Wednesday, September 24, 2014

நன்றியுள்ள வாழ்க்கை


வென்ற பிறகும் ஜெபம் செய்
தோல்வி என்றாலும் துதி செய்

வெற்றியில் மட்டுமல்லதோல்வியிலும் நன்றியோடு துதிக்க முடியும் என்று சூளுரைத்த பிரேசில் நாட்டு வீரர்களை தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்...

முயல்பவனுக்கு முதன்மை முக்கியமல்ல. நடந்து முடிந்த உலக கோப்பை போட்டியில் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியை பெறாமல் அரை இறுதிக்குள் நுழைந்தது பிரேசில் அணி. மிக முக்கிய ஆட்டக்காரர்கள் சிலர் கால் இறுதியில் அடிபட்டும், மற்றும் சில காரணங்களால் அரை இறுதியில் பங்கு கொள்ள முடியாமல் போனது. கால் இறுதியில் பங்கு கொண்ட பிரேசில் வீரரும், விசுவாசியுமான நெய்மருக்கு அடிபட்டு படுத்த படுக்கையானார். ஆதலால் மிக முக்கிய வீரர்கள் இல்லாமல் அரை இறுதியில் பங்கு கொண்ட பிரேசில் அணி வீரர்கள் நினைத்ததை விட மோசமாக தோல்வி அடைந்தனர்.

உலகமே ஸ்தம்பித்து போன அந்த நேரத்திலும் மனதை தளரவிடாமல் சில வீரர்கள் மைதானத்தில் முழங்கால் இட்டு தேவன் கொடுத்த அரை இறுதி வாய்ப்பிற்காக நன்றி செலுத்தினர். வெற்றி பெற்ற பொது "நன்றி ஏசுவே" என்று முழங்கியவர்கள் தோல்வி அடைந்த போது தேவனுக்கு "நன்றி செலுத்தினது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது..

விசுவாசிக்கிறவன் பதறான். உண்மையான விசுவாசிக்கு எப்போதும் ஓர் அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு. என்ன நடந்தாலும் இயேசுவின் அன்பை விட்டு அவனை பிரிப்பது கடினம். உலக பிரகரான வெற்றி தோல்விகளை சாதாரணமாக எடுத்து கொள்ள நமக்கு சாதாரண அறிவு இருந்தாலே போதும். இது இருக்கும் ஒவ்வொருவரும் இயேசு என்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறாமல், தேவன் கொடுத்த வாய்ப்பிற்காக நன்றி செலுத்துவர்.

இன்றைய கிறிஸ்தவம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். 2 தீமோத்தேயு அதிகாரத்தில் பவுல் சொன்னது போல நல்ல போராட்டத்தை போராடு. விசுவாசத்தை காத்துகொள் என்றது பிரகாரமாக. நல்ல போராட்டத்தை போராடுவோம். வெற்றி தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் மீண்டும் முயற்சிகளை விட்டுவிடாமல் இருப்போம்.

இந்த ஆட்டத்தை பற்றி டேவிட் என்ற நட்சத்திர பிரேசில் வீரர் கூறும் போது "“I believe that everything in life belongs to God and he has a clear plan for us if we follow him" என்று கூறினார். அதாவது "நமது வாழ்வு ஏசுவுக்கு சொந்தமானது, அவரை பின்பற்றுவோருக்கு அவர் தெளிந்த திட்டத்தை வைத்திருக்கிறார்"

நாம் நமது வாழ்வில் நடக்கும் பல சறுக்கலில் இதே போல கூற முடியுமா?? ஆசீர்வாதத்திற்க்காக மட்டும் இயேசுவின் பின்னே ஓடாமல் அவர் தெய்வம் என்கிற அந்த தன்மையை மனதில் எந்தியவர்களாய் அவரை தொடர்வோம்.

பிலிப்பியர் 4;6. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். 7. அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்

தாழ்ந்தாலும் தளராமல்
எழுவது தான் வீரனுக்கு அழகு
வீழ்ந்தாலும் எழுவது தான்
வெற்றிக்கு அழகு

கர்த்தரை நம்புபவன்
தோல்வியை நம்பமாட்டான்
தோல்வியில் துவளுபவன்
கர்த்தரை நம்பமாட்டான்

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

No comments:

Post a Comment