.
அதற்கு
அவிசுவாசியான வாலிபன், ‘என்னை நடத்திக் கொள்ள
எனக்குத்தெரியும் யாருடைய தயவும் எனக்கு
வேண்டுவதில்லை’ என்றுக் கூறிவிட்டு, ஒரு கல்லை
தூரத்தில் எறிந்து, ‘கடவுள் இந்தக் கல் எங்கே போய் விழ
வேண்டும் என்று தீர்மானிக்கிறார்’ என்று கேலியாக
கேட்டுவிட்டு, ‘பார், அந்த மரம் மலையின் ஓரத்தில்
வளர்ந்து இருக்கிறது. அதையும் கர்த்தர்தான் வைத்தார்
என்று சொல்லாதே, யாரோ வழிபோக்கன் விதையை
எறிந்திருக்கிறான் அது இங்கே முளைவிட்டு மரமாக
இருக்கிறது. இதற்கு என்ன பதில் சொல்கிறாய்’ என்று அந்த
மரத்தின்மேல் சாய்ந்து நின்றான். திடீரென்று அந்த
மரத்தின் கீழ் இருந்த மண் சரிய ஆரம்பித்தது. அந்த வாலிபன்
நகர்வதற்குள் மண்சரிந்து தாழ இருந்த பாறைகளுக்குள் விழ
ஆரம்பித்தது. ஒரு கையை மரத்தைச் சுற்றி பிடித்தும் ஒரு
காலை அங்கு இருந்த பாறையின் மேலும் வைத்து தப்பித்தான்.
இருவரும் சில நிமிஷங்கள் அப்படியே உறைந்துப் போய்
நின்றார்கள்.
.
விசுவாசியான
வாலிபன் உடனே அந்த இடத்திலேதானே முழங்கால்படியிட்டு,
தேவனுக்கு தன் நண்பனின் உயிரைக் காப்பாற்றியதற்காக
நன்றி சொன்னான். பக்கத்தில் மற்றவனும்
முழங்கால்படியிட்டு நன்றி சொன்னான் இருவரும்
மீதமிருந்த தங்கள் பயணத்தில் ஒன்றும் பேசாமல்
தொடர்ந்தனர். தேவன் அவிசுவாசியான வாலிபனோடு பேச
ஆரம்பித்தார். தன்னை தேவனுக்கு ஒப்புக் கொடுத்து ஒரு
ஊழியக்காரனாக அவன் மாறினான்.
No comments:
Post a Comment