Friday, September 26, 2014

கால்களுடன் வாழ்ந்த பாம்புகள் ( வேதாகம அறிவியல் - 02 )

நன்றி: HI CHRISTIANS
அன்பானவர்களே ஆதியில் பாம்புகள் கால்களுடன் வாழ்ந்தன என்பதையும் கடவுளின் சாபத்தாலேயே பாம்புகள் கால்கள் இன்றி போயின என்பதையும் வேதாகமத்தில் இருந்து அறியலாம். 
வேதாகமத்தை விமர்சனம் செய்பவர்கள் இக்கூற்றை கிண்டலாக விமர்சனம் செய்வது வழமை. முக்கியமாக இஸ்லாமிய அறிஞரான pj அவர்கள் எழுதிய “இதுதான் பைபிள்” என்ற புத்தகத்தில் இதைக்குறித்து எழுதி வேதாகமத்தை விமர்சித்துள்ளார். 

அவர் அப்புத்தகத்தில் எழுதுகையில் “ஏவாளை கெடுத்ததினால் தான் பாம்புகள் ஊர்ந்து செல்கின்றன என்றால் ஏவாளை கெடுப்பதற்கு முன்னால் கால்களால் அவை நடந்து சென்றனவா?” என்று புத்திசாலித்தனமான ஒரு கேள்வியை கேட்டுள்ளார். இன்று அவரது கேள்விக்கான பதில் கொடுக்கும் காலம் வந்துள்ளது. 

“மாலை மலர்” எனும் செய்தித் தளத்தில் வந்துள்ள செய்தியையும் அதன் தொடுப்பையும் தருகிறேன் வாசியுங்கள்.

/////கால்களுடன் வாழ்ந்த பாம்பின் எலும்புக்கூடு லெபனானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாம்புகள் ஊர்வன இனத்தை சேர்ந்தவை. அவைகளுக்கு கால்கள் கிடையாது. இதற்கு முன்பு கால்களுடன் பாம்புகள் இருந்ததற்கான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது.
பழங்காலத்தில் வாழ்ந்த அரிய உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் லெபனானில் ஒரு பாம்பின் எலும்பு கூட்டை கண்டெடுத்தனர்.   சுமார் 19 “இஞ்ச்” நீளமுள்ள அந்த பாம்பின் எலும்பு கூட்டில் கால்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.
இவை சுமார் 9 1/2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. லெபனானில் கண்டெடுக்கப்பட்ட பாம்பின் எலும்பு கூட்டில் சுமார் “1 இஞ்ச்” அளவுக்கு கால் எலும்புகள் இருந்தன. அதே நேரத்தில் பாம்பின் வயிற்றுப் பகுதியில் கால்கள் வளர்ந்து வந்ததற்கான அறிகுறிகளும் இருந்தன.அந்த எலும்புகள் “ 1/2 இஞ்ச்” அளவில் வளர்ந்திருந்தன.
இந்த வகை பாம்புகள் கால்கள் மூலம் நடந்து திரிந்ததால் நிலத்திலும், நீரிலும், பொந்துகளிலும் வாழ்ந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த வகை பாம்புகளின் கால்கள் காலப்போக்கில் படிப்படியாக மறைந்து அவை ஊர்வன இனத்தை சேர்ந்தவையாக மாறியிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.////
ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வேதாகமம் என்றும் பொய்ப்பதில்லை. இன்று பொய் என்று கூறப்படும் காரியங்கள் யாவுமே ஒருநாள் உண்மை என்று தேவனால் நீரூபிக்கப்படும். வேதாகமம் கூறிய பல விஞ்ஞான கருத்துகள் இப்படித்தான் முதலில் மறுக்கப்பட்டு பின்பு ஏற்றுக் கொள்ளப்படுவது வழமையானது.

இதைக்குறித்த விரிவான கட்டுரைகளை இனிவரும் நாட்களில் hichristians தளத்தில் எதிர் பாருங்கள்.

Thursday, September 25, 2014

குரங்கிலிருந்து வந்தவனா மனிதன்? ( வேதாகம அறிவியல் - 01 )

நன்றி HI CHRISTIANS
மனிதனை தேவனே படைத்தார் என வேதாகமம் கூறுகின்றது.

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.ஆதியாகமம்-2:7

ஆனால் விஞ்ஞானமோ குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்னம் பொய்யை கூறிவருகிறது.

மனிதக் குரங்கு என்று அழைக்கப்படும் குரங்குகினங்களுக்கும் மனிதனுக்கும் மற்ற விலங்கினங்களை விட சற்று அதிகமான உருவ ஒற்றுமை இருப்பதால் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பது சரியானதன்று. 

