Tuesday, February 18, 2014

மண்பானை

என் நண்பருடைய வீட்டிலே சிறந்த ஓவியர் ஒருவரால் கொடுக்கப்பட்ட அன்பளிப்பு ஒன்றை பார்த்தேன். அது தெருவிலே விற்கப்பட்ட சாதாரண மண்பானையால் ஆனது. ஆனால் அந்த ஓவியர் தன் கலைத்திறனால் அதன் மீது மரங்களும், தாவரங்களும், பழங்களும், பூக்களும் நிறைந்த ஒரு சோலைவனம் ஒன்றை வரைந்திருந்தார். அதை அவர் வீட்டிற்கு வருகிறவர்கள் கண்டு ரசிக்கும்படியான ஓரிடத்தில் வைத்திருந்தார். அதை காண்கிறவர்கள் அனைவரும் அது எங்கு, என்ன விலை கொடுத்து வாங்கப்பட்டது? எனறு கேட்டனர். அது மிகவும் அற்பமான ஒரு மண்பாண்டத்தை மூலப்பொளூக கொண்டு செய்யப்படடது என்பதை அறிந்ததும் மிகவும் வியப்படைந்தனர். அதன் மதிப்பு வெறும் பதினைந்து ரூபாய் தான். ஆனால் அதன் உண்மை மதிப்பை பணத்தினால் அளவிட முடியாது

No comments:

Post a Comment