Friday, December 12, 2014

நயாகரா நீர் வீழ்ச்சி

நயாகரா நீர் வீழ்ச்சியில் ஒரு நிமிடத்திற்கு 50,00,000 டன் தண்ணீர் அருவியாக கொட்டப்படுகிறது. ஆனால் 1848ம் ஆண்டு, மார்ச் மாதம் 29ம் தேதி அந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது திடீரென்று நின்றது. அக்கம் பக்கத்தில் குடியிருந்தவர்கள், நீர்வீழ்ச்சியின் சத்தத்தை கேட்காததால், உலகின் கடைசி நேரத்திற்கு வந்துவிட்டோம் என்றே நினைத்தனர். ஆனால், 30 மணிநேரம் கழித்து, திரும்ப தண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
.
என்ன நிகழ்ந்தது? எரிக் ஏரி (Lake Erie) என்னுமிடத்தில் ஒரு பெரிய பனி கட்டி உடைந்து, அது மிதந்து வந்து, நயாகரா நீர்வீழ்ச்சியின் மேற் மட்டத்தில் அடைத்து கொண்டதால், தண்ணீர் போக முடியாதபடி நின்று போனது. திரும்ப வெயில் ஏறஏற பனிகட்டி உருகி, தண்ணீர் திரும்ப பாய தொடங்கியது. பனிகட்டியினால், அவ்வளவு பெரிய நயாகரா நீர்வீழ்ச்சியின் தண்ணீர் கொட்டப்படாமல் நின்று போனது.
.
நம்முடைய வாழ்விலும் தேவனுடைய அன்பும், சந்தோஷமும் சமாதானமும் தொடர்ந்து பாய வேண்டுமானால், நம் வாழ்வில் எந்த பனிகட்டி போன்ற தடையும் காணப்படக்கூடாது. தேவன் பட்சபாதமுள்ள தேவனல்ல, அவர் நம்மேல் அன்பை எப்போதும் வெளிப்படுத்துகிற தேவனாகவே இருக்கிறார்.

No comments:

Post a Comment