நன்றி: தமிழ் நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
சங்கீதம் 25:14 கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.
தொன்மாக்கள் (Dinosaurs) (http://
இதில் சிலவற்றை நான் ஏற்க்கனவே உங்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் பதிப்பில் கூறி இருக்கிறேன்.
முக்கியமாக தொன்மாக்கள் (Dinosaurs) பற்றி பல ஆய்வறிக்கைகளை இங்கே பார்க்கலாம். (http://www.bible.ca/
1 கொரிந்தியர் 15:41.41. சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.
There is one glory of the sun, and another glory of the moon, and another glory of the stars: for one star differeth from another star in glory.
இந்த வசனம் ஓர் அறிவியல் சார்ந்த வசனம். பவுல் கொரிந்திய சபைக்கு எழுதப்பட்டதாய் இருந்தாலும் இந்த வசனம் அறிவியல் ஆராய்சிகள் இல்லாத காலத்தில் எழுதப்பட்டது. யார் பவுலுக்கு சொல்லி கொடுத்திருப்பார்கள்? பரிசுத்த ஆவியானவர் உங்களிடத்தில் இடைபடும் போது தேவனின் ஞானம் உங்களிடத்தில் இருந்து வெளிப்படும். கர்த்தர் தமக்கு பிரியமானவர்களுக்கு ரகசியத்தை வெளிப்படுத்துகிறார் என்பது எவ்வளவு உண்மை. பவுல் ஓர் வான் ஆராய்ச்சியாளன் அல்ல. எந்த கலூரியிலும் பட்டம் பெறவோ, Ph.D பட்டமோ பெறவில்லை. கூடாரம் அமைக்கும் தொழில் பார்த்தவருக்கு இந்த வசனத்தை தேவனை தவிர யாரும் சொல்லி இருக்க முடியாது.
ஒரே சூரியன் Beth Barbier (April 2008) இதை பல வருடங்களாக ஆராய்ந்து வந்த நாசா விண்வெளி ஆராய்ச்சி கூடம் 2008ல் Beth Barbier என்ற தலை சிறந்த நாசா விஞ்சானி மூலம் முடிவுக்கு வந்தது. இந்த பிரபஞ்சத்தில் பல "பால்வெளி மண்டலம்"(Galaxy) இருப்பதால் அனைத்திலும் பல சூரியன் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டது. ஆனால் வேதாகமம் தெளிவாக சொல்கிறது, சூரியன் என்று, பல சூரியன் என்று வேதாகமத்தில் குறிப்பிடவில்லை. ஆனால் மற்ற கோள்களுக்கும் ஒளி தரும் திறமை உண்டு என்பதை வேதாகமம் காட்டி உள்ளது.
ஆதாரம் : http://
There is only one sun in OUR solar system (trust me, you would have heard about it if there were more!), but there are billions of stars in the Universe, and many of them are "suns" for other planetary systems.
வேதாகமம் முழுவதும் ஒரே சூரியனை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. வேதாகமத்தை எழுதியவர்கள் பல கண்டங்களை சேர்ந்தவர்கள், பல நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள், பல மொழிகளில் எழுதப்பட்டது, இதில் படித்தவர்கள் முதல் படிக்காதவர்களின் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது, பலர் பலரை பார்த்தது கூட கிடையாது, எந்த புத்தகமும் கொர்க்கப்படவும் இல்லை. ஆனால் இவர்கள் அனைவரும் ஓரே சூரியனை பற்றி எழுதி உள்ளது ஆச்சரியமான விஷயம் தான்.
இந்த காலத்திலேயே பலத்தை போட்டு குழப்பும் மனிதன் சூரியனை பார்த்தது கூட கிடையாது, அதை தீ குவியலாகவோ, வேறுவிதமாகவோ, எழுதி இருக்க பல வாய்புகள் உண்டு. ஆனால் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை ஒரே விதமாக எழுதி இருந்தது மகிமைக்குரிய விஷயமே..
சூரியன் நட்சத்திரம், நிலா வெவ்வேறு மகிமை கொண்டது:
இந்த சூரியனின் மகிமையும், சந்திரனின் மகிமையும், நட்சத்திரத்தின் மகிமையும் வேறு வேறு என்று வேதாகமம் என்றோ கூறி விட்டது. ஆனால் மனிதன் 19ம் நூற்றாண்டில் தான் அதை கண்டு பிடித்திருக்கிறான்.
நட்சத்திரம்: http://
சூரியன், சந்திரன் : http://
இம்மூன்றும் வேறு வேறு மகிமைகளை கொண்டது என்று பவுல் எழுதி வைத்துள்ளார். ஆமென்.
நட்சத்திரம் ஒளியை கொடுக்கும்:
இன்னமும் நட்சத்திரத்திற்கு ஒளி கொடுக்கும் தன்மை உண்டு என்பதை 4000 வருடங்களுக்கு முன்பே வேதாகமத்தில் உள்ளது. யோபு 3:9 அதின் அஸ்தமனகாலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் உண்டாகாமலும், விடியற்காலத்து வெளுப்பை அது காணாமலும் இருப்பதாக.
மற்ற கோள்களில் நட்சத்திரங்கள் ஒளியை கொடுக்கலாம். ஆனால் சூரியன் ஒன்றே என்று முடிவு செய்திருக்கிறார்கள். ஆமென்.
