Wednesday, December 18, 2013

எதற்காக 25ம் தேதி கிறிஸ்மஸ் கொண்டாட வேண்டும்????


உங்கள் அனைவருக்கும் எங்கள் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு கிறிஸ்தவனும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஓர் காரியம் "எதற்காக 25ம் தேதி கிறிஸ்மஸ் கொண்டாட வேண்டும்?" அதற்கு விடை காணும் வண்ணமாக இதை பதிந்துள்ளேன்.

கிறிஸ்மஸ்... கிறிஸ்தவர்கள் மத்தியில் சந்தோஷம், மகிழ்ச்சி, அன்பு பொங்கும் அழகு நாளாக இன்றும் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சி முதலில் கொண்டாட்டமாக ஆரம்பிக்கப்பட்டு பின் கிறிஸ்மஸ் மரம், அலங்காரங்கள், கிறிஸ்மஸ் தாத்தா, புதிய ஆடை அலங்காரங்கள், ஆனாதை குழந்தைகள் உபசரிப்பு என்று பல விதங்களில் வளர்ந்து விட்டது.

இந்த கிறிஸ்மஸ் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? யாரால்? என்ன தேதியில்? என்ற பல விஷயங்களை ஆராய்ந்து வரும் இந்த காலங்களில் நாம் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை இது.

கிறிஸ்மஸ் எப்படி உருவானது??

இந்த உண்மையை அறிந்து கொள்ளும் முன்னர் நாம் தெரிந்து கொள்ளும் முன்னர் இயேசு கிறிஸ்து பிறந்த கால நாட்களில் உலகம் முழுவதும் வித்தியாசமான காலண்டர்கள் இருந்தன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.. கி.பி 70ல் எருசலேம் தேவாலயம் ரோமர்களால் அழிக்கப்பட்ட பின்னர் கிறிஸ்தவம் முழுமையாக யூதமாரக்கத்திலிருந்து பிரிந்து தனியான ஒரு மார்க்கமாகியது. அதன்பின்னர் இயேசுக்கிறிஸ்துவின் மரணம் சம்பவித்த நாளைக் கிறிஸ்தவர்கள் கணிப்பிடத் தொடங்கினார்கள். அக்காலத்தில் வித்தியாசமான கலண்டர்கள் உபயோகத்தில் இருந்தமையால், கிழகத்திய சபைகள் ஏப்ரல் 6ம் திகதியையும் மேற்க்கத்திய சபைகள் மார்ச் 25ம் திகதியையும் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரித்த நாளாகக் கணித்தனர். பழைய ஏற்பாட்டுத் தீரக்கதரிசிகள், தாங்கள் கருவுற்ற அல்லது பிறந்த தினத்திலேயே மரித்தார்கள் என்னும் நம்பிக்கையின்படி இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரித்த நாளை அடிப்படையாகக் கொண்டு, கிழக்கத்திய சபைகளில் இயேசு கிறிஸ்து ஜனவரி 6ம் திகதி பிறந்தார் என்றும் மேற்கத்திய சபைகளில் அவர் டிசம்பர் 25ம் திகதி பிறந்தார் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதற்க்கு சரித்திர ஆதாரங்களை பாப்போம்.

வேதாகமத்தில் கிறிஸ்து பிறந்த நேரத்தையோ, நாளையோ, வருடத்தையோ குறிப்பிடவில்லை.. ஆனால் வேதாகமம் சில கால உண்மைகளை நமக்காக வைத்துள்ளது. லூக்கா 2:8 8. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

இதன் மூலம் அது ஓர் இளவேனிற்காலம் என்பதையும், குளிர் மாதமான டிசம்பர் அல்லது ஜனவரி என்பதையும் அறியலாம்... முதலாம் இரண்தாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த Irenaeus (c. 130–200) or Tertullian (c. 160–225) என்பவர்கள் கிறிஸ்மஸ் பற்றி எழுதவில்லை. Alexandria (c. 165–264) என்பவர் ரோமர்களில் காலத்தில் இருந்த பிறந்த நாள் பண்டிகைகள், மற்றும் பல விழாக்களை "பேகன்" என்ற கடவுளின் பண்டிகை என்று கூறி அனைத்து ரோம விழாக்களுக்கும் தடை விதித்தார். இதிலும் கிறிஸ்து பிறப்பு இடம் பெறவுல்லை. ஆதலால் இந்த காலத்திலும் கிறிஸ்து பிறந்த நாள் கொண்டாடி இருக்க முடியாது என்பது நிச்சயம். கிறிஸ்மஸ் பேகன் கடவுளின் விழா அல்ல என்பதையும் நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இப்போது இன்னொரு கோணத்தில் இருந்து ஆராய்வோம்.. நாம் வைத்திருக்கும் பரிசுத்த வேதாகமத்தில் நான்கு சுவிசேஷ பகுதிகளும் (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) கிறிஸ்துவின் மரித்ததை தெளிவாக எழுதி வைத்துள்ளனர்.. இதில் இருந்து பல உண்மைகளை நாம் உணரலாம்.. சுவிஷேசத்தில் பஸ்கா பண்டிகைக்கு முன் தேவன் சிலுவையில் அறையப்பட்டதை குறித்து எழுதுகிறார்.

மத்தேயு 26:2 இரண்டு நாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்
மத்தேயு 26:2 இரண்டு நாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்

இதனை அடிப்படையாக வைத்து இருவேறு நாட்கள் தேவன் பூமியில் அவதரித்த நாட்களாக ஏற்று கொள்ளப்பட்டது. நான் ஏற்க்கனவே குறிப்பிட்டுள்ளபடி அந்நாட்களில் இருவேறு நாட்க்காடிகள் இருந்த படியால் கிறிஸ்து பிறந்த நாட்கள் சில நாடுகளில் மாறுபடுகின்றன.. இன்றும் சில மதத்தினரும், நாட்டினரும் தங்கள் சொந்த நாட்க்காடிகளையே பயன்படுத்துகின்றனர்...

