வழிபோக்கன்
ஒருவன் வயல்வழியே நடந்து வந்தான். அப்போது பூசணிக்காய்
தோட்டத்தில் பெரிய பெரிய பூசணிக்காய்கள் காய்த்து
தரையில் கொடி படர்ந்திருந்தது. அதை பார்த்த
வழிப்போக்கன், என்ன கடவுளுடைய சிருஷ்டிப்பு, நிமிர்ந்து
நிற்க முடியாத செடியில் இவ்வளவு பெரிய பூசணிக்காய்களை
உருவாக்கியிருக்கிறார் என சலித்து கொண்டான். இதை
சிந்தித்தவாறே நடந்து வந்தான் வெயில்
அதிகமாயிருந்ததால் களைப்பின் மிகுதியினாலும்
சாலையோரத்திலிருந்த ஒரு ஆலமரத்தின் நிழலில் படுத்தான்.
படுத்தவன் அயர்ந்த நித்திரை செய்தான். சிறிது நேரத்தில்
ஆலமரத்தின் சிறிய பழம் ஒன்று அவன் தலையில் விழுந்தது.
பூசணிக்காயை நினைத்துக்கொண்டே படுத்திருந்த அவன் தன்
தலையில் பூசணிக்காய் தான் விழுந்து விட்டது என்று அலறி
அடித்து கொண்டு எழுந்து பார்த்தபோது ஒரு குட்டி ஆலம்பழம்
ஒன்று உருண்டு கிடந்தது. 'இந்த பெரிய மரத்தில்
பூசணிக்காய் போன்ற பெரிய பழத்தை படைத்திருப்பீரானால்
என் தலை தப்பியிருக்காது. ஞானமான உம் செயலுக்கு நன்றி'
என்றான்.
.
ஆம் நம் தேவன்
அனந்த ஞானமுள்ளவர்.
No comments:
Post a Comment