Wednesday, October 1, 2014

ஆல்பர்ட் ஐன்ஸ்டின் ஞானம்

நமக்கு எல்லாருக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அவர்களைப் பற்றி நன்றாக தெரியும். அவர் Modern day’s Father of Physics என்றழைக்கப்படுகிறார். அவருடைய ஞானம் மிக சிறந்ததாக இருந்தது. சாதாரணமாக ஒருவர் I.Q. test செய்ய வேண்டுமென்றால், அவருடைய I.Q. வை வைத்தே கணக்கிடுவர். ஐன்ஸ்டினின் I.Q. 160 க்கும் மேல் இருந்தது. சாதாரணமாக ஒரு மனிதனின் I.Q. level 90 லிருந்து 100 வரை இருக்கும். 100லிருந்து 110 வரை இருப்பவருக்கு சாதாரண நிலையிலிருந்து சற்று அதிகம் என்று கூறுவர்.
.
ஒரு நண்பர் எப்போதும் தனக்கு அதிக I.Q. இருப்பதாக கூறி கொள்வார். அவர் யூத மக்களுக்கு எதிரான ஒரு நாட்டை சேர்ந்தவர். ஒரு முறை நான் கூறினேன், 'நீர் எப்போதாவது I.Q.test செய்திருக்கிறீரா?' என்று கேட்டதற்கு 'எனக்கு அதெல்லாம் தேவையில்லை, எனது மூளை மிகவும் பெரியது' என்று கூறினார். அப்போது நான், சரி என்னதான் இந்த I.Q.test- ல் இருக்கிறது என்று பார்க்க ஆரம்பித்த போது, ஐன்ஸ்டினின் I.Q. level 160-க்கு மேல் இருப்பதை கண்டேன். ஐன்ஸ்டின் ஒரு ஜெர்மானிய யூதர். இதை நான் அந்த நண்பரிடம் சாட்சிகளுடன் சொன்னபோது, அவர் வாயடைத்து போனார்.
.
'நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்' (உபாகமம் 7:6) என்று இஸ்ரவேலரை தமக்கு சொந்தமாக தேவன் தெரிந்து கொண்ட போது, அவர்களுக்கு விசேஷித்த கிருபைகளையும் கொடுத்திருந்தார். அதனால்தான், தானியேல் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை குறித்து வாசிக்கும்போது, 'ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்து மடங்கு சமர்த்தராகக் கண்டான்' என பார்க்கிறோம்

No comments:

Post a Comment