1.   ஜெர்மனியிலுள்ள நீண்டர் பள்ளத்தாக்கில் அகழ்வாராய்ச்சியின் போது 1856 இல் கண்டுபிடிக்கப்பட்ட சில எலும்புக் கூடுகளை மனிதனுக்கும் குரங்கிற்கும் இடையேயான ஒரு விலங்கினுடையவை என்று கூறி உலகெங்கும் பரபரப்பு உண்டாக்கினர்.
குரங்கு போன்ற தோற்றம் தரக்கூடியதாக அந்த எலும்புக் கூட்டை மாற்றம் செய்யும் வண்ணமாக தோல், முடி ஆகியவற்றைக் கற்பனையாக சித்தரித்து நீண்டர்தால் பெயர் சூட்டினர்.
அப்படி  நீண்டர்தால் மனிதன் என்று அழைக்கப்பட்டவரகள் சாதரண மனிதர்கள்தான் என்பது பின்னர் நிருபிக்கப்பட்டுவிட்டது. ஆனால், நீண்டர்தால் மனிதனைப் பற்றி இன்றும் பாடசாலைகளில் கற்றுத்தருகின்றனர். இவ்வாறு உண்மையை திசை திருப்பவது சரியோ?
ஜாவா, சீனா ஆகிய இடங்களில் மனித எலும்புக்கூடுகள் அருகில் குரங்குகளின் எலும்புக் கூடுகளைக் கண்டுபிடித்தனர். உடனடியாக தங்களுக்கு ஆதாரம் இருப்பதாக அவர்கள் கூறினர். ஆனால் அந்தக் குரங்குகளின் தலை எலும்புகள் உடைக்கப்பட்டிருந்தன. குரங்குகளின் மூளையை விரும்பி உண்ணும் வழக்கம் அங்கு இருந்ததால்தான் இவ்வாறு இருந்தது என்பது பின்னர் தெரிய வந்தது. இவ்வாறு உண்ணும் வழக்கம் இந்நாடுகளில் இன்றும் உள்ளது.
மனிதனின் மட்டையோட்டுடன் குரங்கின் கீழ்தாடையில் மாற்றங்கள் செய்து பொருத்தி பில்ட்டவுன் மனிதன் என்று பொய்யாகக் கூறினார் சார்லஸ் டாசன் என்பவர். இவரது பொய் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இதுவரை குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட நிலையிலான விலங்கின் எலும்புக் கூடு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
2. குரங்கு மற்றும் ஏனைய விலங்குள் ஆகியவை குட்டிகளுக்கு கொடுக்கும் பாலையும் மனிதப் பாலையும் சோதித்து பார்த்ததில்  மனிதப்பாலுக்கு மிகவும் ஒத்திருப்பது கழுதையின் பால் என்பது தெரிகிறது. குரங்கின் பாலல்ல.
3.   இரத்தத்தில் இருக்கும் ஒற்றுமையைக் கவனித்தால் புலியின் இரத்தம் திமிங்கிலத்தின் இரத்தத்துடனும், கிளியின் இரத்தம் தீக்கோழியின் இரத்தத்துடனும் ஒத்திருக்கின்றன என்பது உண்மை. இவை ஒன்றிலிருந்து மற்றறொன்று வந்தது என்று கூறுவது சரியா?
மனித இரத்தத்தின் வீத எடைமானம் (Specitic Gravity) 1059.
பன்றிக்கு 1060.
முயலுக்கு 1060.
தவளைக்கு 1055-1056.
பாம்பிற்கு 1055.
குரங்கிற்கு 1054.
மனிதனுக்கும் குரங்கிற்கும் உள்ள உறவு எங்கே? பன்றியும் முயலுமல்லவா மனிதனின் அருகாமையில் உள்ளன. 
4. மனிதனுக்கு இருப்பது போன்று தந்தை என்ற பொறுப்பு குரங்கினங்களில் இல்லை. மற்ற விலங்குகளில் நரி (GoldenFox) என்ற சில விலங்குகளிலும் புறா, காகம் போன்ற பறவைகளிலும் உண்டு.
5.  மனிதனைப் போன்று இல்லாமல் குரங்குகள் சில குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே இனச்சேர்க்கையுடையவை. 
  
6.     மனிதனின் மரபணுவிற்குக் (Gene) குரங்கின் மரபணுவிடம் இருக்கும் ஒற்றுமையானது, நாயின் மரபணுவுடனும் இருக்கின்றது என்று 2000-2001 இல் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் குரங்கின் ஒற்றுமையைப் பற்றி மட்டும் மீண்டும் மீண்டும் கூறுவது ஏன்?
---------------------------------------------------------------------------------------------------------------------------------வாழ்வியல் விளக்க வேதாகமம்.

மண்ணான மனிதன்

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார் மனுஷன் ஜீவாத்துமாவானான்.(ஆதி 2.7)
எல்லா மாம்சமும் ஒரே விதமான மாம்சமல்ல. மனுஷனுடைய மாம்சம் வேறே மிருகங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே (1கொரி 15.19)

மனிதனை கடவுள் மண்ணினாலேயா படைத்தைார் என்பதை அறிய ஆராய்ந்த போது இன்று மண்ணிலிருந்து கிடைக்கும் கனியவளங்களுடன் மனித உடலில் சம்பந்தம் வைத்திருக்கிறதை அறிய முடிகிறது.

உலகமெங்குமுள்ள மனிதர்கள் ஏதாவது ஓரு மண்ணின் நிறத்தில்தான் இருக்கின்றனர். (பிரௌன்)(Brown) மனித சரீரத்தின் முக்கிய மூலகங்களான நைட்ரஜன், கார்பன், ஆக்சிஜன், கால்சியம், தண்ணீர் போன்றவை மண்ணிலும் இருக்கிறது என்பதை விஞ்ஞான உலகம் கண்டுபிடித்த உண்மை. பரிசுத்த வேதாகமத்தில் காணப்படும் வார்த்தைகள் கட்டுக்கதைகள் அல்ல.

1.            1.   துப்பாக்கியில் ஒரு முறை சுடுவதற்கு பயன்படுத்தும் அளவிலான கரி   மருந்து.
2.      ஏழு துண்டு சோப்பு செய்யப் போதுமான கொழுப்பு
3.      ஒரு பெரிய ஆணி செய்யப் போதுமான இரும்பு
4.      ஒரு நாயின் மேலுள்ள பேன்களைப் போக்க போதுமான கந்தகம்
5.      ஒரு சிறு கோழிக் கூட்டை வெள்ளையடிக்க போதுமான சுண்ணாம்பு
6.      வயிற்றுக் கோளாற்றைக் கண்டுபிடிப்பதற்கு போதுமான உப்பு
7.      2.200 தீக்குச்சிகளைச் செய்யப் போதுமான வெடிமருந்து.

இவ்வளவு கனிப்பொருள்கள் மனித உடலில் இருப்பதை பின்னாளில் சார்லஸ் H மேயர் எனும் மருத்துவ நிபுணர் விஞ்ஞான வாயிலாக கண்டுபிடித்தார்.

வேதாகமம் தேவனுடைய புத்தகம் என்பதை மனிதன் அறிந்து கொள்ளும்படி வேதத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் வைத்துவிட்டுப்போன உறவைப் பற்றி எண்ணிப் பார்ப்பதற்கு எவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது.

Wednesday, September 24, 2014

நன்றியுள்ள வாழ்க்கை

வென்ற பிறகும் ஜெபம் செய்
தோல்வி என்றாலும் துதி செய்

வெற்றியில் மட்டுமல்லதோல்வியிலும் நன்றியோடு துதிக்க முடியும் என்று சூளுரைத்த பிரேசில் நாட்டு வீரர்களை தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்...

முயல்பவனுக்கு முதன்மை முக்கியமல்ல. நடந்து முடிந்த உலக கோப்பை போட்டியில் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியை பெறாமல் அரை இறுதிக்குள் நுழைந்தது பிரேசில் அணி. மிக முக்கிய ஆட்டக்காரர்கள் சிலர் கால் இறுதியில் அடிபட்டும், மற்றும் சில காரணங்களால் அரை இறுதியில் பங்கு கொள்ள முடியாமல் போனது. கால் இறுதியில் பங்கு கொண்ட பிரேசில் வீரரும், விசுவாசியுமான நெய்மருக்கு அடிபட்டு படுத்த படுக்கையானார். ஆதலால் மிக முக்கிய வீரர்கள் இல்லாமல் அரை இறுதியில் பங்கு கொண்ட பிரேசில் அணி வீரர்கள் நினைத்ததை விட மோசமாக தோல்வி அடைந்தனர்.

