ஒருமுறை ஒரு போதகர் தன்
மக்களுக்கு இந்த வசனத்தை குறித்து போதித்து
கொண்டிருந்தபோது, அதில் பங்கெடுத்த சில சகோதரிகளுக்கு
எப்படி தட்டான் வெள்ளியை சுத்திகரிப்பான் என்றும், அந்த
காரியம் எப்படி தேவனோடு சம்பந்தப்படுத்தி
எழுதியிருக்கிறது என்றும் பார்க்க தோன்றியது. அதன்படி
ஒரு சகோதரி, தான் போய் தட்டானுடைய இடத்திற்கு சென்று
பார்த்துவிட்டு, அடுத்த வாரம் அதை குறித்து மற்றவர்களோடு
பகிர்ந்து கொள்ள போவதாக சொல்லி போனார்கள்.
.
அதன்படி, ஒரு
வெள்ளி தட்டானை கண்டுபடித்து, அவர் எப்படி அதை
சுத்திகரிக்கிறார் என்பதை பார்க்க வேண்டும் என்று
கேட்டு கொண்டு ஒரு நாளை குறித்து, அதன்படி அங்கு
போனார்கள். தான் எதற்காக அப்படி கேட்கிறார்கள் என்பதை
அந்த மனிதரிடம் எதுவும் சொல்லாமல், அவர் செய்வதை பார்க்க
ஆரம்பித்தார்கள்.
.
அவர்கள் பார்த்து
கொண்டிருந்தபோது, அந்த தட்டான் தன் கையிலிருந்த வெள்ளியை
எடுத்து, நெருப்பில் காட்ட ஆரம்பித்தார். அப்போது அவர்
சொன்னார், 'இந்த வெள்ளி, நெருப்பின் நடு மையத்தில் வைத்து,
சூடு காட்டப்பட வேண்டும். ஏனென்றால், நடுவில்தான்
நெருப்பின் அதிகபட்சம் சூடு இருக்கும், அப்படி
காண்பித்தால்தான், வெள்ளியிலிருக்கிற அழுக்கு எல்லாம்
மாறும்' என்று கூறினார்.
.
அப்போது அந்த
சகோதரி 'அவர் உட்கார்ந்து’ என்ற இடத்தை நினைவு கூர்ந்து,
அந்த தட்டானிடம், “நீர் உட்கார்ந்து தான் அதை நெருப்பில்
காட்ட வேண்டுமா” என்று கேட்டதற்கு, அவர், “ஆம், அந்த
வெள்ளி நெருப்பில் காட்டி முடியும்வரை நான் இங்கு
உடகார்ந்து தான் ஆக வேண்டும், மட்டுமல்ல என் கண்கள் அதன்
மேலேயே இருக்க வேண்டும், ஒரு நிமிடம் அதிக நேரம் இந்த
வெள்ளி நெருப்பில் இருந்தாலும், அது ஒன்றுமில்லாமற்
சேதமாகி போய் விடும்” என்று கூறினார். அதை கேட்ட அந்த
சகோதரி, சற்று நேரம் அமைதலாய் இருந்த பின், ‘நீர் எப்படி
இந்த வெள்ளி சுத்தமாயிற்று என்று அறிவீர்’ என்று
கேட்டதற்கு, அவர், 'அது மிகவும் சுலபம், என் சாயல் அதில்
தெரியும்' என்று கூறினார்.
.
ஓ! எத்தனை உண்மை!
நம் தேவன் எத்தனை அருமையானவர்! நீங்கள் ஒரு வேளை
நெருப்பின் நடுவில் போடப்பட்ட வெள்ளியை போல இருக்கிறேன்
என்று நினைக்கிறீர்களா? என்னால் தாங்க முடியாத
வேதனைகளும் சோதனைகளும் என்னை சூழ இருக்கிறது என்று
துவண்டு போயிருக்கிறீர்களா? தேவன், உங்களை உட்கார்ந்து,
வெள்ளியை புடமிடுகிறது போல புடமிட்டு கொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment