Wednesday, December 18, 2013

பாவத்திலிருந்து விடுதலை


ஒரு கூட்ட தவளைகள் தண்ணீரை நோக்கி வேகமாக ஓடின. போகும் பாதை எப்படி உள்ளது என்று கூட பார்க்கவில்லை. மூன்று தவளைகள் வழியில் உள்ள பெருங்குழியில் விழுந்து விட்டன. மற்ற தவளைகளோ பாதையை நோக்கி செல்லாமல் குழியின் அருகே வந்து நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன. விழுந்த வேகத்தில் அந்த மூன்று தவளைகளும் எப்படியாவது மேலே வந்து விட வேண்டுமென்று வேகவேகமாக தாவின. இதை மேலிருந்து பார்த்து கொண்டிருந்த தவளைகளில் ஒன்று, 'நீங்கள் மேலே வரவே முடியாது. ஏன் வீணாக முயற்சிக்கிறீர்கள்' என்றது. இதை கேட்டவுடன் அந்த தவளை சோர்ந்து ஒரு மூலையில் உட்கார்ந்து விட்டது. இரண்டு மட்டும் மேலே வர முயற்சித்தன. மேலேயிருந்த மற்றொரு தவளை கூறியது, 'மழைக்காலம் வரும் அப்போது இநத குழி மழை நீரால் நிரப்பப்படும். அப்போது நீங்கள் எளிதாக நீந்தி வெளியே வந்து விடலாம். அதுவரை இங்கே இருங்கள்' என்றது. அதுதான் சிறந்த யோசனை என்று இரண்டாவது தவளையும் எண்ணி தாவுவதை நிறுததியது. ஆனால் ஒன்று மட்டும் விடாப்பிடியாக வெளியே வர முயற்சித்தது. ஆனால் உடனிருந்த இரு தவளைகளும் 'நீயும் எங்களுடன் இரு. உனக்கு துணையாகத்தான் நாங்கள் இருக்கிறோமே' என்றன. ஆனாலும் காது கேளாதது போல பெருமூச்சுடன் தாவித்தாவி மேலேயும் வந்து விட்டது அந்த தவளை.

எரிக் லிட்டில் - சரித்திர குறிப்பு

என்னை கனப்படுத்துகிறவனை நானும் கனப்படுத்துவேன். 1 சாமு 2:30.

எரிக் லிட்டில் ஒரு புகழ்பெற்ற விளையாட்டு வீரர். ஒலிம்பிக் விளையாட்டுகளில் 100 மீட்டர் தடகளப்போட்டியில் ஓடும் தகுதியை பெற்றிருந்தார். ஆயினும் இறுதி சுற்றிற்கு தகுதி பெற செய்யும் அரையிறுதி சுற்று ஞாயிற்று கிழமை நடைபெறும் என்பதை அறிந்தவுடன், தான் அந்த ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொளள் போவதில்லை என்று தன் மேலாளரிடம் கூறினார். கர்த்தருடைய நாளை கனவீன்ப்படுத்துவது கர்த்தரையே கனவீனப்படுத்துவதற்கு ஒப்பானது என அவர் எண்ணினார்..

இதினிமதித்தம் விமர்சனங்கள் அவர் மேல் மலை போல குவிந்தன. தனது நாட்டின் புகழை கெடுத்தவர், குறுகிய மனப்பான்மையுடையவர், மத வெறி பிடித்தவர், பிறரது மகிழ்ச்சியை கெடுத்தவர் என பலவாறு அவதூறுகளை அவர் மேல் சாற்றினர். என்றாலும் தனது முடிவை அவர் மாற்றி கொள்ளவில்லை. பின்பு 220 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் அனைத்து சுற்றுகளும் வார நாட்களில் குறிக்கப்படடிருப்பதை கண்டு, அதில் கலந்து கொள்ள அனுமதி கோரினார்.

முதல் சுற்று, இரண்டாவது சுற்று, என அனைத்திலும் வெற்றி பெற்றார். இறுதி சுற்று நாளும் வந்தது. ஓடுவதற்கென்று தனது இடத்தை நோக்கி சென்றபோது, யாரோ ஒருவர் ஒரு சிறு துண்டுத்தாளை அவருடைய கரத்தில் திணித்தார். அதை பிரித்து பார்த்தபோது, 'என்னை கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்' என அதில் எழுதியிருந்தது. 100 மீட்டர் ஓடவே பழகிய அவருக்கு, 220 மீட்டர் ஓடுவது சற்று கடினம் தான் என்றாலும், தேவன் அவரோடிருந்து அவரை வெற்றி பெற செய்தார். வெற்றி பெற்றது மட்டுமன்றி புதிய உலக சாதனையையும் நிகழ்த்தினார்.
“ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.”சங்கீதம் 91:15 -ம் வசனம் எத்தனை உண்மை பாருங்கள்.
இவைஎல்லாவற்றிர்க்கும் முக்கிய காரணம் எரிக் லிட்டில் தமது வாழ்வில் தேவனை கனப்படுதியதே.

ஆம், தானியேலும அவன் நண்பர்களும் தேவனுடைய வார்த்தையை விட்டு கொடுக்காமல் வைராக்கியமாய் வாழ்ந்ததால் பாபிலோனிய நாட்டின் அரசின் மேன்மையான பதவியை அடைந்தனர்..தேவனுக்கு முன்பாக பாவம் செய்ய துணியாது தனது தூய வாழ்வால் தேவனை கனப்படுத்தின யோசேப்பு பஞ்சத்தின்போது, தனது மக்களுக்கும் பாதுகாவலானக உயர்த்தப்பட்டார். தேவனுக்கு உண்மையுள்ளவனாக மோசே வாழ்ந்ததால் இஸ்ரவேல் மக்களை வழி நடத்தும் தலைவனாகி தேவனால் கனப்படுத்தப்பட்டார். தேவனை கனப்படுத்தி வாழ்ந்த அநேகரின் வாழ்க்கை ஆசீர்வதிக்கபட்டிருப்பதை வேதம் நமக்கு தெளிவாய் காண்பிக்கின்றது. நாமும் எல்லா சூழ்நிலையிலும் தேவனை கனப்படுத்துவோம். வாழ்வில் உயர்வோம். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

விசுவாசத்தில் வாழ்க்கை

ஜெசிமன் பிராண்டு மற்றும் ஈவ்லின் பிராண்டு தம்பதியினர் (1913-1974)


ஜெசிமன் பிராண்டு மற்றும் ஈவ்லின் பிராண்டு தம்பதியினர் (1913-1974)
பிறப்பு - இங்கிலாந்து, மிஷனரி - கொல்லிமலை (தமிழ் நாடு)

தமிழ்நாட்டின் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைதிருக்கும் கொல்லிமலை, பச்சமலை, கல்வராயன் மலைகள், போதமலை, பைத்தூர் மலையில் ஊழியம் செய்த திரு. ஜெசிமென் பிராண்டு (1885-1929), அவரது துணைவியாரான ஈவ்லின் பிராண்டு அம்மையார் (1879-1974) அவர்களைப் பற்றியும் இந்த தம்பதியினர் எவ்வாறு மலைமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, கிறிஸ்த்துவின் நற்செய்தியை அறிவித்தனர் என்பதை இந்த மிஷனரி வாழ்க்கை வரலாற்று பகுதியில் காணலாம்.

திரு. ஜெசிமென் பிராண்டு (1885-1929)
கிறிச்த்துவுக்குள் அன்பானவர்களே, ஜெசிமென் பிராண்டு ஐயா மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ஜெசிமென் பிராண்டு ஐயா 1885-ல் இங்கிலாந்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு விவசாய பண்ணையின் அதிபர். ஜெசிமெனின் தகப்பனார் பிள்ளைகளின் ஆவிக்குரிய ஜீவியத்தை குறித்தும், வேதத்தை போதிப்பதிலும் அக்கறை கொண்டவராக இருந்தார். ஜெசிமெனுக்கும் ஆண்டவர் இயேசுவுக்கு பணி செய்யும் வாஞ்சை அதிகமிருந்தது. ஆனாலும் இயேசுவிடம் தன்னை முழுமையாக அற்பணித்திருக்கவில்லை. தன்னுடைய 14-ம் வயதில் பிரவ்ன் என்ற பிரசங்கியார், இயேசுவே சீக்கிரம் வாரும் என்று முழு மனதோடே ஜெபித்துகொண்டிருந்ததை கேட்ட ஜெசிமெனுக்கு உள்ளத்தில் ஒரு நடுக்கம் வந்தது. ஒருவேளை இயேசு சீக்கிரமாக வந்துவிட்டால் தான் நரகத்திற்கு போக நேரிடுமோ என்று ஐயம் கொண்டு நடுங்கினார். தேவ ஆவியானவர் அவருடைய பாவத்தை குறித்து உணர்த்தினார். தேவனிடம் பாவங்களை அறிக்கைசெய்து ஒப்புரவானார் ஜெசிமென்.

மிஷனரி பணிக்கு ஒப்புக்கொடுத்தல்
தனது 14 வயதிலேயே தன்னை கிறிஸ்த்துவுக்கென்று அர்பணித்த ஜெசிமென் தனது 20-ம் வயதில், அவரது ஊரில் நடைபெற்ற மிஷனரி கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் மிஷனரி அழைப்பானது வல்லமையாய் கொடுக்கப்பட்டது. ஒருமுறை கூட இயேசுவை குறித்து கேட்டிராத மக்கள் இந்தியாவில், சீனாவில், மற்ற நாடுகளில் நித்திய நரக ஆக்கினையைநோக்கிச் சென்று கொண்டிருகின்றார்களே! வாலிபனே, அந்த இருண்டநாடுகளில் தேவனுடைய பிரதிநிதியாக ஆண்டவருடைய வார்த்தைகளைச் சுமந்து செல்ல, நீ முன் வருவாயா? அவர்களுக்குள்ளும் ஆத்துமா உண்டு என்பதை அறிவாயா? அவர்களும் தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றவர்கள் என்பதை மறந்து விடாதே. அவர்களும் தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிக்க வேண்டுமல்லவா?, ஆனால் பிரசங்கிக்கிறவன் இல்லையென்றால் எப்படி ஜீவ வழியை அவர்கள் அறிந்துகொள்வார்கள். பாடுகளையும் துன்பங்களையும் சகித்து தேவனுக்காய் உன்னை அர்பணிக்க நீ வர மாட்டாயா?

இதைக்கேட்ட ஜெசிமென் இருதயத்தில் பாரம் கொண்டவராய் தன்னை மிஷனரியாக அர்ப்பணித்தார். ஸ்டிரிக்ட் பாப்டிஸ்ட் மிஷினில் தன்னை மிஷனரியாக இணைத்து கொண்டு ஒரு வருடம் மருத்துவ கல்வி பயின்ற அவர் தனது 22-ம் வயதில் மிஷனரியாக தனது செல்வ செழிப்பான வாழ்கையை உதறி விட்டு, 1907-ம் ஆண்டின் இறுதியில் தமிழ்நாட்டின், சென்னைக்கு வந்தார். கப்பலைவிட்டு இறங்கிய அவர், தமிழ் மனிதர்களை மட்டும் பார்க்கவில்லை. அவர்களுக்குள் இருந்த விலையேறப்பெற்ற ஆத்துமாக்களையும் பார்த்தார். சென்னை, வேப்பேரியில் இருந்த ஸ்டிரிக்ட் பாப்டிஸ்ட் மிஷினில் இருந்து, தமிழ்மொழி கற்க ஆரம்பித்தார். கடினமான மொழி. ஆனால் ஆத்துமாக்களிடம் அவர்கள் தாய் மொழியிலேயே சத்தியத்தை சொல்ல தாகம். மிஷனரிகளுக்கு வழங்கப்படும் இரண்டு வருட மொழிப்பயிர்ச்சியில் நன்கு தமிழ் கற்றுக்கொண்டார். பின்பு ஜெப கூட்டங்களிலும், ஞாயிறு ஆராதனையிலும் பிரசங்கிக்க ஆரம்பித்தார்.

சேலம் மாவட்டம் சேந்தமங்கலத்தில் ஊழியம்
1907-ல் சென்னை வந்த ஜெசிமென் இரண்டு வருட தமிழ் பயிற்சிக்கு பின், 1909-ல் தனது 24-ம் வயதில் சேலம் மாவட்டம் சேந்தமங்கலத்திற்கு அனுப்பப்பட்டார். அவர் தங்குவதற்கு ஒரு குடிசை கொடுக்கப்பட்டது. அந்த குடிசையில் எலித்தொல்லைகள் அதிகம். ஜெசிமென் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தான் மருத்துவ கல்லூரியில் கற்ற மருத்துவ அறிவை உபயோகப்படுத்த ஆரம்பித்தார். ஒரு சிறிய ஆஸ்பத்திரியை சேந்தமங்கலத்தில் அமைத்தார். அங்கு வந்த நோயாளிகளுக்கு மருத்துவ உதவி மூலம் இயேசுவின் அன்பை வெளிப்படுத்தினார். அதனால் அந்த நாட்களில் பரவிய கொள்ளை நோய்களான ப்ளேக் மற்றும் காலரா போன்ற நோய்களில் இருந்து அநேகருடைய உயிரை அவர் காப்பாற்றினார்.

ஜெசிமெனுக்கு கொல்லிமலை அறிமுகம்
அந்த நாட்களில் கொல்லிமலை மக்கள், தங்கள் காட்டு பகுதியில் விளையும் பழங்களை விற்ப்பதர்க்காக 20 கிலோ மீட்டருக்கும் அதிகமாக நடந்து சேந்தமங்கலத்திற்கு காலை நேரங்களில் வருவார்கள். ஜெசிமென் இவர்களை அடிக்கடி பார்ப்பதுண்டு. இந்த மலை மக்களை பாக்கும் போது ஒரு பாரம் ஜெசிமெனை ஆட்கொண்டது. இவர்கள் ஆண்டவருடைய சத்தியத்தை ஒருபோதும் அந்த மக்கள் கேட்டிருக்கமாட்டார்களே என்பதே அந்த பாரம்.

ஒருநாள் வயதான ஒரு மனிதன், தட்டுத்தடுமாறி மிஷன் ஆஸ்பத்திரி வெராண்டாவில் வந்து நின்றார். அதிகம் களைப்படைந்தவராக, தோய்ந்து போனவராக காணப்பட்டார். அந்த மனிதன் தான் கொல்லிமலையில் இருந்து நடந்து வருவதாக ஜெசிமெனிடம் தெரிவித்தார். தன்னுடைய வயிற்று போக்கு குணமடைய மருந்துகள் தரும்படி கேட்டுக்கொண்டார். ஜெசிமென் அவருக்கு சிகிச்சை அளித்து, அவர் தேறியவுடன், கொல்லிமலை மக்களை பற்றி அநேக காரியங்களை கேட்டு அறிந்துகொண்டார். ஜெசிமென் அந்த மலைவாழ் மனிதனிடம் காண்பித்த அன்பு, அவரை வெகுவாய் கவர்ந்தது. ஐயா, எங்கள் மலைக்கும் நீங்கள் வரமாட்டீர்களா?. நாங்கள் நாகரீகம் அற்றவர்களாக ஜீவிகின்றோம். எங்களின் வறுமை கொடியது. மருந்து வசதி என்பது கொஞ்சமேனும் இல்லை. தயவு செய்து வாருங்கள் ஐயா, என்று ஜெசிமெனை அழைத்தார். அந்த காட்டு மனிதனின் அழைப்பு தேவனுடைய அழைப்பாகவே ஜெசிமெனுக்கு தெரிந்தது. அன்றிலிந்து தனது எண்ணம், பேச்சு, யோசனை எல்லாமே கொல்லிமலை தான்.

ஒரு நாள் ஜெசிமனும் அவரது நண்பர்கள் நாலவருமாக, எந்த வித போக்குவரத்து வசதியும் இல்லாத கொல்லிமலைக்கு செல்ல திட்டமிட்டனர். காட்டுப்பகுதியில் கரடு முராடான வழியில் இருபது கிலோ மீட்டருக்கும் அதிகமாக நடந்தால் கொல்லிமலையை அடையலாம். ஆனால் காட்டு வழியில் கரடியும், செந்நாய்களும் உண்டு. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது, வலது கைக்கும், இடது கைக்கும் வித்தியாசம் அறியாத ஜனங்களை சந்தித்து, எப்படியாவது கிறிஸ்த்துவின் அன்பை சொல்ல வேண்டுமென புறப்பட்டார் ஜெசிமென். பல கிலோமீட்டர்கள் நடந்து மலை உச்சியை அடைந்தார். தூரத்தில் குடிசைகள் தெரிய, உற்ச்சாகத்தோடு ஜெசிமென் அந்த கிராமத்தை நோக்கி சென்றார். மலைமக்கள், பேண்ட், சட்டை போட்ட மக்களை கண்டால் ஓடிவிடுவார்கள். அதே போல கிராம மக்கள் ஜெசிமெனை பார்த்து ஓட துவங்குகையில், அவரிடத்தில் சிகிச்சை பெற்ற மனிதன் அவரை அடையாளம் கண்டு, அவர் மருத்துவர் என்றும், யாரும் அவருக்கு அஞ்ச வேண்டாம் என்று அவன் சொன்னதிநிமித்தம் மலை மக்கள் ஜெசிமென் அருகில் வந்தார்கள். தான் எடுத்து சென்றிருந்த மருத்துவ பெட்டியின் துணையோடு அநேகருக்கு மருத்துவ உதவி செய்து இயேசுவின் அன்பை கூறினார் ஜெசிமென். அந்த மக்கள் மூலமாக ஏறக்குறைய 200-க்கும் அதிகமான கிராமங்கள் கொல்லிமலையில் இருப்பதை அறிந்து கொண்ட ஜெசிமென், தான் திரும்பி வந்து உங்களுடனே இருந்து உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு இரவில் சேந்தமங்கலத்திற்கு வந்து சேர்ந்தார். பின்னர் சென்னையில் ஊழியம் செய்யும்படி பாப்டிஸ்ட் மிஷன் மூலம் அழைக்கப்பட்டு, பின்னர் விடுமுறைக்காக அங்கிருந்து இங்கிலாந்து (Furlough) சென்றார். ஆனால் அவரது இதயமோ கொல்லிமலை மக்கள் மீதே இருந்தது. இங்கிலாந்தின் பலசபைகளிலும், பாப்டிஸ்ட் மிஷன் பத்திரிக்கையிலும் தொடர்ந்து கொல்லிமலை குறித்த பாரங்களை பகிர்ந்து கொண்டார்.

ஜெசிமெனுக்கு ஈவ்லின் அறிமுகமாகுதல்
1911- ம் ஆண்டு கொல்லிமலையை குறித்த ஜெசிமெனின் கட்டுரை அநேகருக்கு ஆத்தும ஆதாய பாரத்தை ஏற்படுத்தியது. அதில் ஒருவர் திருமதி. எல்னா என்ற விதவை மற்றொருவர் ஈவ்லின்: ஒரு செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர், ஜெசிமெனைப் போல எல்லா செல்வத்தையும் உதறி விட்டு இந்தியாவில் தேவப்பணி செய்ய தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். பாரத்தோடு இந்தியா நோக்கி பயணம் செய்தார்கள். ஈவ்லின், நீலகிரி மலையில் உள்ள குன்னூரில் தமிழ் மொழி கற்க அனுப்பபட்டார்கள். ஜெசிமனுக்கோ சென்னையில் இருந்து ஊழியம் செய்வதோடு, பாப்டிஸ்ட் சங்கத்தின் மற்ற பொறுப்புகளையும் கவனிக்க வேண்டியதாய் இருந்தது. எல்லா மிஷனரிகளுக்கும் சங்கத்தின் செய்திகளை கடிதம் அனுப்பும் வேலையும் நியமிக்கப்பட்டது. இந்த நிலையில் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஈவ்லினை கடிதங்கள் மூலம் தேற்றினார் ஜெசிமென். தேவனிடமிருந்து பெற்ற “TRUST and TRIUMPH’ என்ற வார்த்தையை ஈவ்லினோடு பகிர்ந்து கொண்டு குணமடைய உதவி செய்தார் ஜெசிமென்.

