Thursday, December 25, 2014

கிறிஸ்மஸ் - ஓர் முக்கியமான காரணம்

இயேசு கிறிஸ்து இந்த பூமியில் பிறக்க ஓர் முக்கியமான காரணம் உண்டு.

பாவத்தில் உழன்று தவிக்கும் ஒவ்வொருவருக்கும் கடவுள் கொடுக்கவிருக்கும் மிகப்பெரிய சமாதானமான வாழ்க்கையே அது. பாவத்தினால் வரும் விளைவினால் இன்று மனிதனுக்கும் கடவுளுக்கும் மிகபெரிய விரிசல் விழுந்தது.

மனிதர்கள் எல்லோரும் பரலோகம் செல்வோம் என்று கூவுவதால் எந்த பயனும் விளையப்போவது இல்லை. பரலோகம் நாம் நினைப்பது போல சாதாரணமான இடம் அல்ல. அது கடவுள் தங்கும் மிகப்பெரிய உன்னதமான இடம். கடவுள் பரிசுத்தர் என்றால், பாவம் இல்லாதவர் என்றால், அவருடன் இருப்பவர்களும் அவ்வண்ணமே இருக்க முடியும். நமது வீட்டை சுத்தமாய் வைக்க ஆசைப்படுவோம். நடுவீட்டில் அசிங்கத்தை போட்டு அதனை பொறுத்து கொண்டு வாழமாட்டோம்.
அதை போலத்தான் நமது தெய்வமும். அவருடைய வீட்டில் அனேக வாசஸ்தலங்கள் உண்டு. ஆனால் அது பாவிகளுக்கு அல்ல. பாவ மன்னிப்பை பெற்று கொண்டவர்களுக்கு மட்டுமே.

அப்படிப்பட்ட இடத்திற்கு உன்னையும் என்னையும் அழைத்து செல்ல வந்த ஓர் மிகப்பெரிய தெய்வம் தான் இயேசு கிறிஸ்து. பாவ மன்னிப்பை வளங்கள் நியாயத்தீர்ப்பு கொடுக்கவிருக்கும் நீதிபதிக்கே அதிகாரம் உண்டு. அந்த பாவ மன்னிப்பின் அதிகாரத்தை பெற்ற இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தின் மூலமாக வழங்கினார். இதை ஏற்று கொள்ள மறவாதீர்கள். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாட உண்மையில் தகுதி உடையவர்கள் தானா என்று அறியுங்கள். இந்த இயேசு பிறந்த நாளில் ஒருவருக்காவது பாவ மன்னிப்பை குறித்தும் பரலோக கிரீடத்தை குறித்தும் பகிர மறவாதீர்கள்.

கிறிஸ்மஸ் பிறப்பு அல்ல, நம் உள்ளத்தில் இயேசு என்று பிறக்கிறாரோ அன்று தான் உண்மையான கிறிஸ்மஸ் நன்னாள். இந்த இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தில் பிறக்கவில்லை என்றால் "நானும் பரலோகம் செல்வேன்" என்று கூறுவதில் எந்த பயனும் இல்லை. பரலோகத்திர்க்குள் பாவத்தோடு நுழைய முடியாது. பாவ மன்னிப்பை பெற்றவர்கள் தான் நுழைய முடியும்.

கிறிஸ்மஸ் என்பது இயேசுவின் வருகையின் அர்த்தத்தை உணரும் நாள். அவர் வந்த நோக்கத்தை முழுமையாக அறிய நாம் நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கும் இந்த நற்செய்தியை சொல்ல வேண்டும். இயேசு பிறந்தவுடன் இந்த உலகத்திற்கு வந்த முதல் செய்தி என்ன தெரியுமா? ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் தூதர்களை பார்த்து பயந்து போக அவர்களோ "உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக என்றார்கள்" இயேசு இந்த உலகத்தில் பிறந்தவுடன் இரண்டு நிகழ்வுகள் நடந்தது. ஒன்று "இருளில் இருப்பவர்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள்" இரண்டு "உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக" என்ற செய்தி பரலோகில் இருந்து பூமிக்கு வந்தது.

பாவ இருளில் இருப்பவர்கள் இயேசுவை உள்ளத்தில் பிறக்க செய்வதன் மூலம் பெரிய வெளிச்சத்தை காண முடியும், அப்படிப்பட்ட வெளிச்சத்தை கண்டவர்கள் மிகப்பெரிய சமாதானத்தை காண முடியும். இது தான் இந்த கிறிஸ்மஸ் நாளில் நற்செய்தியை இருக்க முடியும்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அனைவருக்கும் என் குடும்பத்தின் சார்பாக கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

உங்களுக்கு ஓர் நற்செய்தி
இந்த உலகம் தரமுடியாத மிகப்பெரிய சமாதானத்தை இயேசு தருகிறார்

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

No comments:

Post a Comment