உலகமே ஸ்தம்பித்து போன அந்த நேரத்திலும் மனதை தளரவிடாமல் சில வீரர்கள் மைதானத்தில் முழங்கால் இட்டு தேவன் கொடுத்த அரை இறுதி வாய்ப்பிற்காக நன்றி செலுத்தினர். வெற்றி பெற்ற பொது "நன்றி ஏசுவே" என்று முழங்கியவர்கள் தோல்வி அடைந்த போது தேவனுக்கு "நன்றி செலுத்தினது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது..

விசுவாசிக்கிறவன் பதறான். உண்மையான விசுவாசிக்கு எப்போதும் ஓர் அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு. என்ன நடந்தாலும் இயேசுவின் அன்பை விட்டு அவனை பிரிப்பது கடினம். உலக பிரகரான வெற்றி தோல்விகளை சாதாரணமாக எடுத்து கொள்ள நமக்கு சாதாரண அறிவு இருந்தாலே போதும். இது இருக்கும் ஒவ்வொருவரும் இயேசு என்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறாமல், தேவன் கொடுத்த வாய்ப்பிற்காக நன்றி செலுத்துவர்.

இன்றைய கிறிஸ்தவம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். 2 தீமோத்தேயு அதிகாரத்தில் பவுல் சொன்னது போல நல்ல போராட்டத்தை போராடு. விசுவாசத்தை காத்துகொள் என்றது பிரகாரமாக. நல்ல போராட்டத்தை போராடுவோம். வெற்றி தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் மீண்டும் முயற்சிகளை விட்டுவிடாமல் இருப்போம்.

இந்த ஆட்டத்தை பற்றி டேவிட் என்ற நட்சத்திர பிரேசில் வீரர் கூறும் போது "“I believe that everything in life belongs to God and he has a clear plan for us if we follow him" என்று கூறினார். அதாவது "நமது வாழ்வு ஏசுவுக்கு சொந்தமானது, அவரை பின்பற்றுவோருக்கு அவர் தெளிந்த திட்டத்தை வைத்திருக்கிறார்"

நாம் நமது வாழ்வில் நடக்கும் பல சறுக்கலில் இதே போல கூற முடியுமா?? ஆசீர்வாதத்திற்க்காக மட்டும் இயேசுவின் பின்னே ஓடாமல் அவர் தெய்வம் என்கிற அந்த தன்மையை மனதில் எந்தியவர்களாய் அவரை தொடர்வோம்.

பிலிப்பியர் 4;6. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். 7. அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்

தாழ்ந்தாலும் தளராமல்
எழுவது தான் வீரனுக்கு அழகு
வீழ்ந்தாலும் எழுவது தான்
வெற்றிக்கு அழகு

கர்த்தரை நம்புபவன்
தோல்வியை நம்பமாட்டான்
தோல்வியில் துவளுபவன்
கர்த்தரை நம்பமாட்டான்

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

அம்மையார் சாராள் நவ்ரோஜி

" அம்மையார் சாராள் நவ்ரோஜி "
_______________________

அம்மையார் சாராள் நவ்ரோஜி ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். இவர் தனது பெற்றோருக்கு கடைசி பிள்ளை. அவருடைய தந்தை இசை சொல்லி கொடுக்கும் ஆசிரியராக லூத்தரன் குருகுல் கல்லூரியில் பணி புரிந்தார். அவருடைய தாயார் பள்ளியில் ஆசிரியையாக பணியில் இருந்தார். அம்மையார் சாராள் நவ்ரோஜி 10 வயதாக இறுக்கும் பொது அவருடைய தந்தை தவறிவிட்டார். அம்மையார் சாராள் நவ்ரோஜி தன்னுடைய 15வது வயதில் கர்த்தரை சொந்த ரட்சகராக ஏற்று கொண்டார். 1956களில் அவர் சிலோன் பெந்தேகோஸ்தே மிஷனில் உறுப்பினர் ஆனார். அந்த கால கட்டத்தில் அவர் மெட்ராஸ் மின்சார வாரியத்தில் பணியில் இருந்தார்.

1959களில் கர்த்தரிடமிருந்து ஊழியத்திற்கு அழைப்பு வந்தது. வேலையை உதறிவிட்டு ஒரு சகோதிரியாக இணைந்தார். வீட்டில் எல்லோரும் இவருடைய செயலை கடுமையாக எதிர்த்தனர். நான் கர்த்தர்ருக்காக என் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்திருக்கிறேன். எல்லாம் கர்த்தர் பார்த்துக் கொள்வார் என்று சொல்லி வீட்டில் யாருக்கும் சொல்லாமல் வேலையை விட்டு விட்டு, ஊழியத்திற்காக சிலோன் போக இரயில் ஏறிவிட்டார்கள். இவங்க கடைசிப் பிள்ளை என்பதால் அம்மாவிற்கு ரொம்ப செல்லமாம், வழியனுப்ப வந்த அம்மா பயங்கரமாக அழ, இவங்களும் அவங்களைப் பார்த்து அழுது கொண்டே போக, அப்போழுது கர்த்தரின் அன்பை மையபடுத்தி எழுதப்பட்ட பாடல் இது.

“ என்னை மறவா யேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும் ”

ஒரு முறை ஸ்டுடியோவில் பாடல் பதிவு செய்து கொண்டிருக்கையில், ஒரு சினிமா இசை இயக்குனர், உங்க குரலும் பாடலும் நன்றாக இருக்கிறது. சினிமாவில் பாடுங்கள் என்று கேட்க, மாட்டேன் என்று சொல்லி விட்டார்களாம். அந்த சூழ்நிலையில், கர்த்தரை தவிர யாரையும் பாட மாட்டேன் என்று சொல்லி பாடிய பாடல் தான் இது.

“ உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப் பாடுவேன் ஏசையா ”

இவர் பல அருமையான பாடல்களை இயற்றியுள்ளார்.