ஜெசிமென் கொல்லிமலை ஊழியத்தை ஆரம்பித்தல்
1912-ம் வருடத்தில் அதாவது தனது 27-ம் வயதில், ஜெசிமென்னுக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. அதாவது இங்கிலாந்து சென்று மருத்துவ பட்ட படிப்பு படித்து வரும்படி மிஷனரி சங்கம் வாய்ப்பளித்தது. டாக்டர் பட்டமா? கொல்லிமலை ஊழியமா? ஜெசிமென், கொல்லிமலை ஊழியத்தையே முதலாவதாக வைத்தார். ஆகவே மருத்துவ பட்ட படிப்பை உதறி தள்ளினார். 1912-ம் வருடம் மார்ச் மாதம், கொல்லிமலை மிஷனரியாக சங்கத்தாரால் நியமிக்கப்பட்டு, சென்னையிலிருந்து சேந்தமங்கலம் வந்து சேர்ந்தார் ஜெசிமென். அங்கிருந்து அவரது நண்பர் மார்லிங் என்பவருடன் கொல்லிமலையின் வாழவந்தி என்ற இடத்திற்கு நடந்து சென்றார்கள். அந்த ஊர் பூசாரி கொடுத்த சிறிய ஓலைக்குடிசையில் தங்கி, அருகிலிருந்து கிராமங்களுக்கு சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தும், அவர்களுக்கு கர்த்தரை அறிவித்து ஊழியம் செய்ய தொடங்கினார்.

ஜெசிமென், மனைவி ஈவ்லினோடு கொல்லிமலையை அசைத்தல்:
1913-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் சேந்தமங்கலத்தில் ஜெசிமெனுக்கும் ஈவ்லினுக்கும் SBM ஆலயத்தில வைத்து திருமணம் நடந்தது. திருமணம் நடந்த அன்று மாலையே திருமனதம்பதியினர் கொல்லிமலையை நோக்கி பிரயாணத்தை ஆரம்பித்தார்கள். ஏற்கனவே ஜெசிமென் வாழவந்தி என்ற இடத்தில் கட்டியிருந்த மரவீட்டிர்க்கு பல கிலோ மீட்டர்கள் நடந்தும், டோலியிலும் வந்து சேர்ந்தார்கள். பின்னர் அநேக மெடிக்கல் கேம்ப்கள் மூலம், கிராமங்களை சந்தித்தனர். கிட்டத்தட்ட 10 நாட்கள் ஒரு பகுதியில் தங்கி மெடிக்கல் கேம்ப்கள் நடத்தினர். அந்த நேரத்தில் அந்த கிராமங்களில் இருக்கும் ஆடு அல்லது மாட்டு கொட்டகைகளே அவர்களுக்கு தங்குமிடமாக இருந்தது. இந்த சூழ்நிலையில் 1914-ம் வருடம் உலக வரலாற்றின் சிறப்பு மிக்க மருத்துவராக விளங்கிய பால் பிராண்டு அவர்களுக்கு மகனாய் பிறந்தார். குஷ்டரோகிகளுக்கு நரம்புகள் பாதிப்பதால் கை விரல்கள் குறுகி உபயோகிக்க முடியாததாக மாறிவிடும். இவைகளில் டாக்டர் பால் பிராண்டு ஆராய்ச்சி செய்து நரம்புகளை மாற்றியமைக்கும் அறுவை சிகிச்சை முறையை கண்டுபிடித்தார். ஜெசிமென் தனக்கு முன்னிருந்த மருத்துவ படிப்பிற்க்கான வாய்ப்பை உதறித்தள்ளிவிட்டு கொல்லிமலை வந்திருந்தாலும், கர்த்தர் அவரது மகனை உலக சிறப்பு மிக்க மருத்துவராக மாற்றினார். எத்தனை ஆச்சரியம் பாருங்கள்.

பாடுகளின் மத்தியில் ஊழியம்
கொல்லிமலை பூசாரிகள் அந்த மக்களை ஆளுகிரவர்காளாக இருந்தார்கள். மக்கள் யாவரும் பூசாரிகளின் ஆலோசனைப்படியே நடப்பார்கள். ஊர்கட்டுபாடுகளும், ஜாதி கட்டுப்பாடுகளும் இன்றளவும் கொல்லிமலை மக்கள் இரட்சிக்கப்ட முக்கிய தடையாக உள்ளது. கொல்லிமலை பூசாரிகள் இந்த மக்களுக்கு பூசைகள் செய்து, வியாதியில் மந்திரம் ஓதி, பிசாசுகளை ஓட்டுவதற்கு அதிக பணம் பெற்று வந்தார்கள். மக்கள் இயேசுவை பின்பற்றினால் தமது வருமானம் நின்றுவிடும் என்பதற்காக இந்த பூசாரிகள் ஊழியத்திற்கு எதிராய் செயல்பட்டார்கள். கிறிஸ்துவை ஏற்றுகொள்ளுபவர்கள் ஊரை விட்டும், குடும்பத்தை விட்டும் துரத்தபடுவார்கள் என்றும் பயமுறுத்தி மக்களை இயேசுவின் பக்கமே விடாமல் தடுத்தனர். வருடங்கள் கடந்தன. ஜெசிமெனின் கொடுத்த அணைத்து மருத்துவ உதவிகளையும் மக்கள் பெற்றுக்கொண்டனர். ஆனால் ஒருவர் கூட இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து, இயேசு எங்களுக்கு வேண்டாம் என்று சொன்னாலும், இந்த மக்களை இயேசு தன் பக்கம் இழுக்க வல்லவராய் இருக்கின்றார் என்ற விசுவாச அறிக்கை செய்தார் ஜெசிமென் பள்ளிகளை நிறுவ தொடங்கினார்.

1919-ம் ஆண்டில் மலையில் ஊழியம் ஆரபிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியிருந்த நிலையில், விடுமுறைக்கு இங்கிலாந்து செல்லும் வாய்ப்பை உதறிவிட்டு ஜெசிமென் தம்பதியினர் கொல்லிமலையில் ஊழியத்தை தொடர்ந்தனர். அந்த வருடத்தில் விஷ காய்ச்சல் கொல்லிமலை முழுவதும் பரவ தொடங்கியது. விஷக்காய்ச்சளால் பாதிக்கப்பட்ட மக்களை மலைமேலுள்ள பாறையில் போட்டு வந்து விடுவார்கள். நோய் நீங்கி உயிரோடு இருந்தால் மீண்டும் அவர்கள் கிராமத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதனாலேயே அந்த பகுதி சீக்கு பாறை (SICK MOUNT) என்று இன்றளவும் அழைக்கப்படுகிறது. ஜெசிமெனும், ஈவ்லினும் அரிசி கஞ்சியை இந்த மக்களுக்கு அளித்து அநேகரை காப்பாற்றினர். ஆயினும் நோயின் தாக்கம் கொடிதாய் இருந்ததால் அநேகர் மரித்து போனார்கள். ஜெசிமெனது மரவீட்டின் அருகில் இருந்து, ஊழியத்தை எதிர்த்து வந்த பூசாரியும் இந்த விஷ காய்ச்சலுக்கு பலியானார். பின்னர் இந்த பூசாரியின் மகனையும் மகளையும் ஜெசிமென் தம்பதியினரே தத்தெடுத்து வளர்த்தனர். ஈவ்லின் அம்மையார் இந்த பூசாரியின் பிள்ளைகளுக்கு தாயாக மாறினார். இந்நிலையில் ஜெசிமென், ஈவ்லின் தம்பதியினருக்கு கோனி என்ற பெண்குழந்தை பிறந்தது. இந்த கோனி பின் நாட்களில் இருண்ட கண்டமாகிய ஆப்பிரிக்காவில் மிஷனரி ஊழியம் செய்தவர்.ஜெசிமெனுக்கு வாழவந்தியில் ஆலயத்தை கட்டவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக இங்கிலாந்தில் இருந்து வந்த 30 பவுண்டில் ஒரு சிறிய ஆலயத்தை கட்ட ஆரம்பித்தார். சில ஆட்களை தனக்கு உதவியாக வைத்துக்கொண்டு தானே அந்த ஆலயத்தை கட்டினார். 1920-ம் கிறிஸ்மஸ் தினத்தில் ஆலயம் திறக்கப்பட்டது.

ஜெசிமென் குடும்பத்தோடு விடுமுறைக்காக இங்கிலாந்து செல்லுதல்
1923-ம் ஆண்டு ஜெசிமென் தம்பதியினர் கொல்லிமலை ஊழியத்தை தொடங்கி 10 வருடங்கள் நிறைவேறின. பால் பிராண்டுக்கு 9 வயதும், கோணிக்கு 6 வயதும் ஆனதால் அவர்களை பள்ளியில் சேர்க்கும்படி தம்பதியினர் இங்கிலாந்து சென்றார்கள். இருவரும் இங்கிலாந்து பள்ளி ஒன்றின் விடுதியில் சேர்க்கப்பட்டனர். ஜெசிமெனும், ஈவ்லினும் கொல்லி மலை அனுபவங்களை சபையிலும் தனிப்பட்ட விசுவாசிகளிடமும் பகிர்ந்து கொண்டார்கள். அப்பொழுது ஈவ்லினுடைய அண்ணன் மகள் ரூத் ஹாரிஸ் தன்னை மிஷனரியாக கொல்லிமலை பகுதிக்கு அர்ப்பணித்தார். விடுமுறை முடிந்தது.. பிள்ளைகளை விட்டு பிரிவது தம்பதியருக்கு கடினமாகவே இருந்தது. ஆனாலும் தன்னுடைய தகப்பனையாவது, தாயையாவது, தன்னுடைய குமாரனையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்கு பாத்திரன் அல்ல என்ற தேவ வார்த்தை அவர்களோடு பேசிற்று. ஜெசிமெனுக்கு தெரியாது அதுவே பால் பிராண்டையும், கோணியையும் பார்க்கும் கடைசி முறை என்று. ஈவ்லின் அம்மையார் குழந்தைகளை விட்டு பிரிந்து வருகையில், தனக்குள் இருந்த பாச உணர்வுகள் மரித்து போவதாக என்று உணர்ச்சி வசப்பட்டு அழுதுள்ளார். உள்ளத்தில் கொல்லிமலை மக்களின் மீது கொண்ட ஆத்துமபாரம் ஒரே மாதத்தில் மீண்டும் ஜெசிமென் தம்பதியினரை கொல்லிமலைக்கு திரும்பிவர செய்தது.

மலைமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திய ஜெசிமென்:
கொல்லிமலையில் வாழ்ந்து வந்த அநேக ஏழை மற்றும் அநாதை குழந்தைகளை குறித்த பாரம் ஜெசிமெனுக்கு இருந்தது. சிறுவயது கலியாணம் அந்தநாட்களில் அதிகம் இருந்தது. நான்கு, ஐந்து வயது பெண் குழந்தைகளை வாலிப அல்லது பெரியவயது ஆட்களுக்கு திருமணம் செய்து விடுவார்கள். ஆனால் அந்த மனிதன் வேறு பெண்களை தனக்கு வைத்து கொண்டு, இந்த சிறு பெண்களை துரத்தி விடுவான். இவ்விதமான குழந்தைகள் அனாதைகள் போல இருந்தார்கள். தான் இங்கிலாந்து சென்ற பொழுது பெற்ற உதவியைக்கொண்டு முதலில் பெண்களுக்கான விடுதயையும், பின்னர் ஆண்களுக்கான விடுதயையும் கட்டினார். இந்த விடுதியில் இருந்த குழந்தைகளை தங்கள் குழந்தைகள் போலவே ஜெசிமெனும், ஈவ்லினும் வளர்த்தனர். மரிக்கும் தருவாயில் வியாதிப்படும் குழந்தைகளையும் சிகிச்சை அளித்து விடுதியில் வைத்து பராமரித்து வந்தனர். விடுதியில் இருந்த பிள்ளைகள் காலை ஏழு மணிக்கு ஆலயம் சென்று ஜெபித்த பிறகு, ஜெசிமென் கட்டியிருந்த பள்ளிக்கு செல்ல வேண்டும். அங்கே அவர்களுக்கு தோட்டக்கலை, பாய் நெய்வது, நெசவு, பட்டுபூச்சி வளர்ப்பு, பட்டு தயாரிப்பு, கட்டிட வேலை, மற்றும் தச்சு வேலையும் கற்றுதரபட்டன.
கொல்லிமலையில் 9 பள்ளிக்கூடங்களை கட்டி அந்த ஜனங்களின் கல்வி அறிவை வளர்த்தார். மலை மக்களுக்காக தான் தங்கிருந்த வீட்டையும் மருத்துவ மனைபோல பயன்படுத்தியுள்ளர். இவை எல்லாவற்றிலும் ஈவ்லின் அம்மையார், ஜெசிமென் பிராண்டு ஐயாவிற்கு உறுதுணையாக இருந்தார். ஒரு வருடத்தில் ஏறக்குறைய 25000 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து அவர்களுக்கு கிறிஸ்த்துவின் அன்பை வெளிபடுத்தினார். அறுநூறுக்கும் அதிகமான அறுவை சிகிச்சைகளை கொல்லிமலை மக்களுக்காக செய்துள்ளார்.

மலைவாழ் மக்கள் பணக்காரர்களிடம் வட்டிக்கு வாங்கி கொத்தடிமைகள் போல வாழ்ந்துவந்தார்கள். இதை மாற்றியமைக்க வேண்டும் என்று உறுதிகொண்ட ஜெசிமென், காடு மேடு என பாராமல் கொல்லிமலையின் எல்லா வீடுகளுக்கும் சென்று புள்ளிவிவரம் சேகரித்து அதை சர்க்காருக்கு அனுப்பிவைத்தார். அந்த புள்ளி விவரப்படி எல்லா பழங்குடி மக்களும் முப்பது முதல் முப்பத்தைந்து வரை கடன்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த நாட்களில் 35 ருபாய் என்பது பெரிய தொகையாய் இருந்தது. மக்கள் பணக்காரர்களிடம் பணம் வாங்குவதை தடுக்க சர்க்காரே மக்களுக்கு குறைந்த வட்டிக்கு கடன் வழங்க வேண்டுமென சர்க்காருக்கு தெரிவித்தார். இதினால் உதித்ததே இன்றைக்கு அநேக இடங்களில் காணப்படும் கூட்டுறவு வங்கி (Co-Op Credit Society Bank) என்னும் குறைந்த வட்டிக்கு கடன் வழங்கும் வங்கி. அதை அறிமுகப்படுத்தி நடைமுறைக்கு கொண்டு வந்தவர் ஜெசிமென் பிராண்ட் ஆவார்.

வருவாய் துறை அதிகாரிகளால் 400-க்கும் அதிகமான பழங்குடி மக்கள் 20 வருடத்திற்கும் அதிகமாய் குடியிருந்த மக்கள் மிருகத்தனமாக துரத்தப்படத்தை அறிந்து, நாமக்கல் வரை மக்களோடு சேர்ந்து முன்னின்று நடந்து சென்று, சேலம் ஆளுனரை சந்தித்து நடந்ததை எடுத்துக்கூறி மக்களின் நிலங்களை அரசிடமிருந்து மீட்டுக்கொடுத்தார். இப்படியாய் அந்த மக்களுக்காக அரும்பாடு பட்டு அவர்களில் ஒருவராகவே தன்னையும் இணைத்து ஊழியம் செய்தார் திரு. ஜெசிமென் பிராண்ட்.

சிறந்த கட்டிட கலைஞரும், தச்சருமான திரு. ஜெசிமென் பிராண்ட் வாழவந்திக்கு வந்த பிறகுதான்மரம்வெட்டி பலகை அறுத்தல், பலகைகளை பக்குவப்படுதுதல் போன்ற தொழில்கள் அங்கு அறிமுகமாயின. அதுவரை ஒலைகுடிசைகளில் வாழ்ந்த மக்கள் மரபலகைகள் மூலம் தங்களுக்கு வீடுகள் அமைக்க தொடங்கினர்.

கொல்லிமலை மக்களுக்கு, விஞ்ஞான முறையில் நூதனமாக தயாரிக்கப்பட்ட உரத்தை எப்படி உபயோகித்து, எப்படி விளைச்சலை பன்மடங்காக பெருக்குவது போன்றவற்றை முதலில் கற்றுக்கொடுத்தவரும் திரு. ஜெசிமென் பிராண்ட் தான். அந்த காலத்தில் இந்தியாவில் உரமிடுவது என்றால் எப்படி என்று யாருக்குமே தெரியாமல் இருந்தது. இங்கிலாந்தில் தான் ஒரு விவசாய பண்ணை அதிபரின் மகனாக இருந்ததால் அவருக்கு தெரிந்திருந்த உரமிடும் முறையை, கொல்லிமலை மாக்ளுக்கு அறிமுகப்படுத்தி, தமிழக மக்களை விவசாயத்தில் முன்னேற்றினார்.

ஜெசிமென் பிராண்ட் நடத்தி வந்த கைத்தொழில் பள்ளியில் அநேக மாணவர்கள் பயின்று வந்தார்கள். அவர்கள் மூலம் யாருமே சாதரணமாக மனதிலும் நினைக்ககூடாத பட்டு பூச்சி வளர்க்கும் தொழிலையும் ஆரம்பித்துவிட்டார். ஏராளமான முசுக்கொட்டை செய்திகளை வளர்த்து, அதில் பட்டு புழுக்களை வளர்த்து, அதன் மூலம் நெசவுத்தொழில் ஆரம்பித்து அழகான பட்டு துணிகள் தயாரிக்கப்பட்டன. இவைகளுக்கு வெளிஊர்களில் நல்ல வரவேற்ப்பு இருந்தால் மக்களின் வாழ்க்கை தரமானது படிப்படியாய் உயர ஆரம்பித்தது.

அடர்ந்த காடுகளினூடே இங்கும் அங்குமாய் செல்லும் கொடி பாதைகளைத் தவிர சற்றும் வசதியான பாதைகளை கொல்லிமலையில் காணமுடியாது. இந்த குறையை தீர்க்க திரு. ஜெசிமென் பிராண்ட் ஒரு திட்டம் போட்டு அதிக மக்கள் நடமாட்டம் இருந்த கொல்லிமலையின் வட பகுதிகளுக்கு அநேக கிலோ மீட்டர்கள் நல்ல பாதையை வெட்டுவித்தார். இது தான் திரு. ஜெசிமென் பிராண்ட் அவர்கள் மக்களுக்காக செய்த கடைசி சேவையாகும்.

திரு. ஜெசிமென் பிராண்ட் அவர்கள் தமது சொந்த முயற்ச்சியால் தேவாலயம், 9 பள்ளிகள், மருத்துவ மனை, அனாதைப் பெண்கள் விடுதி, ஆண்கள் விடுதி, விவசாய பண்ணை மற்றும் பட்டு புழு வளர்க்கும் பண்ணை போன்றவை அமைத்து கொல்லிமலை என்று அழைக்கப்பட்ட மரண மலையை, மக்கள் வாழும் இடமாக மாற்றிக்காட்டினார். இவை எல்லாவற்றிலும் சுவிசேஷம் சொல்ல அவர் மறந்திருக்கவில்லை. ஜெசிமென் செய்த சமுதாய சீர்திருத்த புரட்சி இன்றளவும் கொல்லிமலையில் நினைவு சின்னங்களாக நிற்கின்றது.

ஜெசிமெனின் கடைசி நாட்கள்
கொல்லிமலையில் பரவி வந்த மலேரியா காய்ச்சலும், விஷ காய்ச்சலும் ஜெசிமெனையும் விட்டுவைக்கவிலை. கரறுப்பு நீர் காய்ச்சல் :”Black Water Fever” என்னும் வினோத காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். மருத்துவர்களும், ஈவ்லினும் எவ்வளவோ முயன்றும் காய்ச்சல் விட்டபாடில்லை. 1929-ம் வருடம் ஜூன் மாதம் 15-ம் தேதி மாலை வேளையில், நல்ல போர்சேவகன் தன் ஆத்துமாவை நேசரின் கையில் ஒப்படடைத்து, கிறிஸ்துவுகாய் நல்லதொரு போராட்டத்தை போராடி முடித்தார். ஜெசிமென், தான் கட்டின மர வீட்டின் அருகிலேயே கோதுமை மணியாக விதைக்கப்பட்டார். ஒரு வாரத்திற்குள் தன்னுடைய வாழ்வில் நேர்ந்த இழப்பை தாங்கமுடியாமல் ஈவ்லின் கதறினார். ஜெசிமென் ஐயா அவர்களின் சவகுழிக்கு அருகில் முழங்கால் படியிட்டு, கோதுமை மணி நிலத்தில் விழுந்தது, மிகுந்த பலன் எப்போது என்று கண்ணீர வடித்தார்.

