என்னை கனப்படுத்துகிறவனை நானும் கனப்படுத்துவேன். 1 சாமு 2:30.
எரிக் லிட்டில் ஒரு புகழ்பெற்ற விளையாட்டு வீரர். ஒலிம்பிக்
விளையாட்டுகளில் 100 மீட்டர் தடகளப்போட்டியில் ஓடும் தகுதியை
பெற்றிருந்தார். ஆயினும் இறுதி சுற்றிற்கு தகுதி பெற செய்யும் அரையிறுதி
சுற்று ஞாயிற்று கிழமை நடைபெறும் என்பதை அறிந்தவுடன், தான் அந்த
ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொளள் போவதில்லை என்று தன் மேலாளரிடம் கூறினார்.
கர்த்தருடைய நாளை கனவீன்ப்படுத்துவது கர்த்தரையே கனவீனப்படுத்துவதற்கு ஒப்பானது என அவர் எண்ணினார்..
இதினிமதித்தம் விமர்சனங்கள் அவர் மேல் மலை போல குவிந்தன. தனது நாட்டின்
புகழை கெடுத்தவர், குறுகிய மனப்பான்மையுடையவர், மத வெறி பிடித்தவர், பிறரது
மகிழ்ச்சியை கெடுத்தவர் என பலவாறு அவதூறுகளை அவர் மேல் சாற்றினர்.
என்றாலும் தனது முடிவை அவர் மாற்றி கொள்ளவில்லை. பின்பு 220 மீட்டர்
ஓட்டப்பந்தயத்தின் அனைத்து சுற்றுகளும் வார நாட்களில் குறிக்கப்படடிருப்பதை
கண்டு, அதில் கலந்து கொள்ள அனுமதி கோரினார்.
முதல் சுற்று,
இரண்டாவது சுற்று, என அனைத்திலும் வெற்றி பெற்றார். இறுதி சுற்று நாளும்
வந்தது. ஓடுவதற்கென்று தனது இடத்தை நோக்கி சென்றபோது, யாரோ ஒருவர் ஒரு சிறு
துண்டுத்தாளை அவருடைய கரத்தில் திணித்தார். அதை பிரித்து பார்த்தபோது,
'என்னை கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்' என அதில் எழுதியிருந்தது.
100 மீட்டர் ஓடவே பழகிய அவருக்கு, 220 மீட்டர் ஓடுவது சற்று கடினம் தான்
என்றாலும், தேவன் அவரோடிருந்து அவரை வெற்றி பெற செய்தார். வெற்றி பெற்றது
மட்டுமன்றி புதிய உலக சாதனையையும் நிகழ்த்தினார்.
“ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.”சங்கீதம் 91:15 -ம் வசனம் எத்தனை உண்மை பாருங்கள்.
இவைஎல்லாவற்றிர்க்கும் முக்கிய காரணம் எரிக் லிட்டில் தமது வாழ்வில் தேவனை கனப்படுதியதே.
ஆம், தானியேலும அவன் நண்பர்களும் தேவனுடைய வார்த்தையை விட்டு கொடுக்காமல்
வைராக்கியமாய் வாழ்ந்ததால் பாபிலோனிய நாட்டின் அரசின் மேன்மையான பதவியை
அடைந்தனர்..தேவனுக்கு முன்பாக பாவம் செய்ய துணியாது தனது தூய வாழ்வால்
தேவனை கனப்படுத்தின யோசேப்பு பஞ்சத்தின்போது, தனது மக்களுக்கும்
பாதுகாவலானக உயர்த்தப்பட்டார். தேவனுக்கு உண்மையுள்ளவனாக மோசே வாழ்ந்ததால்
இஸ்ரவேல் மக்களை வழி நடத்தும் தலைவனாகி தேவனால் கனப்படுத்தப்பட்டார். தேவனை
கனப்படுத்தி வாழ்ந்த அநேகரின் வாழ்க்கை ஆசீர்வதிக்கபட்டிருப்பதை வேதம்
நமக்கு தெளிவாய் காண்பிக்கின்றது. நாமும் எல்லா சூழ்நிலையிலும் தேவனை
கனப்படுத்துவோம். வாழ்வில் உயர்வோம். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக.
ஆமேன்.
விசுவாசத்தில் வாழ்க்கை
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment