Thursday, September 25, 2014

குரங்கிலிருந்து வந்தவனா மனிதன்? ( வேதாகம அறிவியல் - 01 )

நன்றி HI CHRISTIANS
மனிதனை தேவனே படைத்தார் என வேதாகமம் கூறுகின்றது.

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.ஆதியாகமம்-2:7

ஆனால் விஞ்ஞானமோ குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்னம் பொய்யை கூறிவருகிறது.

மனிதக் குரங்கு என்று அழைக்கப்படும் குரங்குகினங்களுக்கும் மனிதனுக்கும் மற்ற விலங்கினங்களை விட சற்று அதிகமான உருவ ஒற்றுமை இருப்பதால் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பது சரியானதன்று. 

1.   ஜெர்மனியிலுள்ள நீண்டர் பள்ளத்தாக்கில் அகழ்வாராய்ச்சியின் போது 1856 இல் கண்டுபிடிக்கப்பட்ட சில எலும்புக் கூடுகளை மனிதனுக்கும் குரங்கிற்கும் இடையேயான ஒரு விலங்கினுடையவை என்று கூறி உலகெங்கும் பரபரப்பு உண்டாக்கினர்.
குரங்கு போன்ற தோற்றம் தரக்கூடியதாக அந்த எலும்புக் கூட்டை மாற்றம் செய்யும் வண்ணமாக தோல், முடி ஆகியவற்றைக் கற்பனையாக சித்தரித்து நீண்டர்தால் பெயர் சூட்டினர்.
அப்படி  நீண்டர்தால் மனிதன் என்று அழைக்கப்பட்டவரகள் சாதரண மனிதர்கள்தான் என்பது பின்னர் நிருபிக்கப்பட்டுவிட்டது. ஆனால், நீண்டர்தால் மனிதனைப் பற்றி இன்றும் பாடசாலைகளில் கற்றுத்தருகின்றனர். இவ்வாறு உண்மையை திசை திருப்பவது சரியோ?
ஜாவா, சீனா ஆகிய இடங்களில் மனித எலும்புக்கூடுகள் அருகில் குரங்குகளின் எலும்புக் கூடுகளைக் கண்டுபிடித்தனர். உடனடியாக தங்களுக்கு ஆதாரம் இருப்பதாக அவர்கள் கூறினர். ஆனால் அந்தக் குரங்குகளின் தலை எலும்புகள் உடைக்கப்பட்டிருந்தன. குரங்குகளின் மூளையை விரும்பி உண்ணும் வழக்கம் அங்கு இருந்ததால்தான் இவ்வாறு இருந்தது என்பது பின்னர் தெரிய வந்தது. இவ்வாறு உண்ணும் வழக்கம் இந்நாடுகளில் இன்றும் உள்ளது.
மனிதனின் மட்டையோட்டுடன் குரங்கின் கீழ்தாடையில் மாற்றங்கள் செய்து பொருத்தி பில்ட்டவுன் மனிதன் என்று பொய்யாகக் கூறினார் சார்லஸ் டாசன் என்பவர். இவரது பொய் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இதுவரை குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட நிலையிலான விலங்கின் எலும்புக் கூடு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
2. குரங்கு மற்றும் ஏனைய விலங்குள் ஆகியவை குட்டிகளுக்கு கொடுக்கும் பாலையும் மனிதப் பாலையும் சோதித்து பார்த்ததில்  மனிதப்பாலுக்கு மிகவும் ஒத்திருப்பது கழுதையின் பால் என்பது தெரிகிறது. குரங்கின் பாலல்ல.
3.   இரத்தத்தில் இருக்கும் ஒற்றுமையைக் கவனித்தால் புலியின் இரத்தம் திமிங்கிலத்தின் இரத்தத்துடனும், கிளியின் இரத்தம் தீக்கோழியின் இரத்தத்துடனும் ஒத்திருக்கின்றன என்பது உண்மை. இவை ஒன்றிலிருந்து மற்றறொன்று வந்தது என்று கூறுவது சரியா?
மனித இரத்தத்தின் வீத எடைமானம் (Specitic Gravity) 1059.
பன்றிக்கு 1060.
முயலுக்கு 1060.
தவளைக்கு 1055-1056.
பாம்பிற்கு 1055.
குரங்கிற்கு 1054.
மனிதனுக்கும் குரங்கிற்கும் உள்ள உறவு எங்கே? பன்றியும் முயலுமல்லவா மனிதனின் அருகாமையில் உள்ளன. 
4. மனிதனுக்கு இருப்பது போன்று தந்தை என்ற பொறுப்பு குரங்கினங்களில் இல்லை. மற்ற விலங்குகளில் நரி (GoldenFox) என்ற சில விலங்குகளிலும் புறா, காகம் போன்ற பறவைகளிலும் உண்டு.
5.  மனிதனைப் போன்று இல்லாமல் குரங்குகள் சில குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே இனச்சேர்க்கையுடையவை. 
  