44 வயதே வாழ்ந்த திரு. ஜெசிமென் பிராண்ட் அவர்கள் தமது வாழ்நாளில் 17 வருடங்களை கொல்லிமலை மக்களுக்காக தியாகம் செய்து மலைமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இன்றளவும் மலைமக்களின் உள்ளத்தில் வாழ்ந்து வருகிறார். நீங்கள் கிறிஸ்துவின் அன்பை எடுத்துரைக்க திட மனதோடு ஆயத்தமாய் இருகீன்றீர்களா?

விசுவாசத்தில் வாழ்க்கை

ஈவ்லின் அம்மையார் (1879-1974) - மிஷினரி வாழ்க்கை வரலாறு

மிஷினரி வாழ்க்கை வரலாறு - ஈவ்லின் அம்மையார் (1879-1974)

முதிர்வயதிலும் கொல்லிமலையில் நற்செய்தியை அறிவித்த ஈவ்லின் அம்மையார்

1911- ம் ஆண்டு கொல்லிமலையை குறித்த ஜெசிமெனின் கட்டுரை அநேகருக்கு ஆத்தும ஆதாய பாரத்தை ஏற்படுத்தியது. அதில் ஒருவர் திருமதி. எல்னா என்ற விதவை மற்றொருவர் ஈவ்லின்: ஒரு செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர், ஜெசிமெனைப் போல எல்லா செல்வத்தையும் உதறி விட்டு இந்தியாவில் தேவப்பணி செய்ய தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். பாரத்தோடு இந்தியா நோக்கி பயணம் செய்தார்கள். ஈவ்லின், நீலகிரி மலையில் உள்ள குன்னூரில் தமிழ் மொழி கற்க அனுப்பபட்டார்கள். ஜெசிமனுக்கோ சென்னையில் இருந்து ஊழியம் செய்வதோடு, பாப்டிஸ்ட் சங்கத்தின் மற்ற பொறுப்புகளையும் கவனிக்க வேண்டியதாய் இருந்தது. எல்லா மிஷனரிகளுக்கும் சங்கத்தின் செய்திகளை கடிதம் அனுப்பும் வேலையும் நியமிக்கப்பட்டது. இந்த நிலையில் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஈவ்லினை கடிதங்கள் மூலம் தேற்றினார் ஜெசிமென். தேவனிடமிருந்து பெற்ற “TRUST and TRIUMPH’ என்ற வார்த்தையை ஈவ்லினோடு பகிர்ந்து கொண்டு குணமடைய உதவி செய்தார் ஜெசிமென். 1913-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் சேந்தமங்கலத்தில் ஜெசிமெனுக்கும் ஈவ்லினுக்கும் SBM ஆலயத்தில வைத்து திருமணம் நடந்தது. திருமணம் நடந்த அன்று மாலையே திருமனதம்பதியினர் கொல்லிமலையை நோக்கி பிரயாணத்தை ஆரம்பித்தார்கள். ஏற்கனவே ஜெசிமென் வாழவந்தி என்ற இடத்தில் கட்டியிருந்த மரவீட்டிர்க்கு பல கிலோ மீட்டர்கள் நடந்தும், டோலியிலும் வந்து சேர்ந்தார்கள். பின்னர் அநேக மெடிக்கல் கேம்ப்கள் மூலம், கிராமங்களை சந்தித்தனர். கிட்டத்தட்ட 10 நாட்கள் ஒரு பகுதியில் தங்கி மெடிக்கல் கேம்ப்கள் நடத்தினர். அந்த நேரத்தில் அந்த கிராமங்களில் இருக்கும் ஆடு அல்லது மாட்டு கொட்டகைகளே அவர்களுக்கு தங்குமிடமாக இருந்தது.

கொல்லிமலையில் இயேசுவின் நற்செய்தி

கொல்லிமலை தமிழ் நாட்டின் கிழக்கு தொடர்ச்சி மலையை சார்ந்தது. இங்கு காராளர் என்ற மலை ஆதிவாசி மக்கள் வசிக்கின்றனர். இது கடல் மட்டத்திலிருது 3000 முதல் 4000 அடி உயரமுள்ளது. 40Km நீளமும் 16Km அகலமும் கொண்ட காடுகள் அடர்ந்த பிரதேசம். இங்கு கரடி, செந்நாய் போன்ற மிருகங்கள் காணப்படுகிறது. இது பதினான்கு நாடுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நாட்டிலும் பல கிராமங்கள் இருந்தது. மேலும் கொல்லிமலையானது கொடிய மலேரியா பிரதேசமாக இருந்தது. எந்த ஒரு மிஷனரியும் கால் வைத்திராத கிராம்கள் இருந்தது. ஒரு கிறிஸ்த்தவன் கூட இல்லாதிருந்தது. எந்த பள்ளி கூடமும் இல்லாதிருந்தது. குழந்தை திருமணம் அதிகளவில் காணப்பட்டது. ஒரு பெண்ணும் ஆணும் விபச்சாரத்தில் பிடிபட்டால், அந்த விபச்சாரத்தில் ஈடுபட்ட மனிதன், ஊர் மக்களுக்கு, கேள்விறகு கழி செய்து, பன்றி இறைச்சியோடு விருந்து கொடுக்க வேண்டும். அப்பொழுது அவன் பாவம் மன்னிக்கப்பட்டு அவன் விபச்சாரத்தில் ஈடுபட்டவளோடு சேர்ந்து வாழலாம். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தால், அவளுடைய பழைய புருஷனுக்கு அவன் பணம் கொடுக்க வேண்டும். பழைய கணவர் மேலும் அந்த பெண்ணை உரிமை கூற முடியாது. ஆனால் அவன் வேறு திருமணம் செய்து கொள்ளலாம். இந்த மலை மக்கள் ஆவி வணக்கத்தை உடையவர்கள், இவர்கள் பேய்களின் தலைவன் இருசிக்கருப்பனுக்கு பன்றியின் இரத்தத்தை ஊற்றிவிட்டு, பன்றி இறைச்சியை சாப்பிடுவார்கள். இங்கு வாழும் மக்கள் பூசாரிகளிடம் குறிகேட்பதர்க்கும், வியாதி வந்தாலும் செல்வார்கள். ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு பூசாரியின் ஆளுகைக்கு உட்பட்டது. ரோடு வசதி என்பது முற்றிலும் இல்லாததால் வெளிஉலகத்துடன் முற்றிலும் தொடர்பில்லாதிருந்தது. இப்படிப்பட்ட மலைபகுதியில் யார் சென்று ஊழியம் செய்ய முடியும், யார் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க கூடும். 1913-ம் ஆண்டு ஜெசிமென், ஈவ்லின் தம்பதியினர், பாடுகளும் கடினமானதுமான கொல்லிமலைக்கு இயேசுவின் அன்பை எடுத்து சென்றார்.

ஜெசிமென் மரணமும் ஈவ்லின் அம்மையாரின் இங்கிலாந்து பயணமும்

கொல்லிமலை, பச்சமலை, கல்வராயன் மலைகள், போதமலை, பைத்தூர் மலை என்ற 5 மலைகளில் கிறிஸ்துவை அறியாமல் வாழும் மக்களுக்கு கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும் என்று உறுதிமொழி செய்திருந்தனர் ஜெசிமென், ஈவ்லின் தம்பதியினர். ஆனால் எதிர்பாராத விதமாக ஜெசிமென் மரித்துபோனதால் கொல்லிமலை மற்றும் பச்சைமலைக்கு மட்டுமே சென்று கிறிஸ்த்துவை அறிவிக்க முடிந்தது. இந்நிலையில் தகப்பனை இழந்த தமது பிள்ளைகளை பார்க்க இங்கிலாந்து சென்றார் ஈவ்லின் அம்மையார். சில நாட்கள் பிள்ளைகளோடு செலவழித்த பின் மீண்டும் கொல்லிமலைக்கு வந்து ஊழியத்தை தொடர ஸ்ட்ரிக்ட் பாப்டிஸ்ட் மிஷனில் விண்ணபித்தார். ஆனால் தனியாக, வயதான காலத்தில் ஈவ்லின் கொல்லிமலைக்கு செல்லுவதை விரும்பாத ஸ்ட்ரிக்ட் பாப்டிஸ்ட் மிஷன், ஈவ்லினுடைய விண்ணப்பத்தை நிராகரித்தது. தொடர்ந்து அந்த மிஷனில் பணி செய்த ஈவ்லின் அம்மையார் தனக்கு கிடைக்கும் சிறு சம்பளைத்தை கொல்லிமலை ஊழியத்திற்காக சேர்த்து வைக்க தொடங்கினார். தான் தனது கணவரோடு, கொல்லிமலையில் செய்துவந்த ஊழியத்தை எப்படியாவது தொடர வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்தாலும் பாப்டிஸ்ட் மிஷன் அதற்க்கு ஒத்துழைக்கவில்லை. மிஷனுடைய அனுமதி பெற்றபின் தான் அவரால் இந்தியாவிற்கு மீண்டும் வர முடியும். ஈவ்லின் இப்படியாக 18 வருடம் இங்கிலாந்தில் இருக்க நேரிட்டது. தனது 68-ம் வயதில் தன்னை ஒரே ஒரு முறை இந்தியாவிற்கு அனுப்பும் படியாகவும், மிஷன் கொடுக்கும் இடத்தில தங்கி ஒரு வருடம் மாத்திரம் தங்கி ஊழியம் செய்து, ஓய்வுபெற்ற பின் மீண்டும் இங்கிலாந்து வந்து விடுவதாகவும், மிஷனுக்கு தாழ்மையோடு தெரிவித்தார். இந்தியா சென்று ஒரு வருடம் ஊழியம் செய்ய மிஷன் அனுமதி அளித்தது. ஈவ்லின் அம்மையார் தனது 68-ம் வயதில் இறுதியில் 1947-ம் வருடம் ஜனவரி மாதம் சென்னை வந்தார்.

கொல்லிமலையில் ஈவ்லின் அம்மையாரின் ஊழியம்

ஒரு வருட ஊழியத்தை சென்னை பாப்டிஸ்ட் மிஷனில் செய்த ஈவ்லின் அம்மையார், தனது 70-ம் மிஷனில் இருந்து ஓய்வு பெற்றார். பின்பு இங்கிலாந்து செல்லும் வாய்ப்பை புறக்கணித்து, ஜெசிமென் விட்டு சென்ற கொல்லிமலை ஊழியத்தை தொடர கொல்லிமலை சென்றார். ஐந்து மலைகளுக்கு இயேசுவை அறிவிக்க வேண்டும் என்று தம்பதியினர் எடுத்திருந்த காரியத்தை நிறைவேற்ற 70 வயது நிரம்பிய ஈவ்லின் அம்மையார் கிறிஸ்த்துவின் பெலத்தொடு மரண மலையாகிய கொல்லிமலைக்கு சென்றார்.

ஜெசிமென் இறந்து ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு பின்பு கொல்லிமலைக்கு வந்த ஈவ்லின் அம்மையார் தமது கனவரின் கடைசி வார்த்தையாகிய “கொல்லிமலை கர்த்தருடைய மலை ஆகுவதாக” என்ற ஆசையை நிறைவேற்ற துரிதமாய் செயல்பட்டார். குதிரை சாவரி செய்தும், டோலியில் சென்றும், அனுதினமும் 20 கிலோமீட்டருக்கும் அதிகமாக நடந்து, பல கிராமங்களை சந்தித்து கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தார். டோலி என்பது 9 அடி நீளமுள்ள இரண்டு மூங்கில்கள், மத்தியில் துணியிருக்கும். இதில் ஆட்கள் ஏறி உட்கார்ந்து கொள்ளுவார்கள். இதை முன்னால் இருவரும் பின்னால் இருவருமாக தூக்கிசெல்வார்கள். இவ்வாறாக ஒருமுறை டோலியில் செல்லும் பொழுது, தூக்கி சென்றவர்கள் தவறி விழுந்ததால், ஈவ்லின் அம்மையார் பாறையில் விழுந்து, தலையில் அடிபட்டு, எலும்பு முறிவுடன் உயிர் தப்பினார். அந்த சூழ்நிலையிலும் தொடர்ந்து மக்களுக்கு நற்செய்தியை அறிவித்து வந்தார். கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைதிருக்கும் கொல்லிமலை, பச்சமலை, கல்வராயன் மலைகள், போதமலை, பைத்தூர் மலையில் வசிக்கும் மக்களுக்கு கிறிஸ்துவின் அன்பை முதலாவதாக அறிவிக்கும் சிலாக்கியத்தை பெற்றார். கொல்லிமலைக்கு மிஷனரியாக அர்பணித்திருந்த. ஈவ்லினுடைய அண்ணன் மகள் ரூத் ஹாரிஸ், அம்மையாருக்கு இந்த காலகட்டத்தில் உருதுணையாக இருந்தார். 70 வயதில் ஊழியத்தை தொடங்கிய ஈவ்லின் அம்மையார் தனது 95-ம் வயதில், 1974-ல் மரணத்தை சந்திக்கும் வரை மலைமக்ளுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து தனது கணவர் திரு. ஜெசிமென் பிராண்ட் அவர்களின் கல்லறை அருகினில் கொல்லிமலையிலேயே கோதுமை மணியாக விதைக்கப்பட்டார்.
44 வயதே வாழ்ந்த திரு. ஜெசிமென் பிராண்ட் அவர்கள் தமது வாழ்நாளில் 17 வருடங்களை கொல்லிமலை மக்களுக்காக தியாகம் செய்து மலைமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இன்றளவும் மலைமக்களின் உள்ளத்தில் வாழ்ந்து வருகிறார். 70 வயதில் ஊழியத்தை துவங்கிய ஈவ்லின் அம்மையார் அவர்கள் கொல்லிமலையின் 14 நாடுகளிலுமே கிறிஸ்துவின் அன்பை கொண்டுசென்ற முதல் மிஷனரியாக மாறினார். அம்மையாரின் முதிர் வயதிலும், தனது சரீர பெலவீனத்தின் மத்தியிலும் கர்த்தருக்காய், ரோடு வசதிகள் இல்லாத மலைப்பகுதிகளுக்கு கிறிஸ்த்துவின் அன்பை எடுத்து சென்றார். இன்றைக்கு அத்திருப்பணியை அருட்திரு. எலியாஸ் ஐயா அவர்களும், மற்றும் 15 ஊழியர்களும் கொல்லிமலை மக்களுக்காக ஊழியம் செய்து வருகின்றனர்.

இளைஞர்களாகிய ஆண்களே, வாலிப பெண்களே இயேசு கிறிஸ்துவுக்காக எதையும் செய்ய துணிந்து நிற்கும் காலம் முடிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள். தேவ ஊழியர்கள் கால் வைக்காத இடங்களும், சுவிசேஷம் செல்லாத இடங்களும் இன்னும் அனேகம் உண்டு. எங்கோ பிறந்த திரு. ஜெசிமென் பிராண்ட் ஐயா தமிழகம் வந்து, கொல்லி மலை மக்களுக்காக அரும்பாடு பட்டு கிறிஸ்துவின் அன்பை அந்த ஆதிவாசி ஜனங்களுக்கு கொண்டு சென்றாரே. ஈவ்லின் அம்மையார் தனக்கிருந்த செழிப்பான வாழ்கையை உதறித்தள்ளி 95 வயது வரை சரீர பெலவீனத்தின் மத்தியிலும் கிறிஸ்துவின் அன்பை அந்த ஆதிவாசி ஜனங்களுக்கு கொண்டு சென்றாரே. நீங்கள் கிறிஸ்துவின் அன்பை எடுத்துரைக்க திட மனதோடு ஆயத்தமாய் இருகீன்றீர்களா?

(குறிப்பு “PREVIOUS PICTURE” சென்று திரு. ஜெசிமென் பிராண்ட் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்)

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

மிஷனரி பணிக்கு சிறுவர்கள் கொடுத்த உதாரத்துவ காணிக்கை

18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்த SABBATH SCHOOL- ஐ சேர்ந்த சிறு குழந்தைகள், வெளி தேசங்களில் திருப்பணியாற்றிய மிஷனரிகளுக்கு தங்களால் இயன்ற அளவு உதவி செய்தனர். இந்த SABBATH SCHOOL-ஆனது JAMES WHITE என்பவரால் 1852-ம் வருடம் SEVENTH DAY ADVENTIST சபையினரால் துவங்கப்பட்டது. சனிகிழமை ஆராதனைக்கு முன்னதாக நடைபெறும் SABBATH SCHOOL-ல் அநேக பெரியவர்கள், வாலிபர்கள், சிறுவர்கள் பங்கு பெறுவார்கள். அந்த வகுப்புகளில் மிஷனரிகளின் சாட்சிகளையும் அவர்களது ஊழிய தேவைகளையும் அறிவிப்பது அந்நாட்களில் வழக்கம். இப்படியாக ஒரு நாள் Mr.HUTCHINGS (1835-ம் வருடம் சிலோன் தேசத்திற்கு மிஷனரியாக சென்று பின்னாட்களில் இந்தியாவில் மிஷனரி ஊழியம் செய்தவர்) என்பவரைக் குறித்து அறிவிக்கையில், அதைக்கேட்ட சிறுவர்கள் தங்களுக்கு கிடைக்கும் சிறு தொகையை சேமித்து அந்த பணத்தை மிஷனரிகளுக்கு அனுப்ப தொடங்கினார்கள். அதிலே குறிப்பிட்ட ஏழு சிறுவர்கள் , தாங்கள் எப்படி மிஷனரிகளுக்கு உதவுகின்றோம் என்பதை, இந்தியாவில் மிஷனரியாக பணியாற்றிய Mr.HUTCHINGS கடிதம் மூலமாக தெரிவித்தார்கள்.

முதலாம் சிறுவனின் கடிதம்
Mr.HUTCHINGS அவர்களே, நீங்கள் சிலோனுக்கும், இந்தியாவுக்கும் சென்று கிறிஸ்துவை அறியா பாமர மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கிறீர்கள் என்பதை கேட்டு மகிழ்கின்றேன். ஒரு வாரத்தில் ஆறு செண்டுகளை என்னால் அனுப்ப முடியும். எப்படியெனில் நான் டீ, பால், காபி போன்றவற்றை குடிப்பதை தவிர்த்து அதினால் சேமிக்கப்படும் பணத்தை உங்கள் மிஷனரி ஊழியத்திற்கு அனுப்புகிறேன்.

இரண்டாவது சிறுவனின் கடிதம்
Mr.HUTCHINGS அவர்களே, மிஷனரி பணி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறு பைகளை தைத்து அதை விற்பதால் எனக்கு சிறிதளவு பணம் கிடைக்கின்றது. இன்னும் அநேக பைகளை தைத்து அதிலிருந்து வரும் பணத்தை உங்கள் மிஷனரி ஊழியத்திற்கு அனுப்பபி வருகிறேன்.

மூன்றாவது சிறுவனின் கடிதம்
Mr.HUTCHINGS அவர்களே, நான் எனது நண்பர்களும் பல தோட்டங்களை பராமரிப்பு செய்தும், நாங்களே வீட்டில் சிறய தோட்டம் அமைத்து, அங்கு விளையும் காய் கறிகளை விற்றும் பணத்தை சேமிகின்றோம். அந்த பணத்தை முழுவதும் உங்கள் மிஷனரி பணிக்காக கொடுக்கின்றோம். எங்களால் முடிந்தவரை உழைத்து அதிலிருந்து வரும் பணத்தில் மிஷனரிகளை தாங்குகிறோம்.

நான்காவது சிறுவனின் கடிதம்
Mr.HUTCHINGS அவர்களே, அநேக குழந்தைகள் இயேசுவைப் பற்றி தெரியாமலும், பரிசுத்த வேதாகமம் இல்லாமலும் இருகின்றர்களே. அவர்களுக்கு வேதாகமம் சென்றடைய நாங்கள் எங்கள் பணத்தை சேமித்து அனுப்புகிறோம்.