ஊழியத்தில் தன்னை ஒப்பு கொடுத்ததினால் இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

சுவிசேஷ துண்டு பிரதி - மிகப்பெரிய ஊழியம்

ஒரு சுவிசேஷ துண்டு பிரதி மாபெரும் எழுப்புதலை உண்டாக்கியது. ஒன்பது மிஷனெரிகளை உலகிற்கு தர காரணமாயிருந்தது. தமிழ்நாட்டிலும் சிறந்த மருத்துவ பணி மூலம் சரீர சுகம் மட்டுமல்லாமல், ஆத்மீக சுகத்தையும பெற செய்தது. அது என்ன துண்டு பிரதி, யார் அதை படித்தார்? அதன்; மூலம் தமிழ்நாட்டில் மருத்துவ பணியா?
.
ஆம், ஒரு நாள் ஜான் ஸ்கடர் என்பவர் தனது நண்பரை பார்க்க ஓரிடத்தில் காத்திருந்தார். அப்போதுதான் அவர் கண்களில்பட்டது, அந்த துண்டு பிரதி! அதின்தலைப்பு 'உலகத்தின் மனந்திரும்புதல்'. கண்டதும் கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தார். தன் வாழ்வை இயேசுகிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார். பின்நாட்களில் தன்னை ஊழியத்திற்கு அர்ப்பணித்தார்;. அவர் தனது ஏழு மகன்களையும் இரண்டு மகள்களையும் மிஷனெரி பணிக்கு அர்ப்பணித்தார். அவரது குடும்பத்திலுள்ள 43 பேர்களும் கிறிஸ்தவ பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்களே!
.
ஜான் ஸ்கடரின் பேத்திதான் நம் வேலூரில் C.M.C. மருத்துவமனையை நிறுவி மருத்துவ பணியோடு, சுவிசேஷ பணியையும் செய்த ஐடா ஸ்கடர் அம்மையார் ஆவார். தலைமுறை தலைமுறையாய் ஒரு குடும்பம் கிறிஸ்துவின் பணியை செய்து வருமாயின் அது சரித்திரத்திலேயே சிறந்த உதாரணம் தானே! ஒரு கைபிரதி ஒருவரை மாற்றியதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் இரட்சிப்பின் பாதையில் கடந்து வந்துள்ளனர்.
.
தேவன் நமக்கு கொடுத்துள்ள கட்டளை 'நீங்கள் உலகமெங்கும் போய் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள' என்பதே. அப்படியென்றால் முழு நேர ஊழியர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு விசுவாசிக்கும் சுவிசேஷம் அறிவிக்கும் கடமையுள்ளது.

அதிக ஐசுவரியமுளள்வர் யார்?

உலக பிரசித்தி பெற்ற தேவ ஊழியரான பில்லி கிரகாம் தனது சுய வரலாற்று புத்தகத்தில் ஒர நிகழ்ச்சியை பின்வருமாறு எழுதியிருந்தார்: “உலகிலுள்ள மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக இருந்த ஒரு மனிதர் தனது ஆடம்பரமான பங்களாவிற்கு என்னையும் என் மனைவி ரூத்தையும் மதிய உணவிற்கு அழைத்திருந்தார். எழுபத்தைந்து வயதான அவர் நாங்கள் இருந்த நேரம் முழுவதும் கண்ணீர் சிந்த கூடிய நிலையிலேயே இருந்தார். ‘உலகிலுள்ள அனைவரைக் காட்டிலும் மிகுந்த வேதனையுள்ளவனாக நான் இருக்கிறேன், உலகில் நான் எங்கு எந்த இடத்திற்கு போக வேண்டுமென்று விரும்பினாலும் என்னால் அங்கு செல்ல முடியும். எனக்கு சொந்தமாக ஆகாய விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களும் இருக்கின்றன. எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய எல்லா காரியங்களும் என்னிடம் உள்ளன. ஆனால் நான் எப்போதும் நரகத்திலிருப்பதை போலவே உணர்கிறேன்’ என்றார். நாங்கள் அவருக்காக ஜெபித்து விட்டு கடந்து வந்தோம்.
.
அன்று மதியம் அப்பகுதியிலுள்ள 70 வயது நிரம்பிய போதகர் ஒருவரை சந்தித்தோம். அவர் உற்சாகத்தினாலும், கிறிஸ்துவின் மேலும், பிறரின் மேலும் கொண்டிருந்த அன்பினாலும் நிறைந்திருந்தார். அவர், ‘என்னுடைய பெயரில் இரண்டு பவுண் நாணயங்கள் கூட இல்லை. ஆனால் நான் மிகுந்த மகிழ்ச்சியோடிருக்கிறேன்’ என்றார். அவர் எங்களை விட்டுசென்ற பிறகு, ‘இவ்விருவரில் அதிக ஐசுவரியமுளள்வர் யார்’ என்று நான் ரூத்திடம் கேட்டேன். எங்களிருவருக்கும் அதற்குரிய விடை தெரியும்” என்று எழுதியிருந்தார்

Tuesday, September 23, 2014

பேராயர் ஜேம்ஸ் ஹானிங்டன்

இரத்த சாட்சி – பேராயர் ஜேம்ஸ் ஹானிங்டன் (1847-1885) ஜேம்ஸ் ஹானிங்டன் (JAMES HANNINGTON) இங்கிலாந்தில் சுசெக்ஸ் (SUSSEX) என்னும் பகுதியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். படிப்பை முடித்து ஒரு வங்கியில் பணியாளராக இருந்தார். பின்னர் இறையியலைக் கற்றுகொள்வதில் ஆர்வமுள்ளவராக இறையியல் கல்லூரியில் சேர்ந்து படித்தார். பின்னர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிவிக்கும் நற்செய்தி ஊழியத்தில் தன்னை முற்றிலுமாக இணைத்துக் கொண்டார். 1875 ல் ஹங்ட்பையர் என்ற அவரது சொந்த ஊரிலே தூய ஜார்ஜ் ஆலயத்தின் பொறுப்பாளராக ஊழியம் செய்தார். பின்னர் இங்கிலாந்து நாட்டின் சர்ச் மிஷனரி சொசைட்டியில் சேர்ந்து, அதின்மூலம் ஆப்ரிக்காவிலுள்ள ஜாம்பியா நாட்டிற்கு மிஷனரியாக சென்றார்.

