Wednesday, December 18, 2013

சயீத் அயினுல் ஹதீத் - சாட்சி

சயீத் அயினுல் ஹதீத் 38

படத்தயாரிப்பாளர்

நான் புனேவில் ஒரு செல்வ செழிப்பான முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தேன். எனது குடும்பம் பரம்பரையாக பக்தி மார்க்கத்தில் ஊறியிருந்த குடும்பம். எனக்கு நான்கு வயதாக இருந்த போது என் பெற்றோர் பிரிந்து விட்டனர். நானும் என் அம்மாவும் எங்கள் அத்தையுடன் ஹைதராபாத்தில் குடி புகுந்தோம். என்னுடைய சிறுவயதிலிருந்தே நான இஸ்லாமிய பாரம்பரியங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டேன். குரானை அரபி மொழியில் படிக்க கற்றுக் கொண்டேன். ஆனால் கிறிஸ்தவர்களால் நடத்தப்பட்ட ஒரு பள்ளியில் பயின்று வந்தேன் படிப்பிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கினேன். நான் ஆறாவது வகுப்பு படிக்கும் போது நானும் என் அம்மாவும் மும்பை;க்கு இடம்பெயர்ந்தோம்.

'இந்த நேரத்தில் நான் மிகவும் கவனமாக குரானை படிக்க ஆரம்பித்தேன், ஆனால் அதனுடைய போதனைகயை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதை நான் விசுவாசித்தேன். அது 1980ன் இறுதிப் பகுதியாக இருந்தது. என்னுடைய டீன் ஏஜ் மற்றும் இளமை பருவத்தின் தொடக்கம் மிகவும் கடினமான நாட்களாக இருந்தது. உறவு முறிவுகள், பண நெருக்கடி மற்றும் என் தந்தையின் மரணம் இவையெல்லாம் என்னை மிகவும் சிடு சிடுப்பாக மாற்றியது. ஒரு சந்தர்ப்பத்தில் நான் மெர்க்குரியை உட்கொண்டு என்னை நானே மாய்த்துக் கொள்ளவும் முடிவு செய்தேன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன்.

' அது முற்றிலும் விநோதமாக இருந்தது, நான் ஒரு கையில் தற்கொலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும்போது என் சரீரத்தில் ஏதோ வித்தியாசமாக நடந்து கொண்டிருந்தது. என் ஆவி என்னை நான் படித்த பள்ளியின்- இயேசுவின் பாதத்துக்கு கொண்டு சென்றது. நான் அவருடைய பிரசன்னத்தை உணர ஆரம்பித்தேன். ஒரு வருடம் கழித்து நான் அந்தப் பள்ளிக்கு சென்றேன் அங்கே இயேசுவின் சிலை வைக்கப்பட்டிருந்த பீடத்தில் இவ்வாறாக பொறிக்கப்பட்டிருந்தது, 'நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்று. அது இன்று வரை அங்கேயிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் தான் என்னை இயேசு கிறிஸ்துவிடம் வழிநடத்தினார் என்று விசுவாசிக்கிறேன். இன்றுவரை கடவுள் எனக்கு அளித்த வரங்களின் படி நான் அவருடைய பணியை செய்து வருகிறேன்.
இயற்கையாக என்னுடைய நண்பர்கள் நான் என்னுடைய இஸ்லாமிய நம்பிக்கயை விட்டுவிட்டதை ஏற்றுக் கொள்ளவில்லை. மத குருக்கள் என்னிடம் மாறியதைக் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்தனர். இவையெல்லாம் என்னை அதிகமாக தைரியப்படுத்தியது நான் மேலும் அதிகமாக குரான், ஹதீஸ் மற்றும் பைபிளை படிக்க தூண்டியது. இறுதியாக கிறிஸ்தவம்தான் என்னுடைய அழைப்பு என்று புரிந்து கொண்டேன்.

No comments:

Post a Comment