ஐந்தாவது சிறுவனின் கடிதம்
Mr.HUTCHINGS அவர்களே, மிஷனரி ஊழியத்திற்கு பணத்தை அனுப்புவது எனது கடமையும் இன்றியமையாததுமாகும். என்னால் சேமிக்ககூடிய ஒரு சென்ட் பணத்தையும் கூட சேமித்து அதைநான் மிஷனரி ஊழியத்திற்காக அனுப்பி வருகிறேன்.

ஆறாவது சிறுவனின் கடிதம்
Mr.HUTCHINGS அவர்களே, நான் சாக்லேட் வாங்கும் பழக்கத்தை நிறுத்தி அதினால் சேமிக்கப்படும் பணத்தை உங்கள் மிஷனரி ஊழியத்திற்கு அனுப்பி வருகிறேன. இன்னும் என்னால் இயன்ற அளவு சேமித்து அனுப்புகிறேன்.

ஏழாவது சிறுவனின் கடிதம்
Mr.HUTCHINGS அவர்களே, நான் அங்கிருந்து அந்த மக்களுக்கு இயேசுவைக் குறித்து அறிவித்து அவர்களை பரலோகத்திற்கு நேராய் நடத்தவேண்டும். இல்லையென்றால் அவ்வாறு நடத்தும் உங்களைப்போன்ற மிஷனரிகளுக்கு உதவி செய்து அவர்கள் பரலோகம் செல்வதற்கு நானும் ஒரு வகையில் உதவ வேண்டும். எனவே என்னால் முடிந்த அளவு பணத்தை சேர்த்து அனுப்பி வருகிறேன்.

மேலே எழுதப்பட்டிருக்கும் கடிதகள் 18 வயதிற்குட்பட்ட சிறுவர் மற்றும் வாலிபர்களால் எழுதப்பட்டுள்ளது. இந்த சிறுவர்களுக்கு ஒரே வாஞ்சை எப்படியாவது, மிஷனரிகளை தாங்கி கிறிஸ்த்துவை அறியாத பாமர மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பது தான். இந்த சிறுவர்களை பலவிதமான வேலைகளை செய்தும், தங்களுடைய பழக்க வழக்கங்களை வெறுத்தும் பணத்தை சேர்த்து மிஷனரிகளை தாங்கினார்கள் என்பதை இந்த கடிதங்களிலிருந்து நம்மால் அறிந்து கொள்ளமுடிகின்றது.

தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் (உபாகமம் 15:11). மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத்தேயு 25:40). அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார் (2 கொரிந்தியர் 9:7). நாமும் இயன்ற அளவு மிஷனரி ஊழியங்களை, நமது காணிக்கைகள் மூலம் தாங்க வேண்டும் என்பதையே அந்த சிறுவர்களின் கடிதங்கள் நமக்கு தெரிவின்கின்றது.

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

மிஷனரி சகாப்தம் - ஸ்கட்டர் குடும்பம்

டாக்டர். ஜான் ஸ்கட்டர் (சீனியர்) உலகத்தின் பல மூலைகளுக்கும் கிறிச்த்துவின் அன்பை எடுத்து சென்றவராவர். இவரது மரபு வழியில் வந்த அடுத்த நான்கு தலைமுறையில் 42 மிஷனரிகள் எழும்பி அணைவரும் சேர்ந்து 1100 க்கும் அதிகமான வருடங்கள் இறைப்பணியும் மருத்துவப்பணியும் செய்து இயேசுவின் அன்பை உலகத்திற்கு காண்பித்துள்ளனர்.

டாக்டர்.ஜான் ஸ்கட்டரின் (சீனியர்) ஏழாவது மகனாகிய “ஜான் ஸ்கட்டர் II” –க்கு பிறந்தவர் தான் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் – ஐ நிறுவிய டாக்டர். ஐடா ஸ்கட்டர். தமிழ் மக்களுக்கு டாக்டர்.ஜான் ஸ்கட்டரின் குடும்பத்தினர் ஆற்றிய அருட்பணியால் திண்டிவனம், வேலூர், இராணிப்பேட்டை, குடியாத்தம் ஆகிய இடங்களில் அநேக மக்கள் கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டனர். காலரா, பிளேக். மஞ்சள் காமாலை போன்ற உயரி கொல்லி நோயினால் மரணத்தை நோக்கி ஓடிகொண்டிருந்த தமிழ் மக்களுக்கு ஸ்கட்டர் குடும்பத்தினர் செய்த மருத்துவப்பணிகள் இன்றளவும் தமிழ்நாட்டின் வேலூரில் தொடர்ந்து வருகிறது.

டாக்டர்.ஜான் ஸ்கட்டர் (1793-1855)

டாக்டர்.ஜான் ஸ்கட்டர் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள ப்ரீஹோல்ட் (FREEHOLD) என்ற ஊரில் ஜோசப் (வக்கீல்) – மரியா ஸ்கட்டர் என்ற தம்பதியினருக்கு 1793-ம் வருடம் செப்டம்பர் 3 தேதி செல்வ மகனாகய் பிறந்தார். New York College of Physicians and Surgeons கல்லூரியில் 1813-ம் வருடம் தமது மருத்துவ படிப்பை முடித்து தனது மருத்துவ வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினார். 1813-ம் வருடம் ஹாரியட் என்ற பெண்ணை திருமணம் செய்தார். அந்த நாட்களில் அதிகளவு மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் மருத்துவர்களுக்கு நல்ல வரவேற்ப்பு இருந்தது. அதுமட்டுமில்லாமல் ஜான் ஸ்கட்டரின் திறமையும் கனிவோடு நோயாளிகளை கவனிக்கும் திறமையும் அநேகரை கவர்ந்ததால் வருடத்திற்கு 2000$ சம்பாதிக்கும் அளவுக்கு மிகப்பெரிய மருத்துவரானார். ஐந்து வருடங்கள் அமெரிக்காவிலேயே மருத்துவராக பணி செய்ததால் செல்வமும் புகழும் டாக்டர்.ஜான் ஸ்கட்டருக்கு குவிய தொடங்கியது. ஆயினும் கடவுள் பக்தி மிகுந்தவராய் Reformed Church க்கு சென்று கொண்டிருந்தார். அந்த நாட்களில் அநேகரை மனம் திரும்பதலுக்கு நேராய் நடத்தினார்.

1819-ம் வருடத்தில் ஒருநாள் நோயாளியை சந்திக்க ஒருவரின் வீட்டிற்கு அவர் சென்றிருந்த பொழுது, அங்கு வரவேற்ப்பறையிலிருந்த ஒரு துண்டு தாளின் (Pamphlet) செய்தியாகிய "அறுபது கோடி மக்களின் மனமாற்றத்திற்கு சபைகள் என்ன செய்ய வேண்டும்" என்பதை கண்டார். அதன்மூலம் இந்தியா மற்றும் சிலோனின் மக்களுக்கு தேவைப்பட்ட மருத்துவ பணியை குறித்து அறிந்தார். அந்த கணமே நமது அருமை இரட்சகர் இயேசுவின் குரலையும் கேட்டார்: அது என்னவெனில் “என் பிதா அனுப்பினதைப்போல நான் உன்னை அனுப்புகிறேன்”. அதற்க்கு ஜான் ஸ்கட்டர், “அனுப்பும் ஆண்டவரே நான் போகிறேன்’ என்றார். இதற்கு ஜான் ஸ்கட்டரின் தகப்பனார் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். செல்வ மைந்தன் உலக பெருவாழ்வை நீத்துவிட்டு, வறுமையை உவந்தேற்றுகொண்டு, கடல் கடந்து கண் கானா நாட்டுக்கு சென்று, பசியால் வாடி வதக்கி, கொடிய வெயிலின் கோரப்பிடியில் நலிந்தும் மெலிந்தும் மிஷனரியாக பணியாற்றுவதா? கூடவே கூடாது என ஜான் ஸ்கட்டரின் கையை பிடித்து கெஞ்சி மன்றாடினார் தகப்பன். ஆனால் ஜான் ஸ்கட்டரோ தமது தப்பனின் கைகளை உதறிவிட்டு ஆண்டவர் இயேசுவின் கரங்களை பற்றிக்கொண்டார்.

தம் கனவரின் தீர்மானத்தை மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு தமது இரண்டு வயது பாலகனுடன் இலங்கையை நோக்கி புறப்பட்டார் ஜான் ஸ்கட்டரின் மனைவி ஹாரியட் ஸ்கட்டர். ஜுன் 8, 1819-ம் வருடம், 26 வயது நிரம்பிய ஜான் ஸ்கட்டர் தனது மனைவி ஹாரியட் ஸ்கட்டர் மற்றும் தனது இரண்டு வயது மகள் மரியாளுடன் இந்துஸ் கப்பலில் ஏறினார். 1819-ம் வருடம் கல்கத்தாவில் வந்து சேர்ந்தனர் ஸ்கட்டர் தம்பதியினர். ஆறுமாத கால நெடும் கடல் பயணத்தில் கப்பலில் பணி செய்தவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார் ஜான் ஸ்கட்டர். பின்னர் கல்கத்தாவில் மிஷனரியாக ஊழியம் செய்துகொண்டிருந்த வேதமொழிபெயர்ப்பாளரும் மிஷனரிகளின் தந்தை எனவும் அழைக்கப்பட்ட “வில்லியம் கேரி-யை” செராம்பூரில் சந்தித்தார். அதன் பின்னர் அவர் வாழ்வில் வேதனைகள் சூலத்தொடங்கியது. தனது இரண்டு வயது மகள் மரியா கேத்தரின் வயற்று போக்கினால் அக்டோபர் 25-ம் தேதி மரித்தாள். இந்த சூழ்நிலையில் ஜான் ஸ்கட்டர் இவ்வாறு எழுதினார், “கடினமான சோதனை தான் என்றாலும் முறுமுறுப்பதில்லை. இயற்கையான சோகங்கள் வர வேண்டும். ஒருவேளை நாங்கள் திரும்பி சென்றால் எனது பெற்றோர்கள் எம்மை மன்னித்தது ஏற்றுக்கொள்ளலாம். இல்லை. திருச்சபையின் தலையாகிய கிறிஸ்து என்னை அமெரிக்காவிலிருந்து அழைத்து இந்த மக்கள் மத்தியில் வாழ வைப்பதற்காக நன்றி சொல்கிறேன். அழிந்து போகும் ஆத்துமாவை ஆண்டவர் இயேசுவிடம் சேர்க்கும் பணியை தகுதியற்ற அடியவனிடம் இறைவன் தந்துள்ளார்” என்றார். பின்னர் அதே வருடம் டிசம்பர் மாதம் ஸ்கட்டர் தம்பதியினர் சிலோன் வந்து சேர்ந்தனர். யாழ்ப்பாணம் பகுதியில் மருத்துவப்பணி செய்ய மிஷன் மூலம் நியமிக்கப்பட்டனர் .

யாழ்ப்பாணத்தில் ஸ்கட்டர் தம்பதியினர், 1819-1836

சிலோனில் புத்தர்கள் அதிகமாக இருந்தாலும் யாழ்பானத்தில் அதிக அளவு இந்து மக்கள் காணப்பட்டனர். உற்சாகமாக மக்களுக்கு மருத்துவ பணியை துவங்கிய ஸ்கட்டர் தம்பதியினருக்கு மீண்டும் ஒரு சோதனை காத்திருந்தது. 1820-ம் வருடம் பிப்ரவரி மாதம் ஸ்கட்டர் தம்பதியினருக்கு இரண்டாவது ஒரு ஆண் குழந்தை பிறந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே பிப்ரவரி 25 ல் மரித்துப்போனது. ஆனாலும் ஸ்கட்டர் தம்பதியினர் தங்களுடைய மிஷனரி அழைப்பில் உறுதியாய் நின்றனர்.

அதற்கு பின்னர் இத்தம்பதியினருக்கு எட்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தனர். எட்டு ஆண்களில் ஒருவரான சாமுவேல் ஸ்கட்டர் இறையியல் காலூரியில் படிக்கும் பொழுது நீரில் மூழ்கி இறந்துவிட்டார். மற்ற ஏழு மகன்களும், இரண்டு மகள்களும் தங்களது படிப்பை அமெரிக்காவில் முடித்து பின்னர் தென்இந்தியாவில் மருத்துவ மிஷனரிகளாக இறைப்பணியாற்றினர்.

1820-ம் வருடம் யாழ்ப்பாணத்தில் உள்ள பண்டத்தரிப்பு என்னுமிடத்தில் மிஷன் ஸ்டேஷன், மருத்துவனை மற்றும் பள்ளியை நிறுவினார். பண்டத்தரிப்பு என்னுமிடத்தில் அவைகள் தங்குவதற்கு ஓலையால் வேயப்பட்ட வீடு கொடுக்கப்பட்டது. அமெரிக்காவின் மிகப்பெரிய மருத்துவர் ஜான் ஸ்கட்டர் என்பதை மறந்து கிறிஸ்துவிற்க்காக பாடுகளை சகித்து ஊழியத்தை அனுதினமுமும் செய்து வந்தார். ஜான் ஸ்கட்டர் தான் அமெரிக்காவில் இருந்து வெளிதேசத்திற்கு முதல் மருத்தவ மிஷனரியாக வந்தவர். அவரது கொள்ள்கை என்னவென்றால், மருந்துகள் மூலம் ஒருவரது உடலைக் காப்பாற்றி பின்னர் ஆத்துமாவை காக்க வல்ல இரட்சகரை அறிவிப்பது தான்”. பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் காலரா, மலேரியா, பிளேக், மஞ்சள் காமாலை போன்ற உயிர் கொல்லி நோய்கள் அதிகமாய் பரவின. அந்த நோய்களிலிருந்து அநேகரை காப்பாற்றி இரட்சகரை அறிவித்தனர் ஸ்கட்டர் தம்பதியினர். மருத்துவமனையும் பள்ளியும் மட்டுமின்றி திருச்சபைகளையும் நிறுவினார் ஜான் ஸ்கட்டர். தொடர்ந்து 19 வருடங்கள் யாழ்ப்பாணத்தில் மருத்துவ மிஷனரியாக பணியாற்றி இயேசுவின் நற்செய்தியை அநேக மாக்களுக்கு அறிவித்தனர்.

1821-ம் ஜான் ஸ்கட்டர் தமிழ் மொழியை நன்கு கற்று அநேகருக்கு தமிழில் நற்செய்தியை அறிவிக்க தொடங்கினார். அனுதினமும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளையும் கவனித்து வந்தார். அந்நாட்களில் அச்சு இயந்திரம் அதிகளவு இல்லாத காரணத்தினால் பனை ஓலையில் மைகொண்டு இயேசுவின் அன்பை எளிதி அநேக பகுதிகளுக்கு சென்று கொடுத்து வருவார். அனுதினமும் காலையில் குறையாது 60 நோயாளிகள் அவரது மருத்துவமனைக்கு வருவார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளித்த பின்பு கைகளால் ஓலையில் எழுதிய சுவிஷேச நற்செதியை அநேக மக்களுக்கு கொடுப்பார். அவரது மருத்துவ மற்றும் ஊழியத்தின் மத்தியில் 23 பள்ளிகளை யாழ்பாணம் பகுதியில் நிறுவினார். அதுமட்டுமில்லாமல் 16 ஆண் குழந்தைகளையும் 3 பெண் குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

இந்தியாவில் ஸ்கட்டர் தம்பதியினர்

1836-ம் வருடம் மெட்ராஸுக்கு இடம் மாற்றப்பட்ட ஜான் ஸ்கட்டர் தமது நண்பர் வின்ஸ்லோ உடன் இணைந்து பிரிண்டிங் பிரஸ் ஒன்றை நிறுவி சுவிஷேச துண்டு பிரதிகளை (Pamphlet) தமிழில் அச்சிட்டு வெளியிடும் ஊழியத்தை தொடங்கினார். தான் எப்படி ஒரு சிறிய துண்டுபிரதி மூலமாய் இரட்சிப்பின் அனுபவத்தை பெற்றோமோ அதேபோல அநேக மக்களுக்கு துண்டு பிரதி மூலம் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டுமென விரும்பினார். துண்டு பிரதிகள் மூலம் சுவிசேஷம் அறிவிக்கும் முறையை ஆசியா கண்டத்திற்குள் அறிமுக படுத்தி அதன் மூலம் அநேக ஆத்துமாக்களை கிறிஸ்த்துவுக்குள் அழைத்து வந்தார். சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் தங்கி ஆறு வருடம் மருத்துவ ஊழியத்தொடு துண்டு பிரதி ஊழியத்தையும் செய்தார். இந்தியா முழுவதிலும் துண்டு சுவிஷேச துண்டு பிரதிகளை மக்களிடம் கொடுக்க வேண்டுமென்று சொல்லி அநேக மொழிகளில் அநேக தலைப்புகளில் சுவிஷேச பிரதியை அச்சிட்டார் ஜான் ஸ்கட்டர். மெட்ராஸில் இருந்து காஞ்சிபுரம் மற்றும் வாலஜாவிற்கு அடிக்கடி பயணம் செய்து ஊழியம் செய்து வந்தார். 11 மணி நேரம் வெயிலில் நின்று பிரசங்கம் செய்து துண்டு பிரதிகளை கொடுத்து ஊழியம் செய்ததால் டாக்டர். ஜான் ஸ்கட்டரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. 1842-ம் வருடம் உடல் சுகவீனம் காரணமாக அமெரிக்கா சென்று குணமடைந்த பின்பு 1846-ம் வருடம் மீண்டும் இந்தியா வந்து மதுரையில் தங்கி இரண்டு வருடம் மருத்துவ பணியோடு சுவிஷேச பணியையும் செய்தார். சபைகளில் நிலவி வந்த ஜாதி பார்க்கும் முறைக்கு எதிராக போரிட்டு கிறிஸ்த்துவின் சபையில் அணைவரும் சமம் என்ற கொள்கையை நிலை நாட்டினார் ஜான் ஸ்கட்டர்.

ஸ்கட்டர் தம்பதியினரின் இறுதி நாட்கள்

1849-ம் வருடம் மீண்டும் மெட்ராஸில் மருத்துவ பணியோடு ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டார். அந்நாட்களில் ஹாரியட் ஸ்கட்டரின் உடல் நிலை பாதிக்கப்பட்டு 1849-ம் வருடம் நவம்பர் 29-ம் தேதி தமது 54-ம் வயதில் இறைவனிடம் சேர்ந்தார். மரிப்பத்தர்க்கு முன்னமாக ஹாரியட் அம்மையார் கண்களை துறந்து “மகிமையான பரலோகம், மகிமையான இரட்சிப்பு” என்று சொல்லி கண்களை மூடியுள்ளார். ஜான் ஸ்கட்டரை இது மிகவும் பாதித்தாலும் தமக்கு நியமிக்கப்பட்ட மருத்துவ பணியை செய்து, சுவிஷேச துண்டு பிரதிகளை மக்களிடம் கொடுத்து 1854-ம் வருடம் வரை இறைப்பணி செய்து வந்தார். ஒரு நாளைக்கு இரண்டு பிரசங்கள் செய்து வந்த ஜான் ஸ்கட்டர், மனைவி இறந்த பிறகு வேதனையின் மத்தியிலும் ஒரு நாளைக்கு மூன்று பிரசங்கள் வரை செய்து வந்தார். 1855-ம் வருடம் தென்அமெரிக்காவிற்கு மருத்துவ மிஷனரியாக சென்றார். உற்சாகமாய் ஊழியம் செய்த ஜான் ஸ்கட்டர், 1855-ம் வருடம் ஜனவரி மாதம் 13-ம் தேதி இரவு நித்திரையில் இறைவனடியில் சேர்ந்தார். அவரது உடல் மெட்ராஸுக்கு கொண்டுவரப்பட்டு தமது மனைவியின் கல்லறை அருகிலே புதைத்து பின்னர் ராணிபேட்டையில் அவர்களது உடல் கோதுமை மணியாய் விதைக்கப்பட்டது.

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

இந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங்

இந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது பாய்ந்து கொண்டிருந்தது. கற்களும் முட்களும் அவரது கால்களைக் கிழித்துக்கொண்டிருந்தன. என்றாலும் பனியால் மூடிய மலைகள்மீது அவர் நடந்து கொண்டே இருந்தார். அவருடைய இரத்தம் கசியும் பாதங்கள் அவருக்குப் பின்னால் வெண்மையான பனியின்மீது அடிச்சுவட்டை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. ஒரிடத்தில் அவர் உட்கார்ந்து தன் கால்களின் புண்களைக் கட்ட ஆரம்பித்தார். அவ்வழியே அவருக்குப் பின்னாக வந்த ஒருவர் அவரைப் பார்த்து நின்று அவரோடு பேச ஆரம்பித்தார். ஐயா எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு என்னுடைய அருமை இரட்சகராம் இயேசு கிறிஸ்துவில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சாது சந்தர் சிங் பதில் கூறினார்.