அந்த நாட்டை ஐரோப்பியர்கள் அடிமை வியாபார மைய்யமாக வைத்திருந்தனர். மேலும் அந்தநாடு மிகக் கொடூரமும், பாலியல் நோய்கள், மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களின் பிறப்பிடமாகவும் இருந்தது. அங்கு ஊழியம் செய்பவர்களுக்கு பல இன்னல்கள் இருந்ததன. இந்த நிலையில் ஜாம்பியா சென்ற ஜேம்ஸ் ஹானிங்டன் வியாதிப்பட்டதால் இங்கிலாந்து திரும்பும் நிலையாயிற்று. 1883 ம் ஆண்டு ஜேம்ஸ் ஹானிங்டன், கேன்டர்பரி ஆர்ச் பிஷப்பாக (ARCH BISHOP OF CANTERBURY) உயர்த்தப்பட்டார். பின்னர் அங்கிருந்து உகண்டா தேசத்தின் மிஷனரி பணித்தளதிற்க்கு பொறுப்பாளராக அனுப்பப்பட்டார். அங்கு சென்று விக்டோரியா நயன்சா என்ற புகழ் பெற்ற அருவிக்கு அருகாமையில் புதிய பணித்தளத்தை தொடங்கினார். உள்ளூர்வாசிகளுக்கு பள்ளிகளை நிறுவினார். மக்கள் மத்தியில் ஜேம்ஸ் ஹானிங்டனின் செல்வாக்கு உயர ஆரம்பித்தது. கிறிஸ்துவின் நற்செய்தியும் பரவ ஆரம்பித்தது. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் மக்கள் பெருகினார்கள். அவர் அணைத்து மக்கள் மீது பாரபட்சமின்றி அன்பைக் காட்டினார். சிறியோர் முதல் பெரியோர் வரை அவரை நேசித்தார்கள். இவரது வளர்ச்சியில் பொறாமை கொண்ட சிற்றரசன் வாங்கா (MWANCA) பல பொய்யான குற்றங்களை வனைந்து அவரை சிறையில் அடைத்தான். சிறையில் அடைப்பதற்கு அந்த சிற்றரசன் தெரிந்து கொண்ட இடம் ஒரு அசுத்தமான குடிசை. அவ்விடம் விஷப் பூசிகளினாலும், எலிகளாலும் நிறைந்து இருந்தது. பேராயர் ஒரு வாரத்திற்குள்ளாகவே குடிசையிலே வியாதிப்பட்டு இறந்து விடுவார் என அச்சிற்றரசன் எண்ணினான். ஆனால் பேராயர் ஜேம்ஸ் ஹானிங்டனோ மரிக்கவில்லை. இந்த அற்புதத்தை பொறுத்துக் கொள்ள இயலாத அச்சிற்றரசன் அவரை வெளியேற்றி கொலை செய்ய உத்தரவிட்டான். 1885 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ம் நாள், பேராயர் ஜேம்ஸ் ஹானிங்டனை பொது மேடையில் நிறுத்தி ஈட்டியால் குத்தி அவரைக் கொன்றனர். அவர் குத்தப்படும் போது “உகாண்டாவில் கிறிஸ்தவம் பிரவேசிக்கும் வழியை என் இரத்தத்தால் விலைக்கு வாங்கி விட்டேன். கிறிஸ்தவம் இனி எளிதில் உகாண்டா தேசத்தில் வளரும் என்று சிற்றரசன் வாங்காவிற்க்கு சொல்லுங்கள்” என்று தனது மரண வேளையில் சொன்னார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள ஆங்கலிக்கன் திருச்சபைகளை வெகுவாய் உலுக்கிற்று. அவருடைய மரணத்தை தொடர்ந்து இங்கிலாந்தில் மிஷனரி வாஞ்சையுள்ள அநேகர் எழுந்தார்கள். அவர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் உகாண்டாவிற்கு செல்ல மனப்பூர்வமாக முன் வந்தார்கள். அவர்களிலும் அநேகர் ஜேம்ஸ் ஹானிங்டன் போலவே இரத்த சாட்சியாக மரித்தார்கள்.

ஜேம்ஸ் ஹானிங்டன் தரிசனத்தில் கண்டது போலவே இன்று உகாண்டாவின் 90% மக்கள் கிறிஸ்தவர்களாக மாறியிருகின்றார்கள். மிஷனரிகள் புதைக்கபடுவதில்லை, விதைக்கபடுகின்றார்கள் என்ற கூற்று எவ்வளவு பெரிய உண்மை. உகாண்டாவில் மிஷனரிகள் சிந்திய இரத்தம் வீன்போகவிலை. ஜேம்ஸ் ஹானிங்டனின் தரிசனமும் விருதாய் மாறிவிடவில்லை. இருண்ட கண்டத்தினுள் மெய்யான ஒளியாம் இயேசு இன்றளவும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார். இதை வாசிக்கின்ற நீங்கள் இயேசுவுக்காய் பிரகாசிக்க ஆயத்தமாய் இருக்கின்றீர்களா? சிந்திப்போம் உடனடியாய், செயல்படுவோம் இயேசுவிக்காய்.

Thursday, September 18, 2014

அறிய புதை பொருள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள்

பரிசுத்த வேதாகமத்தின் வசனங்களை மெய்ப்பிக்கும் ஆதாரம் – பரலோக மன்னா.
இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம்
சமீபத்தில் எகிப்த்தில் கண்டெடுக்கப்பட்ட (கிறிஸ்துவுக்கு முன் 574 மற்றும் 660 ஆண்டு) முக்கியமான பண்டைய கால ஆதாரம் ஒன்று இன்று உலகையே கலக்கி வருகிறது. இதில் முக்கியமாக பரிசுத்த வேதாகமத்தில் கடவுளின் வார்த்தை இல்லை என்று கூறியவர்கள் வாயடைத்து போகும் ஒர் அறிய ஆதாரம் ஒன்று கிடைத்துள்ளது. இதை பறின தொகுப்பு இது

பரிசுத்தர் இயேசு கிறிஸ்து தான் தம்மை நம்முடைய பாவங்களுக்கு மரிக்கும் முன்னர் தன் சீடர்களோடு கடைசி பந்தியில் இருந்தார். இதில் இயேசு கிறிஸ்து தன்னை இரத்தமாகவும், திராட்சை இரசமாகவும் உலகிற்கு தெரிவித்தார். இயேசு கிறிஸ்து மரிக்கவே இல்லை என்று கூரிவரும் பல மார்க்கத்தவரும் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

சுமார் 1500 வருடங்கலுக்கு முன்பாவே கண்டுபிடிக்கப்பட்டது. எகிப்த்தில் உள்ள அருங்கருட்சியகத்தில் இதை வைத்துள்ளனர். இதை ஆராய்ச்சி செய்து சமீபத்தில் தான் இதில் உள்ள வார்த்தையை உறுதி செய்துள்ளனர்.

