Wednesday, September 24, 2014

சுவிசேஷ துண்டு பிரதி - மிகப்பெரிய ஊழியம்

ஒரு சுவிசேஷ துண்டு பிரதி மாபெரும் எழுப்புதலை உண்டாக்கியது. ஒன்பது மிஷனெரிகளை உலகிற்கு தர காரணமாயிருந்தது. தமிழ்நாட்டிலும் சிறந்த மருத்துவ பணி மூலம் சரீர சுகம் மட்டுமல்லாமல், ஆத்மீக சுகத்தையும பெற செய்தது. அது என்ன துண்டு பிரதி, யார் அதை படித்தார்? அதன்; மூலம் தமிழ்நாட்டில் மருத்துவ பணியா?
.
ஆம், ஒரு நாள் ஜான் ஸ்கடர் என்பவர் தனது நண்பரை பார்க்க ஓரிடத்தில் காத்திருந்தார். அப்போதுதான் அவர் கண்களில்பட்டது, அந்த துண்டு பிரதி! அதின்தலைப்பு 'உலகத்தின் மனந்திரும்புதல்'. கண்டதும் கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தார். தன் வாழ்வை இயேசுகிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார். பின்நாட்களில் தன்னை ஊழியத்திற்கு அர்ப்பணித்தார்;. அவர் தனது ஏழு மகன்களையும் இரண்டு மகள்களையும் மிஷனெரி பணிக்கு அர்ப்பணித்தார். அவரது குடும்பத்திலுள்ள 43 பேர்களும் கிறிஸ்தவ பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்களே!
.
ஜான் ஸ்கடரின் பேத்திதான் நம் வேலூரில் C.M.C. மருத்துவமனையை நிறுவி மருத்துவ பணியோடு, சுவிசேஷ பணியையும் செய்த ஐடா ஸ்கடர் அம்மையார் ஆவார். தலைமுறை தலைமுறையாய் ஒரு குடும்பம் கிறிஸ்துவின் பணியை செய்து வருமாயின் அது சரித்திரத்திலேயே சிறந்த உதாரணம் தானே! ஒரு கைபிரதி ஒருவரை மாற்றியதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் இரட்சிப்பின் பாதையில் கடந்து வந்துள்ளனர்.
.
தேவன் நமக்கு கொடுத்துள்ள கட்டளை 'நீங்கள் உலகமெங்கும் போய் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள' என்பதே. அப்படியென்றால் முழு நேர ஊழியர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு விசுவாசிக்கும் சுவிசேஷம் அறிவிக்கும் கடமையுள்ளது.

No comments:

Post a Comment