ஏன் நீங்கள் இரத்தம் கசியும் வெறும் கால்களால் மலைமீது இவ்விதமாகப் பயணம்செய்யவேண்டும்?

கல்வாரி சிலுவையிலே தம் கால்களில் இரத்தம் சிந்தின அவரை மக்களுக்குக் காண்பிப்பதற்காக இவ்விதமாகச் செல்கிறேன் என்று பதிலளித்தார்.

சிலுவையில் அறையுண்ட இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை திபெத் நாட்டிற்கு இன்னும் ஆண்டவரைப் பற்றிக் கேள்விப்பட்டிராத இடங்களுக்கும் எடுத்தச் செல்வதற்காகத் தனக்குக் கிடைத்த தெய்வீக அழைப்பை சாது சுந்தர் சிங் முழுவதும் நம்பி அதைச் செயல்படுத்தினார்.

இளமைப் பருவம்
சாது சுந்தர் சிங் என்று பொதுவாக அழைக்கப்படும் சுந்தர் சிங் 1889ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3ம் தேதி பஞ்சாப் மாசிலத்தில் உள்ள ராம்பூர் என்ற இடத்தில் பிறந்தார். இவர் பெற்றோர் சீக்கிய மார்க்கத்தைச் சோந்தவர்களாய் இருந்தனர். அவருடைய தாயார் மத நம்பிக்கையில் மிகவும் பக்தி நிறைந்தவராய் இருந்தார். காலையில் சுந்தர் எழுந்த உடனே முதன் முதலாகத் தேவையான நேரத்தைக் கடவுளிடத்தில் பிரார்த்தனை செய்வதில் செலவழிக்கவேண்டும் என்றும், அதன் மூலம் ஆன்மீக ஆகாரத்தையும் ஆசிகளையும் பெற்று அதன் பின்னரே அவர் காலை ஆகாரத்தை உண்ணவேண்டும் என்று அவரது தாய் மிகவும் வலியுறுத்தினார். தன் மகனை மிகவும் அதிகமாக நேசித்ததினால் தன்னுடைய மகனும் தங்களுடைய மார்க்கத்தை அதிகமாக நேசித்து அதிலே ஒரு பக்தி நிறைந்த சாதுவாக மாறவேண்டும் என்று விரும்பினார். இளமைப் பருவத்திலிருந்தே சுந்தர் இந்து மார்க்கத்தின் புனித நூல்களை, குறிப்பாக பகவத் கீதையை ஆழ்ந்து படித்தார். அவர் ஏழு வயதாக இருக்கும்போது அதை மனப்பாடம் செய்யவும் ஆரம்பித்தார். அவருக்கு மிகவும் அருமையாக இருந்த ஒரு நண்பனின் மறைவு புறமத்தின் புனிதப் பத்தகங்களைப் படிக்கும்படி தூண்டிற்று. அநேக சமயங்களில் வீட்டில் அனைவரும் நித்திரைக்குச் சென்றபின்பு சீக்கியர்களின் புனித புத்தகமாகிய கிரந்தத்தையோ, அல்லது இந்து மத நூல்களையோ அல்லது முஸ்லீம்களுடைய குரானையோ அவர் நுட்பமாகப் படிப்பார். ஆவிக்குரிய வாழ்க்கையில் திருப்தி காணவேண்டும் என்னும் வாஞ்சை ஆயிரக்கணக்கான மக்களுக்கு உண்டு. அதே வாஞ்சை சுந்தரையும் பற்றிக்கொண்டது.

ஜீவிக்கும் கிறிஸ்துவைச் சந்தித்தல்
சுந்தர் படித்துக் கொண்டிருந்த கிராமத்து மிசன் பள்ளிக்கூடத்தில்தான் முதன் முதலாக அவருக்குக் கிறிஸ்து மார்க்கத்தோடு தொடர்பு ஏற்பட்டது. வேதபுத்தகத்திலிருந்து வசனத்தை வாசிக்கச்சொன்னபோது அவருடைய உள்ளம் அதை எதிர்த்துக் குமுறியது. புதிய ஏற்பாட்டைப் பகிரங்கமாக் கிழித்து எறிந்ததின்மூலம் கிறிஸ்து மார்க்கத்தினை எதிர்க்கும் எல்லா மாணவர்களுக்கும் அவர் தலைவரானார். விரைவில் அவர் அந்த மிசன் பள்ளிக்கூடத்தை விட்டு அரசு பள்ளிக்கூடத்தில் போய்ச் சேர்ந்தார். மேலும் தொடர்ந்து கிறிஸ்து மார்க்கத்தையும் கிறிஸ்தவ விசுவாசத்தையும் அவர் ஆழமாகக் கண்டித்தார். பல சமயங்களில் தெருவில் அல்லது திறந்த வெளியில் நின்று பிரசங்கிக்கும் மிசனறிமார்கள் மீது கற்களையோ அல்லது சேற்றையோ எடுத்து வீசும்படியாக முரடர்களை அவா தூண்டிவிடுவதும் உண்டு. அதுமட்டுமல்லாமல் அவர் புதிய ஏற்பாட்டை பகிரங்கமாகப் பலா முன்னிலையில் தீயிட்டுக் கொளுத்தியதும் உண்டு. கிறிஸ்தவ மார்க்கத்தையும் எதிர்த்துப் போராடினார். அதனால் அவருடைய இருயத்தில் குழப்பமும் அமைதியின்மையும் ஏற்பட்டது. இறுதியில் அவர் வேதத்தை வாசிக்க ஆரம்பித்தார்.

உண்மையான சமாதானத்தைக் கண்டுபிடிக்கவேண்டும் அல்லது தன் வீட்டின் பக்கத்தில் கடந்து செல்லும் ரயில் முன் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ளவேண்டும் என்று உறுதிபு+ண்டார். ஒருநாள் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் அவர் எழுந்தார். குளித்து விட்டு கடவுளே, உண்மையான கடவள் ஒருவர் உண்டு என்றால் உம்மை எனக்குக் காண்பியும், இரட்சிப்பிற்கு உரிய வழியையும் சாந்தியையும் நீர் எனக்குத் தரவேண்டும் என்று சொல்லி அவர் nஐபிக்க ஆரம்பித்தார். உடனே அந்த அறையில் ஒரு பேரொளி வீசியது. அதில் அவர் மிகவும் வெறுத்து வந்த இயேசு கிறிஸ்துவின் சாயலைக் கண்டார். அவர் தமது ஆணிகள் பாய்ந்த கரத்தைச் சுந்தருக்குக் காண்பித்து நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? நான் உன்னுடைய இரட்சகர் என்று சொன்னார். இப்பொழுதே சுந்தரின் இதயம் மாபெரும் மகிழ்ச்சியினால் நிரம்பியது. அதுவரையில் தன் வாழ்க்கையில் நாடி தவித்துக் கொண்டிருந்த ஆவிக்குரிய தாகமும் தணிந்ததை அவர் உணர்ந்தார். அவர் வாழ்க்கை முழுவதும் மாறியது. அவர் அடைந்த இந்த மகத்தான பரவசமான அனுபவத்திலிருந்து அவரைச் சந்தேகப்பட வைக்கவோ அல்லது மாற்றவோ யாராலும் முடியவில்லை.

துன்பப்படுவதற்காக அழைப்பு
இவ்விதமான இந்தப் புதிய அனுபவத்தைப் பெற்ற சுந்தர் உடனடியாக தனது தந்தையிடம் சென்று தான் ஒரு கிறிஸ்தவனாகி விட்டதைக் கூறினார். அவருடைய தந்தை இதை முதலில் நம்பவில்லை. ஆனால் பிறகு அவருடைய குடும்பம் முழுவதுமே சுந்தர் கிறிஸ்தவனாக மாறுவதற்கு எடுத்த தீர்மானத்தைக் கண்டு அதிர்ச்சியுற்றது. தன்னுடைய தாயாரின் மார்க்கத்திற்கு எந்த விதமான களங்கமுமு; ஏற்படுத்திவிடக்கூடாது என்று சுந்தரை அவரது தந்தையார் மிகவும் அதிகமாகக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். அவருடைய செல்வந்தரான மாமா ஒருவர் தன்னுடைய பெரிய மாளிகைக்கு அழைத்துச் சென்று அங்கே குவியல் குவியலாக வைக்கப்பட்ட பணத்தையும், வைரத்தையும், பலவிதமான விலையுயர்ந்த கற்களையும் அவருக்குக் காட்டினார். சுந்தர் புதிதாக ஏற்றிருக்கிற இந்த விசுவாசத்தைக் கைவிடுவதானால் ஏற்றிருக்கிற இந்த விசுவாசத்தைக் கைவிடுவாரானால் இவை எல்லாம் கொடுப்பதாக கூறினார். ஆனால் இயேசு கிறிஸ்துவின் அன்பு மிகவும் வலிமையுடன் ஆழமாக இருந்தது. சுந்தரின் இருதயம் இயேசுவை மறுதலிக்கவில்லை. சுந்தர் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டார். உண்பதற்கோ உணவோ, தங்குவதற்கு உறைவிடமோ இல்லை. ஒரு மரத்தின் அடியில் தங்கினார். பிறகு மீண்டும் அவர் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார். ஆனால் வீட்டுக்கு வெளியில் வைத்து உணவு கொடுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட வேலை ஆட்களோடு அவர் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டார். இயேசு கிறிஸ்துவுக்காக இனி தொடர்ந்து அவர் அனுபவிக்கப்போகிற பாடுகளுக்கு இது ஆரம்ப கட்டமாகும். என்றாலும் மனதிலே பரிபூரண மகிழ்ச்சியோடு தனது நாயகராம் இயேசு கிறிஸ்துவுக்காக எதையும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார். கடைசியாக நஞ்சு கொடுக்கப்பட்டு வீடடிலிருந்தே துரத்தப்பட்டு நோய்வாய்ப்பட்டார். இறக்கும் நிலையையும் அடைந்தார். என்றாலும் அவரிடம் அன்புகொண்ட ஆண்டவர் தம் சித்தத்தைச் சுந்தரிலே நிறைவேற்ற மரணப் பிடியிலிருந்து விடுவித்தார்.

இந்தக் கொடி நோயிலிருந்து சுந்தர் விடுபட்டார். இவர் லூதியானாவில் இருந்த மிசனறிகளிடத்தில் சென்று அவர்களோடு தங்கினார். வேதவசனங்களைக் கற்க ஆரம்பித்தார். சுந்தர் தம் 16ம் பிறந்த தினத்தன்று சிம்லா நகரத்தில் ஞானஸ்நானம் பெற்றார். ஆழமான சிந்தனைக்கும் உறுதியான nஐபத்திற்கும் பின்னர் சாது சுந்தர் சிங் தன்னைப் பரிபூரணமாக கிறிஸ்துவின் கரத்தில் அர்ப்பணித்தார். அவர் ஒரு கிறிஸ்தவ சாதுவாக மாறினார். தனிப்பட்ட முறையிலே தனக்குச் சொந்தம் என்று வைத்திருக்க உடைமைகள், தன்னுடைய புத்தகங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவர் காவிஉடை அணிந்துகொண்டார். வெறும் கால்களோடும் கையில் ஏந்திய வேதபுத்தகத்தின் பகுதியான புதிய ஏற்பாட்டோடும் எந்தவிதமான மனிதரின் உதவியும் இல்லாத நிலைமையில் தன்னை ஆட்கொண்ட கிறிஸ்துவுக்கா அவர் புறப்பட்டுச் சென்றார்.

நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக. அவரால் உலகம் எனக்குச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையப்பட்டிருக்கிறேன் (கலா.6:14) என்ற வசனத்தைத் தன்னுடைய வாழ்க்கையில் குறிக்கோளாக அவர் ஏற்றுக்கொண்டார். என்மீது உள்ள அன்பினால் இயேசு கிறிஸ்து தம்மைத் தியாகம் பண்ணினார். அதைப் போலவே நானும் இயேசு கிறிஸ்துவின்மேல் உள்ள என்னுடைய அன்பினால் என்னைத் தியாகம் செய்யவேண்டும் என்று அடிக்கடி கூறுவது உண்டு.

சுந்தர் ஒரு சாது
தனது வாலிபத்தின் துவக்கத்தில் சுந்தர் தனது எஐமானாகிய இயேசு கிறிஸ்துவுக்காகப் பட்டினி, குளிர், சுகவீனம், மற்றும் சிறைவாசத்தையுங்கூட அனுபவித்து விட்டார். தனது எஐமானின் அன்பைப் கேட்டிராத மக்களுக்கு அதனை அறிவிக்கும்படி அவர் ஆண்டுதோறும் பஞ்சாப், காஸ்மீர், ஆப்கானிஸ்தான், நேபாளம், திபெத் ஆகிய இடங்களுக்கு மலைகள், காடுகள் வழியாகத் தன்னந்தனியாகப் பிரயாணம் செய்தார். பல வேளைகிளல் பகை, எதிர்ப்பு இவற்றைச் சந்தித்ததுண்டு. பசியோடு விரட்டப்பட்ட நிலமையில் அவர் காடுகளுக்கு உள்ளாகச் சென்று அங்கே தங்குவர் உண்டு. குளிர்ந்த காற்றிற்கும் மழைக்கும் தன்னைத் தப்பவிப்பதற்காகக் காடுகளிலே உள்ள குகைகளில் அவர் தங்குவது உண்டு. பல வேளைகளில் அவர் தான் தங்கயிருக்கும் குகைகளைக் காட்டு மிருகங்களோடு பகிர்ந்து கொள்வதும் உண்டு. ஒருநாள் காலையில் ஒரு சிறுத்தை தான் தங்கியிருந்த குகையில் தனக்குச் சமீபத்தில் உறங்கிக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார். மற்றொரு முறை ஒரு வேங்கைப்புலியோடுகூட அவர் படுத்து உறங்கியதையும் அறிந்தார். ஒரு நாள் அதிகாலையில் தன்னுடைய போர்வையின் கீழே ஏதோ ஒன்று இருப்பதுபோல, உணர்ந்த அவர் அது என்ன என்று பார்த்தபோது, குளிரால் பாதிக்கப்பட்ட ஒரு பெரிய நல்ல பாம்பு அனல் பெறுவதற்காக அவரோடுகூடப் படுத்திருந்ததையும் அறிந்தார். இமயமலைப் பகுதிகளில் உள்ள கணவாய் வழியாகப் பிரயாணம்பண்ணுவது என்றாலும் அவர் எப்போதுமே வெறுங்கால்களோடுதான் தன் பிரயாணத்தை மேற்கொண்டார். அனபடியினால், கற்கள், பனிக்கட்டிகள் போன்றவற்றினால் அவர் கால்கள் கிழிக்கப்பட்டு அவர் கால்களில் இரந்து இரத்தம் கசிந்து கொண்டே இருக்கும். ஆகவே அவர் இரத்தம் கசியும் கால்களை உடைய அப்போஸ்தலன் என்று அழைக்கப்பட்டார்.

பல வேளைகளில் பலவிதமான முறைகளில் அவர் துன்பப்படுத்தப்படும்போதும், அவர் மகிழ்ச்சியோடும் பொறுப்போடும் இருப்பதைக் கண்ட அநேகர் அவருடைய நற்செய்தியை ஏற்றுக்கொள்ள முன்வந்தனர். ஒரு சமயம் ஒரு கிராமத்துக்குச் சென்று அங்கிருந்த மரத்தடியில் உட்கார்ந்து பாடல்கள் பாட ஆரம்பித்தார். அதி சீக்கிரத்தில் ஒரு பெரிய கூட்டம் கூடிவிட்டது. ஆனால் அவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அங்கு பேசுவதைக் கேட்ட உடனே அந்தக் கூட்டம் அவர்மேல் கோபம் கொண்டது. அக்கூட்டத்தில் குரூப்பராம் என்ற ஒருவன் மிகவும் மூர்க்கம்கொண்டு, சாதுவைப் பலமாகத் தாக்கினபடியினால் அவர் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து கீழே விழுந்தார். அவர் கைகளும், முகமும் , கன்னங்களும் கீழே கிடந்த பாறைகளினால் காயப்பட்டு இரத்தம் கசிய ஆரம்பித்தது. என்றாலும் மிகவும் சாந்தமாக அவர் எழுந்து அந்த மக்களின் மன்னிப்புக்கா nஐபம்செய்து விட்டு, மறுபடியும் ஆண்டவரின் அன்பைப் பற்றிக் கூற ஆரம்பித்தார். இவரது சாந்தம் குரூப்பராம் என்பவனை ஆழமாகத் தொட்டது. பின்பு அவன் ஒரு விசுவாசியாக மாறினான்.

கொள்ளைக்காரனின் உறைவிடமான ஒரு காட்டினை ஒருமுறை சுந்தர; சிங் கடந்து செல்ல நேரிட்டது. தீடிரென்று அவரை நோக்கி திருடர் நால்வர் பாய்ந்து வந்தனர். ஒருவன் கையிலே கூர்மையான கத்தியை வைத்திருந்தான். தனக்கு முடிவு வந்துவிட்டது என்று எண்ணிய சுந்தர் மௌனமாக nஐபிக்க ஆரம்பித்தார். இவ்விதமாக அவர் nஐபிப்பதைக் கண்ட அவன் அச்சரியப்பட்டு அவர் யார் என்று விசாரித்தான். தான் ஒரு கிறிஸ்தவ சாது என்றார். அத்துடன் தன்னுடைய கையில் உள்ள புதிய ஏற்பாட்டைத் திறந்து ஐசுவரியவான், லாசரு பற்றி எழுதியிருக்கிற பகுதியை வாசித்து விளக்கினார். கத்தியோடு அவரை நெருங்கிய அந்த மனிதனில் ஆழமான பாவ உணர்வு ஏற்பட்டது. அவன் சுந்தரைத் தனது குகைக்கு அழைத்துச் சென்று அங்கு அவன் கொன்று குவித்திருந்த மனிதர்களின் எலும்புக்கூடுகளை அவருக்குக் காண்பித்து, இத்தனை கொலைகளுக்கும் தான்தான் பொறுப்பு என்று துக்கத்தோடு கூறினான். சுந்தர் இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள மன்னிப்பினை ஏற்றுக்கொள்ளும்படியாகக் கூறி அவனை இரட்சிப்பிற்குள் நடத்தினார்.
திபெத் நாட்டில் சுந்தர்

கிறிஸ்துவையே கேள்விப்பட்டிராத கடினமான அபாயம் நிறைந்த இடங்களுக்கெல்லாம் சுந்தர் தீர்மானத்துடனும் தைரியத்துடனும் சென்றார். அவருடைய இருதயமும் எண்ணமும் திபெத்தின்மேல்தான் அதிகமாக இருந்தது. பேய்களுக்கப் பயப்படுவதிலும், பில்லி சு+னியங்கள் செய்வதிலும், பல மூடநம்பிக்கைகளிலும் திபெத் மூழ்கியிருந்தது. லாமாக்கள் என்ற மதத்தலைவர்களால் திபெத் நாட்டின் ஏழை மக்கள் அதிகமாக ஒடுக்கப்பட்டார்கள். திபெத் மக்கள் புத்த மார்க்கத்தைத் தழுவியவாகளாக இருந்தார்கள். பலவிதமான ஜெபங்கள் எழுதப்பட்டிருந்த சக்கரங்களைச் சுற்றுவதும், ஜெபங்கள் எழுதப்பட்டிருந்த கொடிகளைக் காற்றிலே பறக்க விடுவதுமேதான் அவர்கள் ஜெபிப்பதற்குரிய ஒரே வழி என்று எண்ணினர். இவர்கள் ஒருபோதும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள். ஆகவே சுந்தர் பலமுறை திபெத் நாட்டிற்குச் சென்றார். ஒருமுறை கடல் மட்டத்திலிருந்து 16 000 அடி உயரம் உள்ள குளிர் நிறைந்த ஒரிடத்தில் திறந்த வெளியில் படுத்து உறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒருமுறை அவர் ஒரு சிறு பட்டணத்தில் ஆண்டவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தபோது வெளிநாட்டு மார்க்கத்தை இங்கு பிரசங்கித்ததற்காக அவர் குற்றம் சாட்டப்பட்டுக் கைதியாக்கப்பட்டார். அவருடைய ஆடைகளை உரிந்துவிட்டு அவரை ஆழமான தண்ணீர் அற்ற கிணற்றில் மேற்புறத்தை மூடி பூட்டி விட்டார்கள். இதற்கு முன்னால் இவ்விதமாகப் பலர் அந்தக் கிணற்றில் தள்ளப்பட்டிருந்தனர். சுந்தர் கிணற்றினுள் கிடந்த எலும்புக் குவியல் மற்றும் அழுகிக் கிடந்த சடலங்கள் இவற்றின்மேல் விழுந்தார். இப் பாழ் குழிக்குள் விழுந்தபோது அவர் கை காயப்பட்டதினாலும் குழியில் இரந்த துர்நாற்றத்தினாலும் அவர் அதிகமாக வேதனைப்பட்டார். அந்த இருண்ட கிணற்றினுள் உணவோ, தண்ணீரோ, தூக்கமோ இன்றி அவர் மூன்று நாட்கள் கிடந்தார். மூன்றாவது இரவில் அவர் ஆண்டவரை நோக்கி nஐபித்துக்கொண்டிருக்கும்போது ஒரு சத்தம் எழும்புவதைக் கேட்டார். அந்தக் கிணற்றின் மேல் பாகத்தில் உள்ள அந்தக் கதவு திறக்கப்படுவதையும், அதிலிருந்து இறக்கப்படும் கயிற்றினைப் பற்றிக்கொள்ளும்படியாகச் சொல்லப்பட்ட ஒரு சத்தத்தையும் கேட்டார். அவர் கயிற்றைப் பிடித்தார். சீக்கிரமாக அவர் கிணற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்டார். அவரை அக் கிணற்றிலிருந்து விடுவித்த அடையாளம் தெரியாத அம் மனிதன் அந்தக் கதவைப் பூட்டிவிட்டு இரவின் இருளிலே மறைந்துவிட்டார். தன்னைக் கடவள்தான் இவ்விதமாகக் காப்பாற்றினார் என்பதை சுந்தர் பின்னர் புரிந்துகொண்டார். தன்னுடைய உடலில் தேவையான பலம் பெற்றவுடன் மீண்டும் அவர் இரட்சிப்புக்காக ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக் ஆரம்பித்தார். பலர் இரட்சிப்பைப் பெற்றனர்.