இதை ஆராய்ச்சி செய்தவர்கள் “இது எதிர்பாரமல் நமக்கு கிடைத்த ஒர் முக்கியமான ஆதாரம். இதில் மிகமுக்கியமான முதன்மையான பண்டைய கால ஆதாரங்களாகும். இதில் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள இயேசு கிறிஸ்துவின் பந்தி (LAST SUPPER OF JESUS CHRIST) மற்றும் பழைய ஏற்பாட்டில் உள்ள மன்னா (MANNA) ஆகிய இரண்டும் ஒன்றுபடுத்தி கூறப்பட்டுள்ளது.
இது பழைய எற்பாட்டில் உள்ள “யாவே” என்ற தேவனின் உயர்ந்த நாமமும், புதிய எற்பாட்டில் உள்ள “இயேசு கிறிஸ்து” என்ற நாமமும் ஒன்றே என்பதும், திரியேக தேவனின் நாமமும் உண்மையே என்பதும் இதன் மூலம் மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது. ஆமேன்.
இந்த ஆதாரங்களில் முக்கியமாக சங்கீதம் 78:23-24 மற்றும் மத்தேயு 26:28-30 ஆகிய வசனங்களின் தொகுப்பு குறிப்பிடப்பட்டுள்ளது (Psalm 78:23-24 and Matthew 26:28-30).
பரலோக மன்னா என்ற தலைப்பில் உள்ள இந்த ஆதாரத்தின் சில வசனங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு
The translated text on the papyrus reads:
"Fear you all who rule over the earth.
Know you nations and peoples that Christ is our God
For he spoke and they came to being, he commanded and they were created; he put everything under our feet and delivered us from the wish of our enemies.
Our God prepared a sacred table in the desert for the people and gave manna of the new covenant to eat, the Lord's immortal body and the blood of Christ poured for us in remission of sins."
இதின் தமிழ் மொழிபெயர்ப்பு
“பூமியின் ராஜாக்களே, பயப்படுங்கள். ராஜியங்களே, பூமியின் குடிகளே கர்த்தரே தெய்வம் என்று அறிந்து கொள்ளுங்கள்.
அவர் பேச அவைகள் உருவானது, அவர் கட்டளையிட அவைகள் அனைத்தும் படைக்கப்பட்டது; அவர் அவர்களை நமக்கு கீழ்ப்படுத்தி நம்மை எதிரிகளிடமிருந்து விடுவிக்கிறார்.
நம்முடைய தேவன் வனாந்திரத்தில் நமக்கு ஒர் பரிசுத்தமான பந்தியை ஆயத்தப்படுத்தி, மன்னா என்ற உடன்படிக்கையை உண்ண கொடுத்து, தேவனுடையை சரீரமும், அவருடைய இரத்தமும் நமக்கு நம்முடைய பாவங்கள் நீக்க கொடுப்பார்.”

மேலே கூரபபட்டுள்ள வாக்கியங்களை வேத வசனங்களோடு ஒப்பிட்டு பாருங்கள். இயேசுவே “யாவே” என்று தெரியும். சங்கீத புஸ்தகத்தின் காலத்தில் யாரும் பரம தகப்பனை பார்த்தது கிடையாது. இது இயேசு பிறப்பதற்க்கு பல நூற்றுக்கனக்கான வருடங்கலுக்கு முன் எழுதப்பட்டது என்று நமக்கு தெரியும். ஆனால் இந்த வேத வசனங்கல் மத்தேயு போன்ற சுவிசேஷ புத்தகங்க்ளில் உள்ளது எப்படி ஒத்து போகும். யார் இதை எழுத கற்றுகொடுத்திருப்பார்கள்? பரிசுத்த ஆவியானவரே... ஆமென்..

இதை தாங்கியுள்ள இந்த படிவங்கள் சுமார் 3/10.5 செண்டிமீட்டர் அலவு கொண்டதாகும். இந்த வசனங்கள் ஒர் அக்காலங்க்ளில் உள்ள வரி வசூல் ரசீது ஒன்றின் பின் எழுதப்பட்டதாக உள்ளது. எகிப்த்து தேசத்தின் பண்டைய கால நகரத்தை தாங்கியிருந்த Hermoupolis என்ற நாட்டின் அருகில் உள்ள Tertembuthis கிராமத்தில் கண்டேடுக்கப்பட்டுள்ளது.
இது கிறிஸ்துவுக்கு முன் 574 மற்றும் 660 ஆண்டுகளில் எழுதப்பட்டிருக்கலாம். இதை எழுதியவர் எழுத்து பிழையோடு எழுதியிருப்பதை வைத்து பார்க்கும் போது எழுதியவர் பார்த்து எழுதாமல் மனதில் இருந்து கேட்டதை வைத்து எழுதி இருக்கலாம் என்று கணித்துள்ளனர்.
இவை அக்கால கிறிஸ்தவர்கள் கழுத்தில் சுருலாக எழுதி ஒர் டாலரை போன்று அணிந்துள்ளனர். (research institute, reveals that Christians adopted an ancient Egyptian practice of wearing such charms to ward off danger). இது அக்கால எகிப்த்தியரின் வழக்கம். ஆபத்து காலத்தில் இப்படிபட்ட கர்த்தரின் வார்த்தைகள் நம்மை காக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை. இதை தான் இக்கால கிறிஸ்தவர்களும் வழக்கமாக கொண்டு கழுத்தில் சிலுவை, மாதாவின் உருவம் என்று அணிந்துள்ளனர். கழுத்தில் சிலுவையை அணிவது இன்று நெற்று வந்தது அல்ல என்பது இதன் மூலம் நிருபனமாகிறது. இது பாரம்பரிய கிறிஸ்து பிறப்பதர்க்கு முன்பே உள்ள நடைமுறை.
நீங்கள் கழுத்தில் சிலுவை அணியும் பழக்கம் உண்டா?
இஸ்ரேலர்கலை ஆதி கால எகிப்த்திய பழக்கத்தை தேவன் பின்பற்ற சொன்னது நினைவு இருக்கிரதா? யாத்திராகமம் 13:6 மற்றும் 9 ஐ படித்து பாருங்கள். கர்த்தரின் வார்த்தை வாயிலேயும், அடையாளமாகவும் இருக்ககடவது என்று “யாவே” கூறியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக. நான் இந்த அடையாளாங்கள் மூலமாக மட்டுமே இயேசுவை நம்புகிறேன் என்று தவரான எண்ணம் கொள்ள வேண்டாம். நான் இப்படிபட்ட ஆதாரங்களை ஆதரிக்கிறேன். இது வேதாகமத்தில் உள்ள வார்த்தைகளை மறுப்போரை நிச்சயம் யோசிக்க வைக்கும். இயேசு கிறிஸ்து பிறந்தது உண்மை என்று எல்லா மதத்தினரும், நாத்திகர்களும் எற்று கொள்கின்றனர். ஆனால் அவர் நம் பாவங்கலுக்காக மரித்தார், இரத்தம் சிந்தினார், மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பதில் மட்டும் சந்தேகிக்கின்றனர்.

