Tuesday, February 18, 2014

காதலர் தினத்தை குறித்த ஓர் உண்மை பதிவு..


பிப்ரவரி 14, உலக காதலர் தினம்.. இந்தியாவில் மட்டும் அல்ல... உலக நாடுகளில் உள்ள பல கல்லூரிகள், மேல்நிலை பள்ளிகள் பருவ மாணவர்கள் இந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.. இந்தியா மற்றும் இதர நாடுகளில் இதற்க்கு எதிர்க்கு வலுத்து வந்தாலும் மறைமுகமாக ஆதரவும் பெருகி வருகிறதை யாரும் மறக்க முடியாது..

இந்த காதலர் கொண்டாட்டம் கிறிஸ்தவர்களை சார்ந்தது என்ற ஓர் பொய்யான பிரசாரம் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதன் உண்மையை வேரறுக்க இந்த பதிவு உங்களுக்கு நிச்சயம் பயன்படும்...
பிப்ரவரி 14கு இரண்டு கிறிஸ்துவுக்காக மரித்த ரத்த சாட்சிகளின் நினைவு நாளாகும். அந்த இரண்டு பேர் பெயரும் செயின்ட் வலெண்டின் (Valentine of Rome (Valentinus presb. m. Romae) and Valentine of Terni (Valentinus ep. Interamnensis m. Romae)) என்று தான் முடியும். இதில் ரோம நகரத்தில் இருந்த செயின்ட் வலெண்டின் கி.பி. 496ம் ஆண்டு ப்லமினா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். (Ansgar, 1986, Chaucer and the Cult of Saint valentine, pp. 46-58)

மற்றொரு செயின்ட் வலெண்டின் (bishop of Interamna) அவர்கள் Emperor Aurelian ஆட்சி காலத்தில் கொடுமைபடுத்தப்பட்டு பின் ஆபிரிக்கா தேசத்தில் பல கிறிஸ்தவர்களோடு கொல்லப்பட்டார். இவரும் ப்லமினா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இந்த இருவரையும் ரோம நகரத்திலேயே அடக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கத்தோலிக்க வரலாற்றின் பதிவுபடி இருவரும் பிப்ரவரி 14 அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆதி நாட்களில் இவர்களின் இறந்த நாளை கத்தோலிக்க காலெண்டெர்கலில் குறித்து வைத்து நினைவு கூர்ந்துள்ளனர். ஆங்கிலிக்கன் திருச்சபைகளிலும் இந்த நினைவு நாளை பதிந்துள்ளனர்...(Holy Days". Church of England (Anglican Communion). 2012. Retrieved 27 October 2012. "February 14 Valentine, Martyr at Rome, c.269") அதன் பிறகு 1969க்கு பிறகு கத்தோலிக்க காலண்டெர்கலில் இருந்து இந்த பதிவு நீக்கப்பட்டது.. இதற்கு முக்கிய காரணமாக அவர்களின் நினைவு நாள் பதிவுகளில் சரியான ஆதாரங்கள் இல்லை என்பதே. இன்று வளர்ந்த கிறிஸ்தவ சபைகள் இந்த நினைவு கூறுதலை ஆதரிப்பதில்லை... (Calendarium Romanum ex Decreto Sacrosancti Œcumenici Concilii Vaticani II Instauratum Auctoritate Pauli PP. VI Promulgatum (Typis Polyglottis Vaticanis, MCMLXIX), p. 117)

செயின்ட் வலெண்டின் ரோம பேரசராக இருந்த Roman Emperor Claudius II அவர்களின் காலத்தில் கொடுமைக்குள்ளான கிறிஸ்தவர்களை ஆதரித்ததால் அரசரால் நேரடி பார்வையின் கீழ் வந்தார். வலெண்டின் அவர்களை சிறையில் அடைத்து கொடுமைபடுத்தியது அரசாங்கம்.. ஆனால் சிறைச்சாலையில் இவர் ஊழியம் செய்ததை நிறுத்தவில்லை. அங்குள்ள ராணுவ வீரர்களை தேவனுக்குள் வழிநடத்தினார்.

Roman Emperor Claudius II அவர்களின் காலத்தில் ராணுவ வீர்களுக்கு திருமணம் செய்ய மறுக்கப்பட்டது. மற்ற நாடுகளுக்கெதிராக போர் முடிந்தவுடன் ராணுவ வீரர்கள் தங்களுக்கு தேவையான பெண்களை எடுத்து கொள்ளலாம் என்று கட்டளையிடிருந்தான். வலெண்டின் அவர்கள் இதை எதிர்த்தார். வேதாகமத்தில் சொல்லப்பட்ட திருமணத்தை ராணுவ வீரர்களுக்கு கற்று கொடுத்து அவர்கள் விரும்பிய மங்கையரை ரகசியமாக திருமணம் செய்து வைத்தார்... (David James Harkness, Legends and Lore: Southerns Indians Flowers Holidays, vol. XL, No. 2, April 1961, University of Tennessee Newsletter (bimonthly), p. 15.)

