based on the article: http://கிறிஸ்தவ விழிப்புணர்வு அறிக்கை
இந்திய கிறிஸ்தவம் கடந்து வந்த சுவடுகள் பற்றிய ஓர் பதிவு - 2013
II தீமோத்தேயு 3:1 மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.
இந்திய தேசத்தில் கடந்த வருடத்தில் பல போராட்டங்கள். கிறித்தவர்களுக்கு எதிராக எழும்பியிருக்கும் போராட்டங்கள் இன்று தலை தூக்கி உள்ளன.. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது மத்தியில் மகராஷ்டிரா மாநிலமும், கர்நாடக மாநிலமும் தான். இங்கு பல ஆலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன, போதர்கர்கள், ஊழியக்காரர்கள், சபை உறுப்பினர்கள் என்று பலரும் தாக்கப்பட்டுள்ளனர். இந்த பதிவு Times of India என்ற ஓர் ஆங்கில செய்தி தாளை முன் வைத்து எழுதப்பட்டுள்ளது.
http://
இதில் கூறப்பட்டுள்ள சில முக்கியமான பதிவுகள்.
1) எந்த ஆண்டிலும் இல்லாதவண்ணம் 2013ம் ஆண்டு இந்திய கிறிஸ்தவர்களுக்கு எதிராக பல எதிர்ப்புகள் கிளம்பினது
2) இதில் முக்கியமாக மகராஷ்டிரா மாநில கிறிஸ்தவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
3) இரண்டாவதாக கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில கிறிஸ்தவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர்
4) ஓடிஸா நான்காவது இடத்திலும், சத்தீஸ்கர் ஐந்தாவது இடத்திலும், மத்திய பிரதேசம் 6ம் இடத்திலும், தமிழ்நாடு 7ம் இடத்திலும், கேரளா 8ம் இடத்திலும் ராஜஸ்தான் 9ம் இடத்திலும், டெல்லி 10ம் இடத்திலும் உள்ளது
5) இவர்கள் சபைகள் பாதிக்கப்பட்டுள்ள தன்மை, கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டுள்ள எண்ணிக்கை, கிறிஸ்தவ சபைகளை கட்ட கூடாதபடி போடப்பட்டுள்ள வழக்குகள், கிறிஸ்தவ இல்லங்களில் கூட்டங்கள் நடத்தகூடாதபடி உள்ள தடைகள், போதகர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள், கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்திர்க்காக கொடூரமாக கொல்லப்பட்ட கிறிஸ்தவர்கள் என்ற நிலையில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
6) முக்கியமாக தமிழ்நாடு மற்றும் கேரளா முதல் பத்து இடங்களை பிடித்துள்ளதை காணலாம்.
7) சுமார் 4,000 கிறிஸ்தவ குடும்பங்கள் கடந்த ஒரே வருடத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.
8) இதில் சுமார் 1,000 பெண்கள் மற்றும் 500 குழந்தைகளும் அடங்குவர்
9) சுமார் 400 கிறிஸ்தவ தலைவர்கள் கடந்த வருடத்தில் தாக்கப்பட்டுள்ளனர்.
10) சுமார் 100 சபைகள் தாக்கப்பட்டுள்ளன.
11) கடந்த வருடத்தில் 7 கிறிஸ்தவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு மரணத்திர்க்குடுத்தப்படுள்ள
சில முக்கியமான சம்பவங்கள்
1) மும்பையில் 133 ஆண்டு பழமை வாய்ந்த இயேசு கிறிஸ்துவின் சிலை தகர்க்கப்பட்டது. இதில் இந்த சிலை துண்டானது http://
2) டெல்லியில் கிறிஸ்தவ சபை போதகர்கள், ஊழியர்கள், கன்னியாஸ்திரிகள் நடத்திய அமைதி பேரணியில் போலீஸ் திடீரென்று தடியடி நடத்தியது. இதில் பலரும் காயப்பட்டனர். பலர் சிறைகைதிகள் ஆயினர். http://
ஒரு பக்கம் கிறிஸ்தவம் போராடி கொண்டிருக்கிறது.. இன்னொரு பக்கம் தூங்கி கொண்டிருக்கிறது. கிறிஸ்தவனே நீ எப்போது உன் கைகளை இணைக்க போகிறாய்? உன் சபையை மட்டும் பாதிகாத்துகொண்டிருக்கும் நீ உன்னை போல உள்ள பல கிறிஸ்தவ குடும்பங்களுக்காக என்றைக்கு போராட போகிறாய்? உங்களை வன்முறையில் இறங்க சொல்லவில்லை. அதை நம் தேவன் கற்று கொடுக்கவும் இல்லை. இந்த டெல்லி போராட்டத்திற்கு உங்கள் சபையின் பங்கு என்ன? உனக்கும் தானே இணைந்து பேரணி நடத்தினார்கள்? உன் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தானே அவர்கள் ஜெபித்தார்கள்? உன்னுடைய பங்கு என்ன?
3) 3rd October, 2013 - கர்நாடகா கிறிஸ்தவ போதக குடும்பம் கடுமையாக தாக்கப்பட்டது http://
4) கிறிஸ்தவ பள்ளிகூட உதவியாளரும், போதகரும் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் http://
5) கர்நாடகாவில் கடந்த வருடம் ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதத்திற்குள்ளாய் சுமார் 21 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் பல கிறிஸ்தவ குடும்பங்கள் அடியோடு அடித்து விரட்டப்பட்டு பாதிப்புக்குள்ளாகினர்.
