோது அங்கிருந்து தப்பிய கிறிஸ்தவ அகதிகள் ஜோர்டானின் இந்த குகை பகுதிகளில் மறைந்து வாழ்ந்துள்ளனர். அவர்கள் இந்த குகையில் விட்டுச்சென்ற புத்தகங்க்ளே இந்த 70 உலோக புத்தகங்கள், இந்த 70 புத்தகங்களை துவக்க உலோகவியல் சோதனைக்கு உட்படுத்தியபோது அவைகளில் சில கி.பி முதலாம் நூற்றாண்டை சேர்ந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த பழங்கால புத்தகங்கள் மற்றும் வரலாற்று ரீதியிலான அகழ்வாராய்ச்சி நிபுணர் டேவிட் எல்கிங்க்ஸ்டன் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட புத்தக்ங்களில் சில் கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை பற்றி ஓர் முகமதிய பேராசியர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஜைத் அல்-சாத் கூறும் போது இந்த புத்தகம் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்பு அவரின் விசுவாசிகளால் எழுதப்பட்டிருக்கலாம் என்று கூறி இருக்கிறார். The director of the Jordan's Department of Antiquities, Ziad al-Saad, says" the books might have been made by followers of Jesus in the few decades immediately following his crucifixion."
மேலும் இதை பற்றி அறிந்து கொள்ள
http://www.bbc.co.uk/news/
http://
இன்னும் பல சரித்திர கண்டு பிடிப்புகள் இயேசுவே தெய்வம் எனவும், அவர் உயிர்தெழுந்தது உண்மை எனவும் கூறி உள்ளன. அதை நாம் பின் ஆராய்வோம்.
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
No comments:
Post a Comment