இந்த இயேசு உங்களையும் என்னையும் போன்று பிறக்கவில்லை. இவர் பிறப்பே ஒர் அதிசயம். இவருடைய வாழ்க்கை பல ஆயிர வருடங்களுக்கு முன் முன்னறிவிக்கப்பட்டது. இது தேவ ராஜியத்தின் திட்டம். இதில் தான் சாத்தான் பல்வேரு குழப்பங்கலை உண்டு பண்ணி இன்று மக்களை இந்த பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற விடாமல் தடை செய்கிறான். பரலோகம் செல்ல பாவ மன்னிப்பின் நிச்சயத்தை கண்டிப்பாக பெற வேண்டும். இது இல்லாமல் ஒருவரும் பரலோக ராஜியத்தில் பிரவேசிக்க முடியாது.
நாம் விசுவாசத்தின் பிள்ளைகள். தேவனை ஆசீர்வாதத்திற்க்காகவோ, அடையாலங்களினாலோ நாம் பின்பற்ற வில்லை. அப்படி தேவன் நம்மை அழைக்கவில்லை. இன்றும் மனிதனோடு இடைபடும் தெய்வம் இயெசு கிறிஸ்து மாத்திரமே. “என்னை நோக்கி கூப்பிடு, அப்போது மறு உத்தரவு அருளுவேன்” என்று கூரிய தெய்வம் வாக்கு மாறாதவர். ஆமென்.

மீண்டும் உங்களை இன்னொரு ஆதாரத்தொடு சந்திக்கிறேன். கர்த்தரின் நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.

ஆக்கம், தொகுப்பு, பதிப்பு
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
http://news.discovery.com/history/religion/last-supper-papyrus-may-be-one-of-oldest-christian-charms-140905.htm
http://news.yahoo.com/last-supper-papyrus-may-one-oldest-christian-charms-142515392.html
http://shoebat.com/2014/09/05/new-archaeological-discovery-proves-catholic-church/
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே, ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே, இயேசுவே கிருபாசனப்பதியே, உன்றன் சுயமதியே நெறியென்றுகந்து சாயாதே... இந்த பாடல்களை அறிந்திராத கிறிஸ்தவர்கள் இலர் என்று சொல்லலாம். இந்த பாடல்களை இயற்றிய கன்னியாகுமரி மாவட்டக் கீர்த்தனைக் கவிஞர்களுள் முதன்மையானவரான ஜான் பால்மர்-ன் வாழ்க்கை வரலாறை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இவர் நாகர்கோவிலிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடி என்னும் ஊரில் 1812 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். இவ்வூரில் தான் தென் திருவிதாங்கூரின் முதல் சீர்திருத்த ஆலயம் 1809 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இச்சபை குமரி மாவட்டம் மற்றும் தென்கேரளத் திருச்சபைகளுக்குத் தாய்ச்சபையாக விளங்குகிறது. ஜான் பால்மரின் தந்தையார் ஞானப்பிரகாசம், தென்திருவிதாங்கூரின் முதல் கிறிஸ்தவரான மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரின் நெருங்கிய உறவினர். ஆனால் வேதமாணிக்கம் தேசிகரைப் போல் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர். வேதமாணிக்கம் தேசிகர் கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் கிறிஸ்தவர் எனும் பெருமைக்குரியவர். இவருடைய அழைப்பின் பேரிலேயே தரங்கம்பாடியிலிருந்த ஜெர்மன் நாட்டு மிஷனெரி அருள்திரு. ரிங்கல்தௌபே மயிலாடிக்கு வந்து திருப்பணியாற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது. வேதமாணிக்கம் தேசிகரின் மரபில் வந்த பலரும் மிக உயர்வான நிலையை அடைந்ததுடன் இறைப்பணியுடன் கிறிஸ்தவ இலக்கியப் பணிகளும் செய்துள்ளனர். இவர்களுள் ஜான் பால்மர், தேவவரம் முன்ஷியார், அருள்திரு. சி. மாசிலாமணி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். வேதமாணிக்கம் தேசிகர் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியதால் அவரை வெறுத் ஞானப்பிரகாசம் ஆத்திரமடைந்து வேதமாணிக்கம் தேசிகரைச் சாபமிட்டு அவருக்கு எட்டு நாட்களுக்குள் நல்லதொரு பாடம் கற்பிப்பதாகக் கூறினார்.

எட்டு நாட்களுக்குப் பின்பும் தனது சாபம் மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரை நெருங்காததால் ஆத்திரம் அடைந்த ஞானப்பிரகாசம் முப்பது நாட்களுக்குள்ளாக வேதமாணிக்கம் இவ்வுலகில் உயிருடன் இருக்கமாட்டார் என மீண்டும் சாபமிட்டார். முப்பது நாட்கள் கழிந்த பின்னரும் எதுவும் நடை பெறவில்லை. வேதமாணிக்கம் தேசிகரின் பின்னிலைமையானது முன்னிலைமையைக் காட்டிலும் ஆன்மீக உற்சாகத்துடன் சிறப்பாகவே அமைந்தது. எனவே, தம் தோல்வியை ஞானப்பிரகாசம் ஒப்புக்கொண்டார். மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரின் தெய்வமே உண்மையான தெய்வம் என்பதை உணர்ந்து இயேசு கிறிஸ்துவைத் தம் சொந்த மீட்பராக ஏற்றுக் கொண்டார். ஞானப்பிரகாசத்திற்குப் பால்மர் எனவும், அவரது மகனுக்கு ஜான் பால்மர் எனவும் அருள்திரு. ரிங்கல்தௌபேயால் திருமுழுக்குக் கொடுக்கப்பட்டது. ஜான் பால்மரின் தந்தையார் மிஷன் வயல்களுக்கு மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார். இன்றும் இவரது குடும்பத்தினர் அனைவரும் தங்கள் பெயருடன் பால்மர் என்னும் பெயரை இணைத்துள்ளனர்.

கல்வி:
தமிழிலக்கியத்தில் தேர்ச்சி பெறத் தமிழ்ப் பண்டிதர் திருவம்பலத் திண்ணமுத்தம் பிள்ளையிடம் ஆரம்பக் கல்வியும் தொடர்ந்து நாகர்கோவில் இறையியல் பள்ளியில் திருமறைக் கல்வியும் பயின்றார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், வடமொழி மற்றும் கிரேக்க மொழி ஆகிய பாடங்கள் அங்கு கற்றுக் கொடுக்கப்பட்டன. ஜான் பால்மர் இறையியலில் அதிக நாட்டம் கொண்டு விளங்கியதால் அவர் தந்தை உயர் கல்விக்காகச் சென்னைக்கும் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்த வேதசாஸ்திரக் கல்லூரிக்கும் அனுப்பி வைத்தார். உயர் கல்வியை முடித்து மயிலாடிக்குத் திரும்பிய ஜான் பால்மரை மிஷனெரி அருள்திரு. மால்ட் தமக்கு எழுத்தராக நியமித்தார். தொடர்ந்து நாகர் கோவிலில் புதிதாக நிறுவப்பட்ட அச்சுக்கூடத்தின் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்.