நாசா விண்வெளி துறை இப்பிரபஞ்சத்தில் பல "பால்வெளி மண்டலம்"(Galaxy) இருப்பதாக கூறி உள்ளது. ஒவ்வொரு பால்வெளி மண்டலத்திலும் ஒவ்வொரு சூரியன் உள்ளதா என்று ஆராய்ந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சிதான் மிஞ்சியது. அங்கு சூரியன் இல்லை அதற்கு பதிலாக சூரியனை விட பெரிதான நட்சத்திரங்கள் வெளிச்சம் கொடுக்க கண்டார்கள். இந்த நட்சத்திரங்கள் வித்தியாசமான ஒளியை கொடுக்கின்றன.
இதை பற்றி நாசா குறிப்பிடும் போது (http://
ஒளி மங்கிய நட்சத்திரங்கள் உண்டு
இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் யோபுவின் அதிகாரத்தில் மந்தமான நட்சத்திரம் இருப்பது தான். "யோபு 3:9 அதின் அஸ்தமனகாலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு" என்ற முதல் பகுதியில் மந்தமான ஒளியை கொண்ட நட்சத்திரங்கள் இருப்பதை காட்டுகின்றன. இதுவும் உண்மையே...
நாசா ஆராய்ச்சி நிறுவனத்தின் செய்தி: http://
Stars do give off light, that's why we can see them far away. The Sun, which is just an ordinary star, gives off the light that allows life to exist on Earth. Stars give off light the same way the filament in a light bulb does. Anything that is hot will glow. Cool stars glow red, stars like the Sun glow yellow, and really hot stars glow white or even blue-white. நாசா ஆய்வாளர் Dr. Eric Christian (September 2001)
இதை கண்டு பிடித்தது 2001ல். எந்த ஓர் ஆராய்ச்சியும் இல்லாமல் தேவ மனிதன் சொல்வதற்கு ஆச்சரியப்பட வேண்டாம். தேவனால் எல்லாம் கூடும்.
பூமியில் இருந்து நீராவி மேலே சென்று பின் மழை பெய்கிறது:
யோபு 36:27. அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது.
சரி முதலில் மழை (Rain) எவ்வாறு உருவாகிறது என்று நாம் பாப்போம்.
வெப்பத்தின் காரணமாக கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் திரவ நிலையிலிருந்து நீராவி நிலைக்கு மாறி காற்றில் கலந்து மேல் சென்று பின்பு மேகங்களை உருவாக்குகின்றன. இதுவே பிறகு சுத்தமான நீர் மழையாக பெய்கிறது. அது அதோடு நின்று விடாமல் அந்த நீர் திரும்பவும் நீராவி ஆகி இப்படி ஒரு சுழற்சியாக நடைபெறும் இந்த நிகழ்வை நீர் சுழற்சி (The Water Cycle) என்று குறிப்பிடுவர். பூமியில் இருந்து நீராவி மேலே சென்று பின் மழை பெய்கிறது
இதை யோபுவின் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ளது.
நீர்த்துளிகள் அணுவை போல மேலே ஏறுகிறது. பின் அது மலையை பெய்விக்கிறது. இதை மனிதன் பல ஆராய்சிகள் மூலம் நிரூபித்துள்ளான். ஆனால் வேதாகமம் என்றோ இதை நிருபித்து விட்டது..... எந்த ஓர் ஆராய்ச்சி கருவியும் இல்லாமல்....
ஆழக்கடல் நீரூற்று உள்ளது:ஆதியாகமம் 7:11 யோபு 38:16
ஆழக்கடலில் நீரூற்று உள்ளதாக (http://scienceblogs.com/
வானத்தை அளக்கலாம் ஆனால் மனிதனால் முடியாது: எரேமியா 31:37 37. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மேலே இருக்கிற வானங்கள் அளக்கப்படவும், கீழே இருக்கிற பூமியின் அஸ்திபாரங்கள் ஆராயப்படவும் கூடுமானால்
இந்த வசனத்தில் வானத்தின் அளவை அளக்க மனிதனால் கூடும் என்று தேவனே சொல்லி இருக்கிறார். பூமியின் அளவை மனிதன் அறிவான். ஆனால் வானத்தின் அளவை? அது மனிதனால் முடியாது என்று வேதம் சொல்லுகிறது. ஆனால் மனிதன் பல விதங்களில் முயற்சி எடுத்து பார்த்து சோர்ந்து போய்விட்டான். தற்போது NASA (US), ESA (Europe), JAXA (Japan) CSA (Canada) ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த முயற்சியை முடியாது என்று கைவிட்டுள்ளது.
கடைசியாக பூமியில் ராட்சசர்கள் வாழ்ந்தார்கள் ஆதியாகமம், யோபு அதிகாரங்கள்
ஆதியாகமம் 6:4 அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்;
இதனின் உண்மை தன்மையை அறிந்து கொள்ள
http://www.youtube.com/
http://rense.com/
இன்னமும் பல ஆராய்சிகளை என்னால் முடிந்தளவு மேற்கொண்டுள்ளேன். இப்படிப்பட்ட காரியங்களை படிக்க படிக்க தேவன் எவ்வளவு மகத்துவமானவர், வேதாகமம் எத்தனை உண்மையானது, உயர்வானது என்று தெளிவாக விளங்கி கொள்ள முடிகிறது. இன்னமும் பல வெளிப்பாடுகளோடு உங்களை சந்திக்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
ஆக்கம், தொகுப்பு, பதிப்பு
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
No comments:
Post a Comment