6.     மனிதனின் மரபணுவிற்குக் (Gene) குரங்கின் மரபணுவிடம் இருக்கும் ஒற்றுமையானது, நாயின் மரபணுவுடனும் இருக்கின்றது என்று 2000-2001 இல் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் குரங்கின் ஒற்றுமையைப் பற்றி மட்டும் மீண்டும் மீண்டும் கூறுவது ஏன்?
---------------------------------------------------------------------------------------------------------------------------------வாழ்வியல் விளக்க வேதாகமம்.

மண்ணான மனிதன்

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார் மனுஷன் ஜீவாத்துமாவானான்.(ஆதி 2.7)
எல்லா மாம்சமும் ஒரே விதமான மாம்சமல்ல. மனுஷனுடைய மாம்சம் வேறே மிருகங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே (1கொரி 15.19)

மனிதனை கடவுள் மண்ணினாலேயா படைத்தைார் என்பதை அறிய ஆராய்ந்த போது இன்று மண்ணிலிருந்து கிடைக்கும் கனியவளங்களுடன் மனித உடலில் சம்பந்தம் வைத்திருக்கிறதை அறிய முடிகிறது.

உலகமெங்குமுள்ள மனிதர்கள் ஏதாவது ஓரு மண்ணின் நிறத்தில்தான் இருக்கின்றனர். (பிரௌன்)(Brown) மனித சரீரத்தின் முக்கிய மூலகங்களான நைட்ரஜன், கார்பன், ஆக்சிஜன், கால்சியம், தண்ணீர் போன்றவை மண்ணிலும் இருக்கிறது என்பதை விஞ்ஞான உலகம் கண்டுபிடித்த உண்மை. பரிசுத்த வேதாகமத்தில் காணப்படும் வார்த்தைகள் கட்டுக்கதைகள் அல்ல.

1.            1.   துப்பாக்கியில் ஒரு முறை சுடுவதற்கு பயன்படுத்தும் அளவிலான கரி   மருந்து.
2.      ஏழு துண்டு சோப்பு செய்யப் போதுமான கொழுப்பு
3.      ஒரு பெரிய ஆணி செய்யப் போதுமான இரும்பு
4.      ஒரு நாயின் மேலுள்ள பேன்களைப் போக்க போதுமான கந்தகம்
5.      ஒரு சிறு கோழிக் கூட்டை வெள்ளையடிக்க போதுமான சுண்ணாம்பு
6.      வயிற்றுக் கோளாற்றைக் கண்டுபிடிப்பதற்கு போதுமான உப்பு
7.      2.200 தீக்குச்சிகளைச் செய்யப் போதுமான வெடிமருந்து.

இவ்வளவு கனிப்பொருள்கள் மனித உடலில் இருப்பதை பின்னாளில் சார்லஸ் H மேயர் எனும் மருத்துவ நிபுணர் விஞ்ஞான வாயிலாக கண்டுபிடித்தார்.

வேதாகமம் தேவனுடைய புத்தகம் என்பதை மனிதன் அறிந்து கொள்ளும்படி வேதத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் வைத்துவிட்டுப்போன உறவைப் பற்றி எண்ணிப் பார்ப்பதற்கு எவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது.

No comments:

Post a Comment