இதன் மத்தியில் வலெண்டின் அவர்கள் Roman Emperor Claudius II அவர்களையும் கிறிஸ்துவை ஏற்று கொள்ள அறிவுறுத்தினார். இதனால் கோபம் அடைந்த பேரரசர் Roman Emperor Claudius II வலெண்டின் அவர்களை கொல்ல உத்தரவிட்டார்.

செயின்ட் வலெண்டின் அவர்கள் மரிப்பதற்கு முன் ஓர் அற்புதம் செய்தார். அதாவது ரோம பேரரசின் சிறை அதிகாரியாக இருந்த Asterius
என்பரின் மகள் ஜூலியா என்பவர் கண்பார்வை அற்றவராக இருந்தார். ஒரு முறை செயின்ட் வலெண்டின் அவர்கள் ஜெபித்ததின் விளைவாக ஜூலியாவிர்க்கு பார்வை கிடைத்தது. இந்த அற்புத நிகழ்வு சிறையில் இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த நிகழ்வு மூலம் சிறை அதிகாரியும், அவர் மகள் ஜூலியா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 44 பேர் இயேசு கிறிஸ்துவை சொந்த ரட்சகராக ஏற்று கொண்டனர்... (Oruch, Jack B., "St. Valentine, Chaucer, and Spring in February", Speculum, 56 (1981): 534–65. Oruch's survey of the literature finds no association between Valentine and romance prior to Chaucer. He concludes that Chaucer is likely to be "the original mythmaker in this instance.)

இவர் மரிப்பதற்கு முன் கடைசியாக ஜூலியாவிர்க்கு ஓர் கடிதம் எழுதினார்... சிறை அதிகாரி Asterius மகளான ஜூலியா ஓர் கடிதம் எழுதினார். அதின் இறுதியில் "Your Valentine" என்று முடித்திருந்தார். இந்த வார்த்தை இன்றும் கடிதங்களில் பரிமாறப்படுகிறது. இது காதல் கடிதம் அல்ல.. அன்பின் கடிதம்... இயேசு கிறிஸ்துவே தெய்வம் என்று முழங்கினவர் தன் இறுதி நாட்களில் இயேசுவை ஏற்று கொண்ட, கண்களில் அற்பதம் பெற்ற தேவ பிள்ளைக்கு எழுதின கடிதம்... அந்த கடிதம் அன்பையும் நட்பையும் ஆழமாக உணர்த்தும் ஓர் அழகிய மடல் (ஆதாரம்: Ruth Webb Lee, A History of Valentines, 1952, Studio Publications in association with Crowell)... இன்றைய காலத்தில் எழுதுவது போன்ற கேவலமான கடிதம் அல்ல... உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

மரித்த பின் செயின்ட் வலெண்டின் அவர்கள் Church of Praxedes என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இவரின் இடத்தில் ஜூலியா ஓர் பாதாம் மரத்தை நட்டார். இன்றும் கடிதங்களில் பாதாம் மரத்தின் அடையாளத்தை அன்பிற்கும், நட்பிற்கும் இருப்பதை யாவரும் அறியலாம். (John Foxe. Voices of the Martyrs. Bridge Logos Foundation. pg. 62.)

சரி... இவரின் நினைவு நாள் எப்படி காதலர் தினமானது??? இதை அறிந்து கொள்ளும் முன்னர் நீங்கள் தெரிந்து கொல்ல வேண்டிய முக்கியமான காரியம்.. செயின்ட் வலெண்டின் நினைவு நான் காதலர் தினமாக கொண்டாடப்படவில்லை. அதற்க்கு ஆதாரமும் கிடையாது. செயின்ட் வலெண்டின் ஓர் கத்தோலிக்க போதகர். இயேசு கிறிஸ்துவுக்காக தீவிரமாக உழைத்தவர். கத்தோலிக்க போதகர்கள் திருமணம் செய்வதில்லை. தங்கள் வாழ்க்கையை தேவனுக்காக அர்ப்பணித்தவர்கள். அதை போலவே செயின்ட் வலெண்டின் அவர்களும் வாழ்ந்தார். எந்த ஓர் சூழ்நிலையிலும் இவர் தன்னிலை மாறவில்லை... இவருக்கும் இந்த காதலர் தின கொண்டாடத்திர்க்கும், முன் இருந்த சபை நினைவு கூறுதலுக்கும் சம்பந்தம் இல்லை.. (ஆதாரம்:Oruch, Jack B., "St. Valentine, Chaucer, and Spring in February", Speculum, 56 (1981): 534–65.)

14 ன்காம் நூற்றாண்டுகளில் கிரேக்க-ரோம சாம்ராஜ்யங்களில் பிப்ரவரி மாதம் விடுமுறை மாதங்களாக இருந்துள்ளது. (Oruch, Jack B., "St. Valentine, Chaucer, and Spring in February", Speculum, 56 (1981): 534–65. ) அந்நாட்களில் ராணுவ வீரர்கள் தங்கள் மனைவிகளோடு நேரத்தை செலவிடுவர். திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் தங்கள் துணியை தேடுவது இந்த விடுமுறை நாட்களில் தான். செயின்ட் வலெண்டின் அவர்களில் நினைவு கூறுதலும் இந்த பிப்ரவரி மாதத்தில் வருவதால் அந்த நினைவு கூறும் விழாவில் இணைய ஆரம்பித்தனர்..