ஆரம்பகாலப் பணி:
ஜான் பால்மர் 1830 ஆம் ஆண்டு ஜூலை ஐந்தாம் நாள் பேரின்பம் அம்மாளை வாழ்க்கைத் துணைவியாக்கினார். இத்தம்பதியர்க்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தனர். நாகர்கோவிலில் மிஷனெரியாகப் பணி செய்து வந்த அருள்திரு. மால்ட்டுக்கு ஊழியத்தில் துணை செய்யும் பொருட்டு அருள்திரு. ஆடிஸ் அனுப்பப்பட்டபோது அவருக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். பின்னர் அருள்திரு. ஆடிஸ் அவர்களுடன் கோயம்புத்தூர் பகுதியில் நற்செய்தி ஊழியத்தை செய்து, ஓராண்டு நற்செய்தி ஊழியத்திற்குப் பின் குடும்பத்துடன் நாகர்கோவிலுக்குத் திரும்பினார். 1845 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் நாள் இலண்டன் மிஷன் சங்கத்தின் 50ஆவது ஆண்டு விழா மயிலாடியில் நடைபெற்றது. அச்சிறப்புத் திருநாளில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஊழியம் செய்வதற்காகக் "கெம்பீர சத்தம்"என்னும் குழு அமைக்கப் பட்டது. அக்குழுவில் ஜான் பால்மரும் உறுப்பினராய் இருந்தார். அக்குழுவின் முயற்சியினால் நாகர்கோவில் சேகரத்தின் வடபாகத்திலுள்ள புளிக்குடி, காட்டுப்புதூர்,ஞாலம், அரசன்குழி, தாழக்குடி என்னும் கிராமங்களில் சபைகள் நிறுவப் பட்டன. ஜான் பால்மர் கவிபாடுவதுடன் புதிய சபைகளை நிறுவி ஊழியமும் செய்து வந்தார்.

நற்செய்தி ஊழியம்:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதிலும் குறிப்பாகத் தென்திருவிதாங்கூர் பகுதியில் சாதிக்கொடுமை தலைவிரித்தாடியது. இதன் காரணமாக ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தனர். உயர்சாதிக்காரர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டிருந்தவர்கள், ஏழை மக்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்வதைப் பேரிழப்பாகக் கருதினர். இச்சூழலில், நாகர்கோவிலிலுள்ள கிருஷ்ணன் கோவில் என்னுமிடத்திற்கு நற்செய்தியைச் சொல்ல ஜான் பால்மர் சென்றார். உயர்சாதி எனத் தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்ட இந்துக்கள் அப்பகுதியில் அதிகமாக வாழ்ந்து வந்தனர். விக்கிரகங்கள் யாவும் கல், பித்தளை என்று ஜான் பால்மர் சொல்வதைக் கேட்ட அங்குள்ள பூசாரிக்குக் கோபம் ஏற்பட்டு இருவருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. எங்கள் தெய்வங்கள் உண்மையானவை என்பதை அறிந்து கொள்வாய் எனச் சூளுரைத்துச் சபித்தார். ஜான் பால்மர் பூசாரியின் சவாலை ஏற்றுக் கொண்டு வீடு திரும்பினார். பூசாரியின் கூற்றுப்படியே அன்றிரவு பேய் ஒன்று பயங்கரத் தோற்றத்துடன் ஜான் பால்மர் முன் தோன்றி "எங்கள் தெய்வங்களைப் பழித்தவன் நீ தானே" என்று அவரது கழுத்தில் தன் பத்து விரல்களையும் பதித்துக் கொல்ல முயன்றது. கவிஞர் உடனே பத்துக் கற்பனைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சொல்ல, ஒரு கற்பனைக்கொரு விரலாக பேயின் விரல்கள் அகன்றதாம்.

கீர்த்தனைகள் பாடிய விதம்:
கீர்த்தனைகளை இயற்றுவதிலும், இராகங்களைக் கற்றுக் கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட ஜான் பால்மர் பக்திப் பரவசம் ஊட்டும் பாடல்களால் இறைவனை மகிமைப்படுத்தி வந்தார். திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாப சுவாமி கோவிலில் அதிகாலை நடக்கும் வழிபாட்டின்போது நாதசுர இசை ஒலிக்கும். அக்காலத்தில் சாதிக் கட்டுப்பாடும் மதவைராக்கியமும் உச்சகட்டத்தில் இருந்தன. ஜான்பால்மர் அக்கால இந்துமத ஆலய ஒழுங்குமுறையின்படி இந்துக் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படாத குலத்தைச் சார்ந்தவர். கீர்த்தனைகளை இயற்ற இராகம் மிகவும் இன்றியமையாதது. இராகங்களைக் கற்றுக் கொள்ள அதிகாலை வேளையில் தன் தலையைத் துணியால் மறைத்துக் கொண்டு கோயிலினுட் சென்று, பல புதிய இராகங்களைக் கற்று வந்து அதன் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய கீர்த்தனைகளை இயற்றுவது இவரது வழக்கம். தம் உயிரையும் பொருட்படுத்தாது இறைமகன் இயேசு கிறிஸ்துவின் புகழ்பாட புதிய இராகங்களைக் கற்றுவந்த ஜான்பால்மரின் துணிச்சல் பாராட்டுக்குரியது.

ஜான் பால்மரின் மறைவு:
இத்தகைய இனிய படைப்புகளைக் கிறிஸ்தவத் தமிழ் உலகிற்குப் படைத்துத் தந்த ஜான் பால்மரின் முன்னோர்கள் பக்தி வைராக்கியம் மிகுந்த இந்துக்களாய் வாழ்ந்தவர்கள். சோதிடம்,மருத்துவம், இலக்கியம் போன்ற கலைகளில் ஆழ்ந்த அறிவும் ஈடுபாடும் உடையவர்கள். இவர்கள் தொன்மை வாய்ந்த ஒடுக்கப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். பல தலைமுறைகளுக்கு முன்னரே காவிரி பாயும் தஞ்சை பகுதியிலிருந்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வல்ல நாட்டுப் பகுதியில் சென்று குடியேறியவர்கள். பின்னர் அங்கிருந்து நாஞ்சில் நாட்டுப் பகுதியான மயிலாடிக்குக் குடிபெயர்ந்தனர். வைதீக இந்துக் குடும்பத்தில் பிறந்த ஜான் பால்மரை மகத்துவம் மிக்கக் கீர்த்தனைக் கவிஞராக மாற்றியது மயிலாடி மண்.. எளிய இனிய கிறிஸ்தவக் கீர்த்தனைகளை எழுதிக் கொண்டும், கர்த்தரின் புகழ் பாடிக் கொண்டும் இருந்த கவிஞர் 1883 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 2 ஆம் நாள் தன்னுடைய 71 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார். - See more at: http://www.bibleuncle.com/2014/04/1812-1883.html#sthash.gW9HFrTs.dpuf