6) 31 ஆகஸ்ட் 2013 கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் இரண்டு கிறிஸ்தவ குடும்பங்களை அடித்து துன்புறுத்தி இந்து தெய்வங்களை வணங்க சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள்
7) ஆகஸ்ட் 24 Ilkal Bagalakote பகுதியில் உள்ள ஷாலோம் சபை போதகர் சாம்சன் கடுமையாக தாக்கப்பட்டு மூக்கில், காதில் ரத்தத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
8) இதே பகுதியில் போதகர் பரம ஜோதி என்பாரும் தாக்கப்பட்டார்
9) Karwar, போதகர் Devu Gowli, மற்றும் மனைவி, ஒரு மாத கைக்குழந்தையை கிராமத்திற்கு முன் வரசெய்து கடுமையாக இந்து கட்சியை சேர்ந்தவர்கள் தாக்கி உள்ளனர். இதில் இவரின் மனைவி கடுமையாக பாதிக்கப்பட்டார். இருவரையும் கிறிஸ்துவை மறுதலிக்க வற்புருத்தினர். ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்து விட்டனர்..
10) உத்தர காண்டாவை சேர்ந்த மூன்று கிறிஸ்தவ வாலிபர்களை மதம் மாற்றுகிறார்கள் என்று சொல்லி போலியாக புகார் கொடுத்து கைது செய்ய வைத்திருக்கிறார்கள்
11) மத்திய பிரதேஷ் மாநிலத்தில் 5 வாலிப பெண் கிறிஸ்தவர்களை நாடு ரோட்டில் வைத்து அடித்துள்ளனர்.
இப்படி இன்னும் அடுக்கி கொண்டே போகலாம். தமிழ்நாட்டில் பல கிறிஸ்தவ வீடுகள் இன்றும் மிரட்டப்பட்டு உள்ளது. கிறிஸ்தவ சபைகள் கட்ட கூடாதபடி வழக்குகள் போடப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் நிலங்கள் வாங்கக்கூடாது என்றும் பல இந்து மதத்தலைவர்கள் கண்காணித்து வருகின்றனர். பல கிறிஸ்தவ சபைகள் இரவு கூட்டங்கள் நடத்தி தொந்தரவு செய்கின்றனர் என்று கூறி பொய்யான தகவல்கள் கொடுத்து போலீஸ் மூலம் எச்சர்க்கின்றனர். பல கிறிஸ்தவ குடும்பங்கள் வீடுகளில் சபை கூட்டம் நடத்த முடியாதபடி வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இப்படி கிறிஸ்தவர்களுகெதிரான வன்முறை பல மடங்கு தலை தூக்கி உள்ளது. பல வலைத்தளங்கள் இன்று கிறிஸ்தவ மார்க்கத்திற்கு எதிராக எழும்பி பல்வேறு வேலைகள் செய்கின்றன.
கிறிஸ்தவனே, உன் பங்கு என்ன.. சபைகளுக்குள் இன்னமும் சண்டை சச்சரவோடு திரிகிராயொ? என் சபை பெரியது, உன் சபை பெரியது என்று கணக்கு போட்டு கொண்டிருகிராயொ? உங்கள் சபையில் ஆவி இல்லை, அனலும் இல்லை என்று வசனம் பேசி திரிகிராயொ? மற்றவர்களை குறை சொல்லுவதை விட்டு விட்டு வேதாகமத்தை எடுத்து அதன் படி வாழ கற்று கொள்.
இன்று வீதிகளில் திரியும் இந்த கொடூர பிசாசு நாளைக்கு உன் இல்லத்திர்க்குள்ளும் வரும். கிறிஸ்தவன் என்று சொல்லும் எவன் வீட்டிற்க்கும் இந்த கொடூர தாக்குதல்கள் வரும்.
ஒரு கிறிஸ்தவன் தாக்கப்பட்டால் அவனோடு தோள்கொடுத்து நில். கூடி ஜெபி. உடனடியாக அந்த செய்தியை மற்ற கிறிஸ்தவர்களுக்கு சொல். மதவாதத்தை தூண்ட அல்ல.. முழங்களை முடக்க.. ஜெபிக்க ஜெபிக்க சாத்தான் ஓடிபோவான்.
நான் மகிழ வேண்டிய விஷயம்
எந்த ஆண்டிலும் இல்லாத வளர்ச்சி கிறிஸ்தவம் 2013ம் ஆண்டு கண்டிருக்கிறது. முக்கியமாக நடுத்தர குடும்பங்கள், வசதி படைத்தவர்கள், மற்றும் வாலிபர்கள் என்று பல விதங்களில் நம் கிறிஸ்தவம் வளர்ச்சி கண்டுள்ளது. 71 லட்சம் பேர் இந்திய தேசத்தில் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர் என்று ஓர் கணக்கெடுப்பு சொல்கிறது. மறைமுக கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் கூடி கொண்டே போகிறது.
இந்திய தேசம் உலக கிறிஸ்தவ எண்ணிக்கையில் இப்போது 8வது இடத்தை பிடித்திருக்கிறது. http://
2014ம் ஆண்டில் இருக்கிறோம். தொடர்ந்து ஜெபிப்போம். தேவன் பெரிய காரியங்களை செய்வார்.
இந்த பதிவு தொடர்ந்து update செய்யப்படும்.
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
No comments:
Post a Comment