இதற்கு முக்கிய காரணம் செயின்ட் வலெண்டின் அவர்கள் ராணுவ வீர்களுக்கு திருமணம் செய்துவைத்த நிகழ்வுகள் தான். ராணுவ வீரர்கள் தங்கள் துணையை நிச்சயம் தேட வேண்டும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று செயின்ட் வலெண்டின் அவர்கள் அறிவுறுத்தி பல திருமணங்களை அரசுக்கு தெரியாமல் நடத்தி இருந்தார். ரோம பெரருசு கிளாடிஸ் II க்கு பின்னர் ராணுவ வீரர்கள் திருமணம் செய்து கொள்ள ஆரம்பித்தனர். இந்த நிகழ்வும் இணைந்து கொண்டதால் பிப்ரவரி மாதம் 14ன்காம் நாள் துணையை தேடும் நாளாகவும், தாங்கள் நேசிக்கும் நபரை சந்திக்கும் நாளாகவும், மனைவியோடு நேரம் செலவிடும் நாளாகவும் அனுசரிக்கப்பட்டது.

இந்த விழா கொஞ்சம் திசை மாறி வேகமாக உலகெங்கும் பரவ ஆரம்பித்தது. காதலர்கள் தினமாக இன்று மாறிப்போனது. சாத்தான் எப்படி ஓர் உன்னத நினைவு கூறும் நாளை மாற்றி விட்டான் பாருங்கள். இன்று பெற்றோருக்கு தெரியாமல் இருட்டறையை தேடி ஓடும் இளம் உள்ளங்கள் எத்தனை. இதன் மூலம் கிறிஸ்தவத்திற்கு ஓர் கெட்ட பெயரை உருவாக்கவும் சாத்தான் செயல்பட்டு வருகிறான்.

வாலிபனே, உன் இளவயது மனைவியோடு மகிழ்ந்திரு என்று தான் வேதம் நமக்கு கற்று கொடுக்கிறது. உன்னை நேசிப்பவர்கள் என்று ஓர் பெண்ணையோ, ஆணையோ களவில் தேடாதே.. உன்னை நேசிப்பவர்கள் உன் தாயாக இருந்தால் இந்த நாளில் அவர்களுக்கு ஓர் அன்பின் கடிதம் எழுது. உன் அக்கா, தம்பி அப்பா நண்பர்களுக்கும் நீ கடிதம் எழுதலாம். நீ உன் மனைவியை நேசிப்பாய் என்றால் அவர்களோடு நேரம் செலவிடு. உனக்கு துணையை பேசி முடித்திருப்பார்கள் என்றால் அவர்களோடு உன் அன்பை பகிர்ந்து கொள்...

அதை விட்டு விட்டு திருட்டுத்தனமாய் உன் உடலை தெருவில் கலையாதே.. வீட்டிற்கு தெரியாமல் நீ வைக்கும் உறவுகள் உன் நிம்மதியை நிச்சயம் குலைக்கும். உன் பெற்றோருக்கு, தேவனுக்கு உண்மையாய் இருக்கும் நாட்களில் அவர்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்யாதே. இது காதலர் தினம் அல்ல.. அன்பின் தினம்.. ஏசுவுக்கு இரண்டு தேவ மனிதர்கள் தன்னை அர்ப்பணித்த தினம் என்பதை எள்ளளவும் மறந்து விடாதே..

தேவை இல்லாத நட்பு உன்னை சாவுக்கு இழுக்கும். தேவை இல்லாத அன்பு உன்னை தெருக்களில் அலைகழிக்கும். தேவையில்லாத பருவக்காதல் உன் குடும்ப வாழ்க்கையை சீர்குலைத்து உண்மையான அன்புகளை கொன்றுவிடும்.. மீண்டும் இதை பற்றி மற்றொரு பதிவில் எழுதுகிறேன்...

தேவன் உங்களோடிருப்பாராக.. ஆமென்..

நான் என்னை நேசிப்பதை காட்டிலும்
என்னை அதிகதிகமாக நேசிக்கும்
இயேசு கிறிஸ்து

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

ஆதாரம்....

"Valentine's Day worth £1.3 Billion to UK Retailers". British Retail Consortium
Eve Devereux (2006). Love & Romance Facts, Figures & Fun
David James Harkness, Legends and Lore: Southerns Indians Flowers Holidays, vol. XL, No. 2, April 1961, University of Tennessee Newsletter (bimonthly), p. 15.
http://en.wikipedia.org/wiki/Valentine%27s_Day
Domingo, Ronnel. Among Asians, Filipinos dig Valentine's Day the most. Philippine Daily Inquirer,
New Patterns for Worship. Church of England. 2002. p. 408. ISBN 0715120603.
Valentine`s Day versus Dragobete at the Wayback Machine (archived June 27, 2010), cultura.ro (Romanian)

No comments:

Post a Comment