நேபாளத்தில் சுந்தர்
இந்தியாவின் வடபாகத்தில் அமைந்திருக்கும் இன்னொரு நாடு நேபாளம். சாது சுந்தர் சிங் காலத்தில் இங்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. சுந்தர் நேபாளத்திற்குச் சென்று அங்கு கிறிஸ்துவைப் பிரசங்கித்தார். இதனால் அவர் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலையில் இருந்த மற்ற கைதிகளுக்கு அவர் கிறிஸ்துவைப் பற்றிக் கூறினார். கிறிஸ்துவைப் பற்றிக் கூறுவதிலேயே தம் நேரத்தைப் போக்கினார். எனவே அவரைத் தனியாக ஒரு சிறிய அறையில் அடைத்துவிட்டார்கள். அது ஒரு மாட்டுக் கொட்டையாக இருந்தது. அவரது ஆடைகளைக் கழற்றி, கைகளையும் கால்களையும் ஒரு கம்பத்தில் கட்டி அவர்மீது அட்டைகளை விடடுவிட்டார்கள். அவை அவருடைய இரத்தத்தை உறிஞ்சியது. பலம் குன்றிப்போனார். என்றாலும் அந்த அதிகமாக வேதனையிலும் கடவுளிடம் ஜெபிக்கவும்; துதிக்கவும் ஆரம்பித்தார். இதைப் பார்த்த அதிகாரிகள் அவருக்குப் புத்தி சுயாதீனம் இல்லை என்று எண்ணி உடனடியாக விடுதலை செய்தார்கள். அட்டைகளினால் இரத்தம் உறிஞ்சப்பட்டுப் பலவீனமான நிலையில் இருந்தபோதிலும் மறுபடியுமாகப் பக்கத்திலிருந்த உருக்குச் சென்று தெருவில் நின்று நற்செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

அவருக்கு நேரிட்ட எல்லா துன்பத்திலும் என்னுடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுக்காக நான் பாடு அனுபவிப்பது ஒரு மாபெரும் மகிழ்சியின் இரகசியம் என்று சுந்தர் கூறுவார். இந்த மாபெரும் மகிழ்ச்சியின் இரகசியம் என்ன என்றால் என்னுடைய எல்hவித துன்பங்களிலும் ஆத்துமாக்களுக்கான கடும் உழைப்புகளிலும் என்னுடைய ஆறுதல், நம்பிக்கை, ஊக்கம் அனைத்தும் கிறிஸ்துவின் சிலுவையே அன்றி வேறல்ல. எனக்காக கிறிஸ்து பரலோகத்தைவிட்டு இறங்கி சிலுவை பாரத்தைச் சுமந்தார். ஆகையால் நான் கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணுவதில் பாடுபடுவது ஒரு பெரிய காரியம் அல்ல என்று கூறினார். நேபாளத்தில் சிறைச்சாலை அனுபவம் எப்படிப்பட்டதாய் இருந்தது என்று கூறும்போது கிறிஸ்துவின் பிரசன்னம் அச் சிறைச்சாலையில் என்னோடு கூட இருந்தபடியினாலே அது ஆசீர்வாதமான ஒரு மோட்சமாக இருந்தது என்றும் கூறினார்.

உலகத்திற்கு அவரது அறைகூவல்
அவர் பட்ட பாடுகளும் அவரது ஒப்பற்ற அனுபவங்களும் விரைவில் வெளி உலகின் கவனத்திற்கு வந்தது. உலகின் பல பாகங்களிலும் உள்ள கிறிஸ்தவ மக்களின் சிந்தனை இந்த இந்திய அப்போஸ்தலர் மீது பதிய ஆரம்பித்தது. கிறிஸ்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பிரசங்கிக்கவேண்டும் என்ற அழைப்பு அவருக்கு இந்தியாவின் எல்லா பாகங்களிலுமிருந்து வந்தது. அவர் சென்ற இடங்களில் எல்லாம், தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு சிலுவை நாதரைப் பின்பற்றவேண்டும் என்பதையே அறைகூவலாகவும், மிசனறி அழைப்பாகவும் கூறினார். இவரது மிசனறி அறைகூவல்கள் அநேகரை nஐபிப்பதற்கும், செயல்படுவதற்கும் தூண்டி விட்டது. சிலோன், பர்மா, மலேயா, சீனா, ஐப்பான் ஆகிய நாடகளுக்கச் சென்று பிரசங்கித்தார். மேலும் இங்கிலாந்து, அமெரிக்கா, அஸ்திரேலியா இன்னும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று நற்செய்தி வழக்கினார்.

அவர் எங்கெங்கே சென்றாரோ அங்கெல்லாம் அவரைக் கண்ட மக்கள் அவரில் இயேசு கிறிஸ்துவின் சாயலைக் கவனித்தார்கள். ஒருமுறை அவர் பேசிக்கொண்டிருந்த ஒரு கூட்டத்தில் ஒரு சிறுமி இவர் இயேசு கிறிஸ்துவா? என்று கேட்டாளாம். ஆத்துமாக்களைக் குறித்த பாரத்திலும், தூய்மையாகத் தன்னைக் காத்துக்கொள்வதிலும் சுந்தர் நிச்சயமாகவே தன்னுடைய அருமைநாதராம் இயேசு கிறிஸ்துவைப் பிரதிபலித்துக் காணப்பித்தார்.

அவரது இறுதி வார்த்தைகள்
பிரயாணத்தின் கடினத்தையும் அதிலே ஏற்படவிருக்கும் அபாயங்களையும் நான் முழுவதுமாக உணர்கிறபோதிலும், நான் இன்றைக்கு திபெத் நோக்கிப்பிரயாணம் செய்கிறேன். ஏனென்றால் நான் என்னுடைய கடமையை முழுமையாக நிறைவேற்றவேண்டும் என்று 1929ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் திகதி தன்னுடைய நண்பர்களுக்கு எழுதிய குறிப்பிலே எழுதியிருந்தார். திபெத் சென்று விட்டுத் திரும்பி வருவதற்கான சமயம் கடந்துவிட்டது. ஆனால் அவரோ வரவில்லை. எந்தவிதமான செய்தியும் அவரிடத்தில் இருந்து கிடைக்கவில்லை. ஒருவேளை அவா பிரயாணத்தில் மலைச் சிகரங்களைக் கடந்து செல்லும்போது ஏதோ ஒரு பாதாளத்தில் விழுந்து இறந்திருக்கலாம். அல்லது ஓர் ஆழமான கிணற்றிலே தூக்கிப் போடப்பட்டிருக்கலாம். அல்லது யாக் என்னும் எருமையின் நனைந்த தோலுக்குள்ளாக வைத்துக் கட்டப்பட்டு சுருட்டப்பட்டு அவருடைய எலும்புகள் முறிக்கப்பட்ட நிலையில் அவர் ஓர் இரத்த சாட்சியாக மரித்திருக்கலாம். அவரது முடிவு எப்படியாக இருந்தாலும் இந்தியாவின் அப்போஸ்தலராகிய சாது சுந்தர் சிங் தனது ஐPவகிரிடத்தைப் பெற்றுக்கொண்டார் என்பது மட்டும் உறுதியானது.

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

நெல்லை அப்போஸ்தலன் ரேனியஸ் ஐயர் (1790 - 1838) - சரித்திர குறிப்பு

திருச்சபை வரலாற்றில் சிறப்பும், புகழும் பெற்ற திருநெல்வேலி திருச்சபை இன்று தென் இந்திய திருச்சபையின் ஒரு மாபெரும் பேராயமாக விளங்குகிறது. இத்திருச்சபைக்கு வித்திட்டு வளர்ந்த பெருமை மேற்கு நாட்டு நற்செய்தி சங்கங்களான CMS (Church Missionary Society), SPG (Society for the Propagation of the Gospel), SPCK (Society for Promoting Christian Knowledge) யும், அவைகள் அனுப்பிய மிஷனெரிகளையும் சாரும். அவ்வாறு ‘சர்ச் மிஷன் சங்கம்’ (C M S) சார்பில் 1814ஆம் ஆண்டு, ஜூலை 4ஆம் தேதியில் இந்தியாவுக்கு மிஷனரியாக வந்தவர் தான் “சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ்” என்பவர். இவர் நவம்பர் 5, 1790 ஆம் நாள் ஜெர்மனியில் உள்ள கிரான்டன்ஸ் (Graudens) என்னுமிடத்தில் பிறந்தார்.

ரேனியஸ் 6 வயதாயிருக்கும் போது தந்தை நிக்கலஸ் ரேனியஸ் இறந்து போனார். தாயார் பெயர் காத்தரின் டாரதி. ரேனியசோடு பிறந்தவர்கள் இரு சகோதரிகளும், இரு சகோதரர்களுமாவர். ரேனியஸ் 14 வயது வரை மரியன் வெர்டர் நகரிலிருந்த கதீட்ரல் பள்ளியில் கல்வி கற்றார். பின்பு 3 ஆண்டுகள் ‘பாஸ்கா’ என்ற ஊரிலிருந்த அவரது மாமாவிடம் எழுத்தாளராகப் பணிபுரிந்தார். அதன் பின்பு 1807ஆம் ஆண்டு அவருடைய பெரியப்பாவின் நிலபுலன்களைக் கவனித்துக் கொள்ளும் பணிகளைச் செய்து வந்தார். அவர் தங்கியிருந்த பெரியப்பாவின் வீட்டில் அநேக மிஷனரி புஸ்தகங்கள் இருந்தன. எழுத்தாளரான ரேனியஸ் அதை வாசித்த பின்பு கிறித்தவ மிஷனரி ஊழியத்தில் ஆர்வங்கொண்டு, அதற்காகத் தன்னைத் தகுதிபடுத்திக் கொள்ள பெர்லின் (Berlin) சென்றார். அங்கு 15 மாதங்கள் இறையியல் கல்வி பயின்று 1812 ல் குரு பட்டம் பெற்றார். 1814ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து தரங்கம்பாடியில் சிறிது காலம் தங்கி தமிழ் பயின்றார். பின்னர் சென்னை சென்று “அனி வேன் சாமரன்” (Annie Van Someran) என்ற டச்சு நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அங்கும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளைக் கற்றார். பின்னர் சென்னையிலிருந்து 1820, ஜூலை 7ஆம் தேதி, திருநெல்வேலிக்கு சென்று 18 வருடங்கள் பணியாற்றினார். “1820 முதல் 1835 வரை ரேனியஸின் வாழ்க்கை வரலாறே திருநெல்வேலி திருச்சபையின் வரலாறாகும்” என மறைதிரு. டி. ஏ. கிறிஸ்துதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

திருநெல்வேலியில் கிறித்தவ சமூகப் பணி :-
தென் இந்திய திருச்சபை வரலாற்றில் திருநெல்வேலி அப்போஸ்தலன் என போற்றப்பட்டு வரும் ரேனியஸ் ஐயரவர்கள் 7.7.1820 ம் ஆண்டு பாளையங்கோட்டை வந்து 15 ஆண்டுகள் அல்லும் பகலும் அயராது உழைத்து திருநெல்வேலி மாவட்டத்தில் 371 சபைகளை உருவாக்கினார். பாளையங்கோட்டையை மையமாக வைத்து, ரேனியஸ் ஐயர் அவர்கள் பல கிராமங்களுக்குச் சென்று புதிய சபைகளை ஏற்படுத்தினார். சாத்தான்குளம், நெடுவிளை, மெஞ்ஞானபுரம், இடையன்குளம், ஆசீர்வாதபுரம், நல்லூர், சுரண்டை, புலிக்குறிச்சி என்ற இடத்தில் புதிய சபையை உருவாக்கி டோனாவூர் என்று பெயரிட்டு மற்றும் அநேக புதிய சபைகளை உண்டாக்கினார். ரேனியஸ் ஐயரவர்கள் திருச்சபையை உருவாக்கியதோடு, பள்ளிகளையும் ஆரம்பித்து கல்விப் பணியையும் சிறப்பாகச் செய்தார். 5 ஆண்டுகளுக்குள் அவர் 107 ஆரம்பப் பள்ளிகளை ஆரம்பித்து, பிள்ளைகள் வாசிக்கவும் தங்கள் தாய் மொழியிலேயே வேதத்தைக் கற்றுக் கொள்ளவும் வழிவகுத்தார். 1825 –ம் வருடத்தில் மட்டும் 3000 க்கும் மேற்ப்பட்டோர் 90 கிராமங்களில் கிரிச்த்துவை ஏற்றுக்கொண்டனர்.

1820 ஆம் வருடத்தில் திருநெல்வேலி திருச்சபையில் சாதிமதப் பழக்கங்கள் அதிகளவில் காணப்பட்டது. ஆனால் ரேனியஸ் இந்தப் பாகுபாடுகளை அனுமதிக்கவில்லை. பள்ளி, ஆலயம், மாணவர் தங்கும் விடுதிகளிலும் அனைத்து மாணவர்களும் சரிசமமாக நடத்தப்படல் வேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். மேலும் தமிழிலேயே பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் மாணவர்களுக்கான பாட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். பல பாடசாலைகளைத் தோற்றுவித்தார். இது போல் ஆண்களைப் போல் பெண்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பெண்களுக்கும் பாடசாலைகளை உருவாக்கினார். முதன் முறையாக எல்லா சமூகத்தை சேர்த்தவர்கலையும் ஆசிரியர்களாகவும், உபதேசியார்களாகவும் நியமிக்கத் தொடங்கினார். இதனால் ரேனியஸ் அநேக தொல்லைகளுக்கு ஆளாக நேரிட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கிறித்தவ சமயப் பணியில் இவர் ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது. இதனால் இவரை ‘திருநெல்வேலி அப்போஸ்தலர்’ (The Apostle of Tirunelveli) என்று அழைக்கப் பட்டார். திருநெல்வேலி, பாளையங்கோட்டை, முருகன்குறிச்சியில், கதீட்ரல் ஆலயம் (Cathedral Church) இருக்கும் இடத்தில் 1826முதன் முதலில் ஒரு சிறு ஆலயத்தை பொது மக்கள் வழிபாட்டிற்காகத் கட்டினார். அது இன்று தூய திரித்துவப் பேராலயம் எனப்படும் ஊசிக்கோபுரம் (Holy Trinity Cathedral) ஆக சிறப்பு பெற்றுள்ளது. இதன் அருகில் பெண்களுக்கென்று ஒரு பள்ளிக்கூடத்தை நீறுவினார். அது இன்று ‘மேரி சார்ஜென்ட் மேல்நிலைப் பள்ளியாக’ உயர்ந்துள்ளது . அதுபோல் உபதேசியார்களும், ஆசிரியர்களும் கற்பதற்கு ஒரு போதனாப் பள்ளியைத் தொடங்கினார். அது இன்று ‘பிஷப் சார்ஜென்ட் போதனாப் பள்ளி’ எனும் பெயரில் அமைந்துள்ளது.

உயர் சாதியினரால் இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து புதிதாக மதம் மாறிய கிறித்தவர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பல கிறித்தவ கிராமங்கள் ரேனியஸ் காலத்தில் அமைக்கப்பட்டன. அவற்றில் நல்லூர், மெய்யூர், சமாதானபுரம், முதலூர், அடைக்கலாபுரம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.1827ல் புலியூர்க்குறிச்சி எனும் கிராமத்தைஜெர்மனியிலிருந்த “டோனா பிரபு” என்பவரின் நிதியுதவியோடு ரேனியஸ் விலைக்கு வாங்கி அங்கு கிறிஸ்தவர்களைக் குடியேற்றினார். அந்த ஊர் “டோனாவூர்” என்று பெயர் பெற்றது.

திருச்சபையில் சங்கங்கள் :-
ரேனியஸ் சென்னையிலிருந்த போது 1818 ல், “துண்டுப் பிரசுரம் மற்றும் சமய நூல்கள் சங்கம்” (Madras Tract and Religious Book Society) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த அமைப்பு பின்னாளில் “கிறிஸ்தவ இலக்கிய சங்கத்துடன்” (Christian Literary Society) இணைக்கப்பட்டு விட்டது. திருநெல்வேலியிலும் “துண்டுப் பிரசுர சங்கத்தை ”நிறுவினார். லண்டனிலிருந்து கொண்டு வரப்பட்ட தாளில்,துண்டுப் பிரசுரங்களை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு வினியோகம் செய்தார். இதனால் கிறிஸ்தவ சமய அறிவும், சாதாரண மக்களின் எழுத்தறிவும் வளரலாயிற்று.

“தரும சங்கம்” என்ற பெயரால் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் பாடசாலைகள், வீடுகள்,கோவில்கள் கட்டுவதற்கு நிலம் வாங்கிக் கொடுத்தார்.

“விதவைகளின் ஆதரிப்புச் சங்கம்” நிறுவி, அதன் மூலம் உபதேசியாரின் விதவைகளுக்கு ஜீவனாம்சம் கொடுத்துவர ஏற்பாடு செய்தார்.