Egypt, Ethiopia, Eriteria, Russia, Georgia, Ukraine, Serbia, the Republic of Macedonia, and the Republic of Moldova போன்ற நாடுகள் Gregorian calendar நாட்க்காட்டி வழியில் January 7 ஐ கிறிஸ்து பிறந்த நாளாக கொண்டாடி வருகின்றனர். . கிழக்கு Orthodox Churches in Bulgaria, Greece, Romania, Antioch, Alexandria, Albania, Finland, and the Orthodox Church in America போன்றவைகள் டிசம்பர் 25ம் தேதியை ஜூலியன் நாட்க்காட்டி வழியில் ஏற்று கொண்டனர்.. இதற்கு காரணம் இருவேறு வித்தியாசமான நாட்க்காட்டிகளை பின்பற்றி தேதியை முடிவு செய்தனர். (http://en.wikipedia.org/wiki/Christmas)

கி.பி. 360களின் ஆதாரமொன்று அக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உரோமில் நிலைபெற்றிருந்ததைக் காட்டுகின்றன. ஆனால் கிழக்குத் திருச்சபை கிறிஸ்தவர்கள் குழந்தை இயேசுவைக் காண கிழக்கில் இருந்து ஞானிகள் வந்ததை கொண்டாடும் திருநாளின் (சனவரி 6) ஒரு அங்கமாக இருக்கிறது.

200 C.E. வாக்கில் Tertullian of Carthage என்பவர் நிசான் மாதம் 14ம் நாள் (பரிசுத்த பவுல் கூற்றுப்படி) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். இது ரோம நாட்டு சோலார் நாட்க்காட்டி படி மார்ச் மாதம் 25ம் தேதி. அக்காலங்களில் மனிதன் கருவில் உருவாவதும் மரிப்பதும் ஒரே நாள் என்று நம்பப்பட்டது. அதனால் மார்ச் 25 (கர்த்தர் சிலுவையில் அறையப்பட்ட நாள்) இயேசு கிறிஸ்து கருவில் ஜெனிபித்த நாளாக கருதப்பட்டது. அன்றில் இருந்து ஒன்பது மாதங்கள் கழித்து பார்த்தால் டிசம்பர் 25ம் தேதி வரும். இதுவும் ஓர் சாந்து.. நாம் கிறிஸ்மஸ் 25ம் தேதி கொண்டாடுவதற்கு.(Trinity (c. 399–419))

நான் மேலே குறிப்பிட்டுள்ளபடி இரண்டு வித்தியாசமான கால நாட்க்காடிகளை வைத்து இயேசு பிறப்பை குறித்தனர். கிரேக்க கால அட்டவணை படி ஏப்ரல் 6ம் தேதி இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக நம்புகின்றனர். அதனால் பல நாடுகளில் ஜனவரி 6ம் நாள் கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் அக்காலங்களில் ஒரே விதமான நம்பிக்கை உலகம் முழுவதும் இருந்ததை அறியலாம்.

டிசம்பர் 25 பேகன் சூரிய கடவுள் பிறந்த நாளாக அனுசரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அது பிறகு கிறிஸ்துமஸ் ஆகா மாற்றப்பட்டது என சொல்லப்படுகிறது. இதில் உண்மை இருக்க முடியாது. ஏன் என்றால் இக்கால அட்டவணையின் படி பேகன் சொறிய கடவுள் பிறந்த நாள் டிசம்பர் 21 அல்லது 22 ஆகத்தான் இருக்க முடியும். 25ந்து அல்ல.

இயேசு பிறந்த வருடமோ, நாளோ வேதாகமத்தில் குறிப்பிடவில்லை. ஆனால் மரபு வழியாக இதை நாம் நினைவு கூர்ந்து வருகிறோம். இதற்க்கு மூன்றாம் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ ஆராச்சியாளர்கள் இதனை தெளிவு படுத்தி உள்ளனர்.

இன்றும் பல கிறிஸ்தவ பிரிவுகள், சபைகள், விசுவாசிகள் கிறிஸ்மஸ் ஐ கொண்டாடுவதில்லை. அவர்களை குறை சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. கிறிஸ்து இந்த பூமியில் பிறந்தது உண்மை. நம்மோடு வாழ்வது உண்மை. இயேசு கிறிஸ்து நமக்காக வராவிட்டால் நாம் பரலோகவாசிகளை இருந்திருக்க முடியாது. இதன்று நமகொரு நம்பிக்கை கொடுத்ததே இயேசு கிறிஸ்துதான். அவரே தெய்வம். அவரை அல்லாமல் வேறு தெய்வம் இல்லை.

கிறிஸ்மஸ் பற்றி யாராவது கேள்வி கேட்டால் தைரியமாக சொல்லுங்கள். இது இயேசு இந்த பூமியில் பிறந்ததை நினைவு கூறத்தான் என்று. இந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடவேண்டிய ஓர் உன்னதமான நாள். நாம் இயேசுவை தெய்வமாக கொண்டாடுவோம்.

http://www.gty.org/resources/questions/QA68/why-do-we-celebrate-christmas-on-december-25
http://christianity.about.com/od/christmas/f/christmashistor.htm
http://www.whychristmas.com/customs/25th.shtml
http://www.biblicalarchaeology.org/daily/biblical-topics/new-testament/how-december-25-became-christmas/
http://billygraham.org/answer/why-do-we-celebrate-christmas-on-december-25-when-the-bible-doesnt-mention-the-date-of-christs-birth/
 
Many thanks to
 தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

No comments:

Post a Comment