கிறிஸ்தவர்களாய் மதம் மாறிய சில இந்து குடும்பத்தினர் அவர்களுடைய பழக்கத்தின் காரணமாக தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் குரங்கணி கொடை விழாவில் கலந்து கொள்வதை தடுப்பதற்காக பாளையங்கோட்டையில் , 1834 ஆம் ஆண்டு சூலை 9 அன்று மாம்பழச் சங்கத்தை ஆரம்பித்தார். இதன் மூலம் திருமண்டலத்தில் அனைத்து சபைகளையும் ஒருங்கிணைக்கின்ற தோத்திரப் பண்டிகையாக வருடந்தோறும் பாளையங் கோட்டை, நூற்றாண்டு மண்டபத்தில் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆலய வளர்ச்சிக்காகச் சபை மக்கள் “ஒருநாள் வருமானக் காணிக்கைப் படைத்தல்”,“ஆலய பரிபாலன நிதித் திட்டம்” (Local Church Fund), “கைப்பிடி அரிசி காணிக்கை” போன்ற திட்டங்களை ரேனியஸ் ஐயர் அறிமுகப்படுத்தினார்.இத்திட்டங்கள் இன்றும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

ரேனியஸ் ஐயரின் தமிழ்ப் பணி :-
வெளிநாடுகளில் இருந்து வந்து தமிழ் கற்றுக்கொண்டு தமிழ்க் கீர்த்தனைகளை இயற்றிய அறிஞர்களும் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் அபார தமிழ் ஆற்றலால் நம்மை பிரமிக்க வைக்கிறார்கள். இத்தாலி நாட்டு பெஸ்கி, தமிழகம் வந்து தமிழை பழுதற கற்றுக்கொண்டு கீர்த்தனைகள் படைத்து வீரமாமுனிவர் ஆனார். திராவிட மொழியில் ஒப்பிலக்கணம் படைத்த கால்டுவெல் அயர்லாந்து நாட்டவர். ஆங்கிலேய நாட்டவரான டாக்டர் ஜி.யூ.போப் தமிழகம் வந்து தமிழில் புலமை பெற்று உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமைக்கு சொந்தக்காரர். ரஷியாவில் பிறந்து தமிழ்மண்ணில் ‘வேத உதாரணத் திரட்டு’ நூலை எழுதி புகழ் பெற்ற ரேனியஸ் ஐயர் இப்படி பலரும் தங்கள் தேசம் மறந்து தமிழாக வாழ்ந்தார்கள் என்பதை உணர்வுபூர்வமாக விவரிக்கும் நூல்.

ரேனியஸ் ஐயர் சென்னையில் முகவை இராமானுஜக் கவிராயரிடம் தமிழில் நன்னூல் போன்ற இலக்கண நூல்களை முறையாகக் கற்றுத் தெளிந்தார். பின்பு திருப்பாற்கடல்நாதன் கவிராயர் என்னும் தமிழ் அறிஞரிடம் 14 வருடங்கள் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். இயல்பாகவே இனிமையாகப் பேசக் கூடிய இவர் தமிழையும் சிறப்பாகப் பேசக்கூடியவரானார்.இவருடைய சொற்பொழிவுகளை இந்துக்களும் இரசித்துக் கேட்டார்கள். இவர் பல தமிழ் நூல்களை எழுதியிருக்கிறார். இவர் கிறித்தவ சமயப் பணியுடன் தமிழ் இலக்கியப் பங்களிப்பும் செய்தவர்.

“உயர்ந்த கருத்துக்களைத் தெளிந்த நடையில் உணர்த்தும் திறன் ரேனியசிடம் அமைந்திருந்தது. அவர் தம் நூல்களில் அழகுண்டு, இனிமையுண்டு, நிரந்துரைக்கும் நீர்மையுண்டு; வகுத்தும் தொகுத்தும் உரைக்கும் வனப்பும் உண்டு“ என்று ரேனியஸ் ஐயரின் தமிழைப் பற்றி சேதுப்பிள்ளை கூறியிருக்கிறார்.

ரேனியஸ் ஐயரின் இறுதி நாட்கள் :-
இங்கிலாந்து திருச்சபையில், தான் குறைபாடுகளாகக் கருதியவற்றை ரேனியஸ் ஒரு நூலின் மதிப்புரைக்காக எழுதினார். ஏனெனில் அவரின் நாட்களில் சாதி அமைப்பு சபைகளுக்குள் இருந்ததை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திருச்சபையினாரல் பல எதிர்ப்புகளுக்கு ஆளான ரேனியஸ் ஐயர் 1835 ஆம் வருடம் ‘சர்ச் மிஷன் சங்கம்’ (Church Mission Society) –திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். கிறிஸ்துவின் ஊழியத்திற்கு தம்மை அழைத்த கிறிஸ்த்துவிற்கு ஊழியம் செய்வதை அவர் நிறுத்தவில்லை. ரேனியசும் அவரைச் சார்ந்தவர்களும் ஆற்காடு சென்று அங்கே ஒரு புதிய அமைப்பை நிறுவி ஊழியம் செய்து வந்தனர். திருநெல்வேலியிலிருந்த உபதேசியரும், மக்களும் அவரை வேண்டிக் கொண்டதன்படி, ரேனியஸ் அவருடைய ஆதரவாளர்களுடன் மீண்டும் திருநெல்வேலி திரும்பினார். திருநெல்வேலி சிந்துபூந்துறையில் “யாத்ரிகர் சங்கம்” என்ற சுவிசேஷ சங்கத்தை நிறுவி, சுவிசேஷத்தைக் கிராமங்களில் பரப்பினர். பின்னர் வழிபாட்டிற்காக அடைக்கலாபுரத்தில் ஒரு ஜெபக்கூடம் கட்டப்பட்டது. அந்த ஜெபக் கூடம் தூய. யோவான் ஆலயம் என்று பெயர் பெற்றது. இன்று அது “சின்னக் கோயில்” என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.

“பவுல் அப்போஸ்தலனுக்குப் பிறகு தோன்றிய மிகப் பெரிய மிஷனரி ரேனியஸ் ஐயர்” என்று யூத மிஷனரி டாக்டர். உல்ப் (Dr. Wolf) என்பவர் தெரிவிக்கும் அளவிற்கு நெல்லை மாவட்டத்தில் பல 371 கிறித்தவ சபைகளையும், தமிழ் கல்வியறிவு பெறவேண்டுமென்பதற்காக 107 பள்ளிகளையும் ஆரம்பித்தார். ரேனியஸ் ஐயரின் அர்ப்பணிப்பு, தன்னலமற்ற தியாகமான வாழ்க்கை கடவுளின் மேல் வைத்த அன்பு, மக்கள் மீது காண்பித்த பாசம் யாவும் காலத்தால் அழியா சின்னங்களாக இன்றைக்கும் நெல்லை மக்களின் இருதயத்தில் வாழ்ந்து வருகிறார். சாதீயப்பாகுபாடுகளைப் போக்கி சமத்துவக் குடியிருப்புகளை உருவாக்கியதுடன் பெண்கள் கல்விக்கு முன்னின்று பள்ளிகளைத் தொடங்கியவர். சமூகத்திற்கு உதவும் பல சங்கங்களைத் தோற்றுவித்த ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார்.
திருச்சபையில் நிலவி வந்த பிரிவினைகள் ரேனியஸ் ஐயருக்கு மனஅழுத்தத்தை கொடுத்தமையால் அவரது உடல் நிலை பாதிக்கதொடங்கியது. 1835 – லிருந்து சபையின் பிரிவினைகளுக்கு மத்தியில் போராடிய ரேனியஸ் ஐயர் 1838 ஆம் ஆண்டு, ஜூன் 5 அன்று மரணமடைந்தார். அவருடைய உடல் அடைக்கலாபுரம், தூய. யோவான் ஆலயக் கல்லறைத் தோட்டத்திற்கு வெளியே ஊரின் நடுவில் அடக்கம் செய்யப்பட்டது.

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

ஃபென்னி க்ரொஸ்பி :- (1820-1915) - FANNY CROSBY


“ஜெபத்தை கேட்க்கும் எங்கள் தேவா” என்ற பழைய பாடலை பாடாத கேட்டிராத கிறிஸ்த்தவர்கள் இருக்க முடியாது. அந்த பாடல் “Blessed assurance Jesus is mine” என்ற ஆங்கில பாடலில் இருந்து தமிழாக்கம் செய்யப்படுள்ளது. ஆங்கிலத்தில் அந்த பாடலை எழுதிய பாடலாசிரியரை பற்றி நாம் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். 8000 திற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள அவர் கண்பார்வையற்ற ஒரு பிரபல அமெரிக்க பெண் ஆவார். அந்த பாடலாசிரியையின் பெயர் ஃபென்னி க்ரொஸ்பி. 1820 ம் வருடம் மார்ச் மாதம் 24 தேதி, நியூ யார்க் அருகே ப்ருஸ்டர் என்ற இடத்தில பிறந்தார். க்ரொஸ்பி பிறந்த ஆறு வாரங்களில் குளிர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். மருத்துவர் ஒருவரது தவறான பராமரிப்பினால் பிறந்த 6 வாரங்களிலேயே தனது கண் பார்வையை இழந்ததுடன், ஒரு வயது பூர்த்தியாகும் முன்பே தன் தகப்பனையும் இழந்தாள். தன் தாயுடனும் பாட்டியுடனும் வாழ்ந்த வந்த ஃபென்னி க்ரொஸ்பி சிறு வயதிலிருந்து நான்கு சுவிஷேசப் புத்தகங்களையும், பழைய ஏற்பாட்டின் முதல் நான்கு புத்தகங்களின் பெரும்பாலான பகுதிகளையும் மனனம் செய்திருந்தாள்.

14 வது வயதில் நியூயோர்க் நகரிலுள்ள குருடர் பாடசாலையில் பயில தொடங்கிய ஃபென்னி க்ரொஸ்பி அங்கு 8 வருடங்களாக மாணவியாகவும் பின்னர் 15 வருடங்களாக ஆசிரியையாகவும் இருந்தாள். இவள் தனது 8 வது வயதில் எழுதிய கவிதை “என்னால் பார்க்க முடியாவிட்டாலும் நான் எவ்வளவு சந்தோஷமானவள்’ என்று ஆரம்பமாகியது. ஃபென்னி க்ரொஸ்பி, தனது 30 வயது வரை பார்யற்றவர்களுக்காக சமூக சேவை செய்துவந்தார். பல்வேறு சலுகைகளை அரசிடம் இருந்து பெறுவதிலும் பார்வையற்றவர்களுக்காக போராடுவதிலும் முனைப்புடன் செயல்பட்டார். பார்வையற்றவர்களுக்கான பள்ளியில் ஆசிரியராகவும் செயல்பட்டு வந்தார். 1850 –ல் Methodist Episcopal Church –ல் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் இயேசுகிறிஸ்த்துவால் தொடப்பட்டு தனது வாழ்க்கையை கிறிஸ்துவுக்காய் அர்ப்பணித்தார்.

1858-ம் வருடம் “அலெக்ஸாண்டர் வான் அல்ஸ்டைன்” என்ற பார்வையற்றவரை திருமணம் செய்தார் ஃபென்னி க்ரொஸ்பி. 1859-ம் வருடம் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பிறந்து ஒரு நாட்களிலே இறந்து போனது. மனமுடைந்த ஃபென்னி க்ரொஸ்பி இறக்கும் வரை ஒரு சோக நிகழ்வாகவே கருதினார். ஆயினும் தனக்கு கர்த்தர் கொடுத்திருந்த பாடல் எழுத்தும் தாளந்தை எந்த சூழ் நிலையிலும் அவர் நிறுத்தி விடவில்லை. அநேக பாடல் கச்சேரிகளை நடத்தி அதன் மூலம் வந்த வருவாயில் ஏழைகளுக்கு உதவி வந்தனர். அதன் பின்னர் அலெக்ஸாண்டரை பிரிந்த ஃபென்னி க்ரொஸ்பி கிறிஸ்துவிக்காய் தொடர்ந்து பாடல்களை எழுதி ஊழியமும் செய்து வந்தார்கள்.

ஃபென்னி க்ரொஸ்பி, முழங்காற்படியிட்டு ஜெபிக்காமல் எந்த ஒரு பாடலையும் எழுதத் துணிவதில்லை. ஒரு தடவை இசையமைப்பாளரால் அனுப்பப்பட்டிருந்த ராகத்திற்கு ஏற்றபடி உடனடியாக ஒரு பாடலை எழுத வேண்டியிருந்தது. ஃபென்னி க்ரொஸ்பி எவ்வளவு முயன்றும் அவளால் குறிப்பிட்ட ராகத்திற்கு ஏற்ற பாடலை எழுத முடியாமல் போய்விட்டது. அப்போதுதான் தான் ஜெபிக்காமல் பாடலை எழுதத் தொடங்கியதை உணர்ந்த ஃபென்னி க்ரொஸ்பி ஜெபித்துவிட்டு மறுபடியும் பாடலை எழுதத் தொடங்கினாள். அன்று அவள் எழுதிய பாடல் “இயேசுவே என்னை சிலுவையினருகில் வைத்துக் கொள்ளும்“. (Jesus keep me near the cross) என ஆரம்பிக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற பாடலாகும். 1874 இல் ஃபென்னி க்ரொஸ்பி ஒரு குறிப்பிட்ட காரியத்திற்குத் தேவையான பணத்தில் 5 டொலர்கள் குறைவாய் இருந்தது, எவரிடமும் போய்க் கேட்பதற்கும் நேரம் இருக்கவில்லை. உடனே அவள் பணத்திற்காக ஜெபித்துவிட்டு, தனது அடுத்த பாடலை எழுத் தொடங்கினாள். அச்சமயம் அவள் வீட்டுக்கதவு தட்டப்பட்டது.

வாசற்கவைத் திறந்தபோது “தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக“ எனும் வாழ்த்துக்களுடன் ஒரு மனிதன் அவளது கைகை குழுக்கிவிட்டுச் சென்றான். அம்மனிதன் அவளது கையை குலுக்கும்போது அவளது கையில் 5 டொலர்கள் வைத்திருந்தான். உடனே முழங்கால்படியிட்டுத் தனக்குத் தேவையான 5 டொலர்கள் கிடைத்ததற்காக நன்றி செலுத்தி ஜெபித்த ஃபென்னி க்ரொஸ்பி, தனது அடுத்த பாடலை எழுதத் தொடங்கினாள். அதுவும் உலகப் பிரசித்தப் பெற்ற ஒரு பாடலாயிற்று. “சகல வழிகளிலும் என் இரட்சகர் என்னை நடத்துகிறார்“ என ஆரம்பமாகும் பாடலே அதுவாகும். (All the way my saviour leads me)

ஒரு தடவை கிறிஸ்தவப் பிரசங்கி ஒருவர் ஃபென்னி க்ரொஸ்பியிடம் “தேவன் உனக்குப் பல வரங்களைக் கொடுத்திருந்தாலும் பார்வையைக் கொடுக்காமலிருப்பது உண்மையிலேயே வேதனைக்குரிய ஒரு காரியமே” என்றார். ஃபென்னி க்ரொஸ்பியோ உடனடியாக “ நான் பிறந்த உடன் தேவனிடம் ஒரு கோண்டுகோள் விடுக்கக்கூடியதாயிருந்தால், நான் பிறவிக் குருடியாகவே இருக்க விரும்புகிறேன் என்றே கேட்டிருப்பேன்’ என்றாள். ஃபென்னி க்ரொஸ்பியின் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்டு ”ஏன்?” என்று கேட்ட பிரசங்கியிடம் அவள் “நான் பரலோகத்திற்குச் செல்லும்போது என் இரட்சகர் இயேசுவைப் பார்ப்பதே என்னை முதலில் மகிழ்விக்கும் காட்சியாக இருக்கும்” என்று பதிலளித்தாள்.

சரீரத்தில் ஊனம் இருந்து கண் தெரியாமல் இருந்தாலும், இருதயத்தில் கிறிஸ்த்துவுக்காய் சாதிக்கும் வைராக்கியம் பற்றி எரிந்து கொண்டே இருந்தது. ஃபென்னி க்ரொஸ்பி தனது அறுபது வயதில் தனது வாழ்க்கையை ஏழைகளுக்காக அர்பணித்து வாழ்நாள் முழுவது அவர்களுக்கு பணிசெய்து வாழ்ந்தார். நினைத்து பாருங்கள் கண் தெரியா முதிர் வயது கர்த்தருக்காய் எவ்வளவாய் சாதித்திருக்கிறார் என்று. குறைவுகளை நினைத்து கவலைப்படுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. எல்லா மனிதருக்கும் ஏதோ ஒரு குறைவு இருக்கின்றது. குறைவிலும் நாம் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாக இருப்பதே சிறந்தது. 94 வருடங்களாகக் கண்பார்வையற்றவளாக வாழ்ந்த ஃபென்னி க்ரொஸ்பி தேவனை மகிமைப்படுத்துவதற்கும் அவரைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவிப்பதற்கும் பாடல்களை எழுதுவதில் மனமகிழ்வுடன் ஈடுபட்டார்கள். 1915 ம் வருடம் பிப்ரவரி மாதம் இறைவனடி சேர்ந்தார்கள்.

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

ஐடா ஸ்கடர் - வாழ்க்கை குறிப்பு

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் இந்தியாவை விட்டு வெளியேறுவதே நல்வாழ்வின் தொடக்காமென கருதினார் ஐடா ஸ்கடர். ஐடாவிடம் நல்வாழ்க்கையின் உதாரணம் கேட்போருக்கு அவரது மாறாத பதில், "அமெரிக்காவும், கோடீஸ்வரருடன் திருமணமும்" என்பது தான். இந்தியாவில் நிலவிய பஞ்சமும், தெருவோரம் கிடக்கும் பிணங்களும் தான் இந்தியாவை குறித்து ஐடாவின் நினைவில் நின்ற பின்பங்கள். ‘இந்தியா’ ஒருபோதும் தனக்கு ஏற்ற நாடல்ல என்பது ஐடாவின் கணிப்பு. அவளது கணிப்புகள் எல்லாம் பரமனின் அழைப்பில் மங்கி பின் மறைந்தது.

அப்போது அவள் இந்தியாவில் தொண்டாற்றி வரும் தன் தந்தையோடு விடுமுறையை கழிக்க வந்திருந்தாள். அகல்கள் ஒளியை வீசிக்கொண்டிருக்கும் அறையில் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்த ஐடாவின் காதுகளில் சிலரது காலடியோசை வெளித் திண்ணையில் இருந்து வந்தெட்டியது. புத்தக பார்வையை கலைத்துவிட்டு கதவருகே வந்து எட்டிப் பார்த்தாள். அங்கு பிராமணர் ஒருவர் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருக்கும் தன் 14 வயது மனைவியை காப்பாற்ற வரும்படி வேண்டினார். “அம்மா! மருத்துவச்சிகள் கை விரித்து விட்டனர். எப்படியாவது என் மனைவியையும், பிள்ளையையும் காப்பாற்றுங்கள்” என்று கதறினார். ஐடா மகப்பேறுவில் அகரம் கூடா அரியாதவள், எனவே “என் தந்தை ஒரு சிறந்த மருத்துவர். அவர் வீட்டிற்கு வந்ததும் அவரை அழைத்து வருகிறேன்” என்றாள். “ஒரு அந்நியஆண் என் இல்லத்திற்குள் நுழைவதைக் காட்டிலும், அவள் இறப்பதே மேல்” என்று மறுத்து வெளியேறினார் பிராமணர். அந்த ஏழைப்பெண்ணுக்காக வருந்தினார் ஐடா. அவளால் வேறு என்ன செய்ய முடியும். கனத்த மனதுடன் புத்தகத்திற்குத் திரும்பினாள் ஐடா.


சிறிது நேரத்தில் ஐடாவின் தந்தை வீடு திரும்பினார். நடந்ததை சொல்லி வருத்தமடைந்தாள் ஐடா. மீண்டும் காலடியோசை கேட்டது. பிராமணர் மறுபடியும் வந்திருப்பார் என்று நினைத்த ஐடா வாசலருகே ஓடோடி வந்தாள். ஆனால் அங்கோ ஒரு இஸ்லாமியர் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருக்கும் தன் மனைவிக்கு உதவி செய்ய வருமாறு ஐடாவை அழைத்தார். ஐடா ஒரு தேர்ச்சி பெற்ற மருத்துவரல்லாததால் ஐடாவின் தந்தை வந்து உதவுவதாக கூறினார். இதை கேட்ட இஸ்லாமியர் “என் மனைவியின் முகத்தை எனது குடும்பத்தாரைத் தவிர வேறு எந்த ஆணும் கண்டதில்லை. அப்படி இருக்க அயல்நாட்டவரான உங்களை என்னால் அனுமதிக்க முடியாது” சொல்லி மறுத்துவிட்டார். அவரது மனதை மாற்ற முயன்ற ஐடாவிற்கும் அவள் தந்தைக்கும் தோல்வியே மிஞ்சியது.

வேறுவழியின்றி மறுபடியும் புத்தகத்தை தொடர்ந்த ஐடாவிற்கு மீண்டும் காலடியோசை கேட்கவே, திகிலோடும் குழப்பத்தோடும் சென்று பார்த்தாள். மூன்றாவதாக ஒரு உயர் குல இந்து மனிதர் தன் மனைவியின் பிரசவத்திற்கு ஐடாவை அழைத்தார். ஐடாவுக்கு அனுபவம் இல்லாததால் அவரது தந்தை வருவதாக தெரிவித்தார். “வேண்டாம்; என் மனைவி சாகட்டும்” என்ற அதே பதில் தான் இந்த முறையும் வந்தது.


“அந்த இரவு என்னால் தூங்க முடியவில்லை... அது ஒரு பயங்கரமான இரவு. ஒரு பெண் உதவிக்கு இல்லாததால் இங்கே மூன்று பெண்களின் உயிர் பிரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் எனது அமெரிக்க தோழிகள் உல்லாச வாழ்விற்கு தொடர் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர். என்னால் அவர்களின் அழைப்பை நிராகரிக்க முடியவில்லை. அந்த இரவு வேண்டுதலிலும் வேதனையிலும் மட்டுமே நகர்ந்தது. அடுத்த நாள் காலை எனது எதிர்காலம் குறித்து தேவனுடைய விருப்பதை அறிந்து கொள்ள ஜெபத்தில் அமர்ந்தேன். என் வாழ்வில் முதல் முறையாக தேவனின் சத்தத்தை தெளிவாக உணர்ந்தேன். அந்த நேரமெல்லாம் தேவன் தமது ஊழியத்திற்கு என்னை அழைக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன்

ஜெபத்தை முடித்து எழுந்த போது, தாரை தப்பட்டை சத்தம் கேட்க தொடங்கியது. உடனே எனது உள்ளத்தை திகில் தொற்றிக் கொண்டது. அது நிச்சயமாக யாரோ ஒருவருடைய மரண செய்தி என்பது எனக்கு தெரியும். வேலைக்காரர்களில் ஒருவனை கிராமத்திற்குள் அனுப்பி அந்த மூன்று பெண்களின் நிலையை விசாரித்து வருமாறு அனுப்பினேன். மூவருமே இறந்துவிட்டதாக விசாரித்து வந்தவன் கூறினான். எனது அறையை மறுமடியும் மூடிவிட்டு அழுதேன், இந்திய பெண்களின் நிலையை குறித்த பாரம் என் உள்ளத்தை ஆக்கிரமித்தது. நீண்ட நேர ஜெபத்திற்கு பின்னர் “நான் அமெரிக்கா செல்லவே தீர்மானித்தேன். ஆம்! அமெரிக்கா சென்று மருத்துவம் படித்து மீண்டும் இந்தியாவுக்கே வந்து அவல நிலையில் இருக்கும் பெண்களுக்கு தொண்டாற்றுவதே இறைவனின் நோக்கம் என்பதை புரிந்துகொண்டேன்.. 


ஐடா உயர்ந்த கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பை பெற்றார். நன்கு பயிற்சிபெற்ற மருத்துவராக ஐடா இந்தியா திரும்பினார். பெண்களுக்கான மருத்துவமனை ஒன்றை வேலூரில் நிறுவ வேண்டுமென விரும்பினார். எதிர்பாராத விதமாக ஐடாவிற்கு மருத்துவர் லூயிசா ஹர்ட்டிடமிருந்து கடிதம் வந்தது. அதில் வேலூரில் மருத்துவமனை அமைக்கப் பணம் தேவைப்படுகிறதா? பதில் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.


ஐடாவிற்கு அந்த மூன்று பெண்களின் நினைவு வந்தது, இந்தியாவில் சுவர்களுக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்களின் அவலத்தை நினைத்தார். ஆம் பெண்களுக்கான மருத்துவமனை இங்கு உடனடி தேவை, நல்ல மருத்துவமனை கட்டுவதற்கு $50,000 தேவைப்படும் என்று பதில் எழுதினார்.


$50,000மா!! என்று பலரும் வாயைப் பிளந்தனர். அத்தொகையின் தற்போதைய மதிப்பு $500,000. $8000 திரட்டுவது சாத்தியமானது. ஆனால் உங்களால் அதில் பாதி பணத்தை கூட திரட்ட முடியுமா என்பது சந்தேகம் தான் இருந்தாலும் முயற்சி செய்யுங்கள் என்றனர். பலரும் தன்னை தாழ்வாக நினைப்பதை புரிந்து கொண்டார் ஐடா. அவர்களது எண்ணம் தவறு என்றும் பணம் தேவைப்பட்டால் அதைத் தர தேவனால் இயலும் என்றும் பதில் எழுதினார்.

ஐடா தானே நிதி திரட்ட முற்பட்டார். "யானை பசிக்கு சோழ பொறி" என்பதைப்போன்று சிறு துளியாய் டாலர்கள் வந்து சேர்ந்தன. இந்தியாவின் தேவை அதிகரித்துக்கொண்டே போனது. 10,000 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதம் தான் நிலவியது. பாரம்பரிய மருத்துவர்களிடம் சிறந்த மருந்துகள் இருந்தாலும் அதில் பெரும்பாலானவை பக்க விளைவை ஏற்படுத்தக் கூடியவை. இந்தியாவில் மருத்துவத்திற்கான அவசர தேவையை உணர்ந்தார். ஆனால மருத்துவமனை கட்டி முடிக்க குறைந்தது இரண்டாண்டுகள் பிடிக்கும். ஆகவே ஒரு சிறு அறையை தற்காலிக மருத்துவனை ஆக்கினார். திண்ணை காத்திருக்கும் அறையாக பயன்பட்டது. அவள் நோயாளிகளை நன்றாக கவனித்த போதிலும் சந்தேகம் தமிழ் இந்தியர்களை ஐடாவிடம் சிகிச்சை பெறுவதற்கு தடை செய்தது. அவளது முதல் சிகிச்சை தோல்வி அடைந்தது. ஐடாவிடம் சென்ற நோயாளி இறந்திவிட்டார் என்ற செய்தி வேகமாக பரவியது. பலரது சந்தேகம் வலுத்தது.


இறுதியாக ஒரு உயர்ந்த ஜாதி இந்துப்பெண் கண் சிகிச்சைக்காக வந்திருந்தார். இம்முறை ஐடா வெற்றிகரமாக சிகிச்சை செய்து குணமாக்கினார். அதன்பின் அவளது சேவையின் தேவை அதிகரித்தது. சலொமி என்ற அவளது வீட்டு சமையல் பணிப்பெண் தான் ஐடா பயிற்சியளித்த முதல் செவிலியர். நாளொன்றுக்கு 100, 200, 300, 400, 500 என்று ஐடாவிடம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.


அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் உள்ள மொத்த மருத்துவர்களையும் கொண்டு வந்து சேவை செய்தாலும் “சமுத்திரத்தை காயத்தால் உரசியது” போலதான் இருந்தது அன்றைய தேவை. இந்தியப் பெண்களுக்கு சேவை செய்ய இந்திய பெண்களுக்கே பயிற்சி அளிக்கவேண்டுமென்று தீர்மானித்த ஐடா வேலூர் செவிலியர் பாடசாலையை உருவாக்கினார். செவிலியருக்கு பயிற்சியளிக்கத் தன்னால் கூடுமானால் மருத்துவருக்கும் பயிற்சி அளிக்கக் கூடுமென்று நம்பினார் ஐடா. மீண்டும் நம்பிக்கை ஜெயித்தது. வேலூர் மருத்துவக் கல்லூரி உருவானது. அது சுலபமாக நடக்கவில்லை. காலம் செல்லச் செல்ல நெருக்கடியின் விளிம்பிற்கு வந்தார் ஐடா. ஆனால் கடவுள் எப்பொழுதும் போலக் காப்பாற்றினார். இக்கட்டான நிலை ஒன்றில் ஐடா எழுதினார் “முதலில் நன்கு சிந்தனை செய்; பின்பு துணிந்து செய்; உண்மைகளை தெரிந்துகொள்; செலவை மதிப்பிடு; பணம் முக்கியம் அல்ல; நீ கட்டிக்கொண்டிருப்பது மருத்துவக் கல்லூரியல்ல; அது கடவுளின் ராஜாங்கம்” இது கடவுளின் விருப்பமென்றால் கடவுளே கல்லூரியைத் திறந்து வைப்பார் என்ற நம்பிக்கையின் பலனாய் கல்லூரி தொடங்கியது.


தன் பாதத்தில் படிந்த இந்தியாவின் தூசியை தட்ட விரும்பிய அந்த பெண் பின்னாளில் இந்தியர்களின் இதய சிம்மாசனத்தில் இடம்பிடித்தார். பிரிட்டிஷ் மற்றும் இந்திய அரசாங்கம் அவருக்கு உயர்ந்த விருதுகளை வழங்கியது. காந்தியடிகள் அவரை தேடி சந்தித்தார். ஐடா சர்வதேச புகழ் பெற்றார். ஐடாவின் கடவுள் நம்பிக்கை அழிவில்லாதது. அதுவே அந்த மருத்துவச்சியின் மதிப்பிற்குரிய சான்றாக இன்றளவும் காலங்களை கடந்து நிலைநிற்கிறது, அவளது இறை நம்பிக்கையே அவளை விசித்திர மருத்துவச்சியாக்கி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
  

நன்றி
கதம்பம் [இ-இதழ்] 

கர்த்தரை நம்பு

இரு வாலிபர்கள் (ஒருவன் விசுவாசி, மற்றவன் அவிசுவாசி) ஒரு மலையின் மேல் நடந்துப் போய்க் கொணடிருந்தார்கள். அப்போது விசுவாசியான வாலிபன், கர்த்தருடைய அநாதி திட்டங்களையும், அவருடைய சிருஷ்டிப்பின் மகிமையையும் பேசிக் கொண்டே இருவரும் நடந்துப் போய் கொண்டிருந்தார்கள். ‘எனக்கு எந்தவித கவலையும் இல்லை ஏனென்றால் என்னுடைய நடைகளை அவர் தீர்மானிக்கிறார். அவருடைய பாதுகாப்பு எனக்கு இருப்பதால் எனக்கு எந்தவிதக் கவலையும் இல்லை’ என்று விசுவாசியான வாலிபன் கூறினான்.
.
அதற்கு அவிசுவாசியான வாலிபன், ‘என்னை நடத்திக் கொள்ள எனக்குத்தெரியும் யாருடைய தயவும் எனக்கு வேண்டுவதில்லை’ என்றுக் கூறிவிட்டு, ஒரு கல்லை தூரத்தில் எறிந்து, ‘கடவுள் இந்தக் கல் எங்கே போய் விழ வேண்டும் என்று தீர்மானிக்கிறார்’ என்று கேலியாக கேட்டுவிட்டு, ‘பார், அந்த மரம் மலையின் ஓரத்தில் வளர்ந்து இருக்கிறது. அதையும் கர்த்தர்தான் வைத்தார் என்று சொல்லாதே, யாரோ வழிபோக்கன் விதையை எறிந்திருக்கிறான் அது இங்கே முளைவிட்டு மரமாக இருக்கிறது. இதற்கு என்ன பதில் சொல்கிறாய்’ என்று அந்த மரத்தின்மேல் சாய்ந்து நின்றான். திடீரென்று அந்த மரத்தின் கீழ் இருந்த மண் சரிய ஆரம்பித்தது. அந்த வாலிபன் நகர்வதற்குள் மண்சரிந்து தாழ இருந்த பாறைகளுக்குள் விழ ஆரம்பித்தது. ஒரு கையை மரத்தைச் சுற்றி பிடித்தும் ஒரு காலை அங்கு இருந்த பாறையின் மேலும் வைத்து தப்பித்தான். இருவரும் சில நிமிஷங்கள் அப்படியே உறைந்துப் போய் நின்றார்கள்.
.
விசுவாசியான வாலிபன் உடனே அந்த இடத்திலேதானே முழங்கால்படியிட்டு, தேவனுக்கு தன் நண்பனின் உயிரைக் காப்பாற்றியதற்காக நன்றி சொன்னான். பக்கத்தில் மற்றவனும் முழங்கால்படியிட்டு நன்றி சொன்னான் இருவரும் மீதமிருந்த தங்கள் பயணத்தில் ஒன்றும் பேசாமல் தொடர்ந்தனர். தேவன் அவிசுவாசியான வாலிபனோடு பேச ஆரம்பித்தார். தன்னை தேவனுக்கு ஒப்புக் கொடுத்து ஒரு ஊழியக்காரனாக அவன் மாறினான்.

உங்களை அசைக்கபோகும் அற்புத சாட்சி



 









கணவன் உருக்குலைந்ததை
கண்ணெதிரே கண்ட மனைவி
கல்லறையில் கண்ணீருடன்
வானங்களுக்கு நேரே கையெடுத்து
இயேசுவை நோக்கி கூறின வார்த்தை
"ஏசுவே உம் நாமம் மகிமைபடுவதாக"

நெகடி அய்டின் முன்னாள் முகமதியர்.. இவர் சந்தித்த செம்சா என்ற ஓர் பெண்ணின் மூலம் இவர் இயேசுவை தெரிந்து கொண்டார். இவரின் மனமாற்றத்தை மற்றவர்களுக்கு அறிவித்த பின்னர் செம்சாவை திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளை தேவன் கொடுத்து ஆசீர்வதித்தார்.

தேவன் ஒருவரையும் சாதாரணமாக தெரிந்து கொள்வதில்லை. அதை போல இரட்சிக்கப்பட்ட நெகடி அவர்கள் தேவனுடைய ஊழியத்தை தன் இரண்டு நண்பர்களுடன் செய்ய ஆரம்பித்தார். ஊழியம் வேகமாக வளர்ந்தது. கிறிஸ்தவர்களை எதிர்க்கும், கொள்ளும் கும்பலுக்கும் இந்த செய்தி பரவியது. முகமதியராய் இருந்து கிறிஸ்தவராய் மாறிய இம்மூன்று பெயரையும் கொடூரமாக சிதைத்து கொன்றனர்.. விஷயத்தை கேள்விப்பட்ட இவர்களுடைய குடும்பத்தார் மனம் பதறி போயினர்..

5 பேர் கொண்ட ஓர் இஸ்லாமிய கொலை வெறி கும்பல் இவர்களை கடத்தியது. இதில் உகுர் என்ற கிறிஸ்தவர் முகத்தில் 100க்கும் மேற்ப்பட்ட முறை கத்தியால் குத்தப்பட்டிருந்தது.

தில்மன் மற்றும் நெகடி ஆகிய இருவரும் ஓர் நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டு பின் பல முறை குத்தப்பட்டுள்ளனர். பிறகு அவர்கள் கழுத்தை வெட்டி கொன்று தங்கள் கொலைவெறியை தீர்த்து கொண்டனர்.

அங்கிருந்த ஓர் கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது
"இந்த மென்மையான காரியத்தை நம் மதத்திற்காகவும், தேசத்திர்க்காவும் செய்திருக்கிறோம். எங்களோடு நீங்களும் பெருமை படவேண்டும்" என்பதே. இந்த கொடூரத்தை மதமா கர்ப்பித்தது??? மதம் என்பது அன்போடு மனதில் இருக்கும் வரை மனித நேயத்தை விட பலம் உள்ளதை இருக்கும். அது வெளியில் தலை விரித்து ஆடினால் மனிதனையே மிருகங்களை விட கொடியதாய் மாற்றி விடும். இந்த சம்பவம் ஓர் உதாரணம்.

இப்படி கொல்லப்பட்ட மூவரையும் அடக்கம் செய்ய கூட ஆள் இல்லாமல் தவித்த இவர்கள் தங்கள் சொந்த முயற்சியியால் தங்கள் கணவர்களின் உடலை அடக்கம் செய்தனர்.. இவர்களுக்கு சில ஊழிய நிறுவனங்கள் உதவி செய்தன. கல்லறையில் தன் கணவன் சிதைந்து கிடந்ததை பார்த்த மனைவியின் இதயம் நொறுங்கி போனது. கண்ணீரோடு தன் கணவனையே பார்த்து கொண்டிருந்தார்.

அதன் பிறகு நீதிமன்றத்தில் இந்த கொலை விசாரிக்கப்பட்டது. இதை பற்றி நேகடியின் மனைவி கூறும் போது "கணவன் இறந்து இந்நாள் வரை தேவன் என் இதயத்திற்கு வேண்டிய பெலத்தை கொடுத்து வருகிறார். என் கணவன் இல்லாமல் ஓர் பாலைவனத்தில் வாழ்வதை போல வாழ்ந்தாலும் என் கணவர் இயேசு கிறிஸ்துவுக்காக மரித்திருக்கிறார் என்று நினைக்கும் போது ஆறுதல் அடைகிறேன்".

இவரை பொறுத்த வரை தன் கணவர் இயேசுவுக்கு விசுவாசமாகவும், மரணத்தின் மூலம் தேவனுக்கு மகிமையான ஆசீர்வாதமாகவும் இருந்தார் என்று நன்றி செலுத்துகிறார்.

சேஷமா (நேகடியின் மனைவி) சூசன்னா (தில்மன் மனைவி) இருவரும் ஓர் பேட்டியில் தங்கள் கணவனை கொன்றவர்களை மன்னிப்பதாக கண்ணீரோடு கூறினார். இந்த செய்து துருக்கு தேசத்தையே அசைத்தது. துருக்கி முழுவதும் இவ்விருவரையும் பற்றி பேச ஆரம்பித்தனர்.. தேவன் இவர்களை சாட்சியாய் நிறுத்தினார்.

ஒரு முறை நீதிமன்றத்தில் சேஷமா அமர்ந்திருந்த போது ஒரு குரல் கேட்டது. "நான் சிலுவையில் வெற்றியை பெற்றேனா இல்லையா?" என்று தேவன் பேசினார். சேஷமா மறுமொழியாக "ஆம்.. சிலுவையில் நீர் வெற்றி சிறந்தீர்" என்று கூறினார். தேவன் மறுமொழியாக "இவர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள் தங்கள் மரணத்தின் மூலமாக. அவர்களின் சாட்சிகளின் மூலமாகவும், இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தின் மூலமாகவும், இவர்கள் கோலியாத்தை வென்றிருகின்றனர். இவர்களை கொன்றவர்கள் தோற்று பொய் விட்டார்கள்"

இந்த நிகழ்வை இன்றும் சேஷமா நினைவு கூறுகிறார். சேஷமா இரண்டு குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார். இன்றும் இவரையும் குழந்தைகளையும் கொன்று விடுவார்களோ என்ற மரண பயத்துடன் வாழ்ந்து வருகிறார். ஆனால் விசுவாசத்தில் வளர்ந்து வருகிறார். இவருடைய மகன் "அம்மா கவலைபடாதிருங்கள்" என்று தன் மழலை குரலில் ஆறுதல் படுத்தி வருகிறான். தேவன் மேல் உள்ள நம்பிக்கையை தொடர்ந்து இழக்காமல் குடும்பமாக சாட்சியாக இன்றும் வாழ்ந்து வருகின்றனர்..

இந்த சாட்சியை படிக்கும் அன்பான சகோதரா சகோதிரி.... நம் வாழ்க்கையில் நாம் இழந்து போன சிறு சிறு காரியங்களுக்கும் சோர்ந்து போய், சபைக்கு போகாமலும், வேதம் வாசியாமலும், ஜெபிக்காமலும், ஊழியத்தில் பங்கேடுக்காமலும் இருக்கிறோமா? இவர்களை குறித்து யோசித்து பாருங்கள். தங்கள் கணவருடைய தலை வெட்டப்பட்டும் அவர்களை மன்னித்து அவர்களும் இயேசுவை காண வேண்டும் என்று பகிரங்கமாக சாட்சி கூறும் இவர்கள் முன் நம் விசுவாசம் எப்படி?

சிறு காரியங்களினால் இன்று முகம் குடுத்து பேசாத கிறிஸ்தவர்கள் பல பேர் உண்டு. முகபுத்தகத்திலும் சண்டை போடும் பல கிறிஸ்தவ நண்பர்களை கண்டிருக்கிறேன். ஆனால் இவர்கள் தங்கள் கணவரை கலுத்தருத்தவர்களை மன்னித்து அவர்களையும் பரலோக ராஜியத்திர்க்குள்ளாக அழைக்கிறார்கள். நாமும் இப்படிப்பட்ட விசுவாசத்தோடு அன்போடு நாட்களை சந்திப்போம்.

என்னத்தை இழந்தாலும் இயேசுவை இழந்து விடாதீர்கள்..

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்

MANY THANKS TO
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்