வாழும் நாள் சொர்க்கமாகிவிடும்
நான் இயேசுவோடு இருப்பேன்
என்ற நம்பிக்கையுடன்
2 கொரிந்தியர் 4:10. கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம். 11. எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.
ஆந்திர பிரதேசம்,விகாராபாத் பகுதியில் அமைந்துள்ள யேகோவா ஷம்மா சபையை சேர்ந்த சுவிசேஷகர் சஞ்சீவலு,மர்ம கும்பலால் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளாகி,கடந்த ஜனவரி 11 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
48 வயது ஆகும் சஞ்சீவலு,தனது மனைவி,3 மகள்கள் மற்றும் மகனுடன் விகாராபாத்தில் வசித்து வந்தார்.சம்பவம் நடந்த அன்று ஜனவரி 11 ஆம் தேதி 5 மணியளவில் 4 நபர்கள் சஞ்ஜீவலுவிடம் ஜெபம் செய்துகொள்ள வேண்டும் என அவரது வீட்டில் விசாரித்து உள்ளனர். சஞ்சீவலு,வீட்டின் முதல் மாடியில் இருப்பதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்ததை தொடர்ந்து,அங்கு விரைந்து சென்ற அந்த நபர்கள் அவரை பலமாகத் தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர்.படுகாயமடைந்
தொடர்ந்து இவரின் குடும்ப பாதுகாப்பிற்காக ஜெபித்து கொள்ளுங்கள். இப்படிப்பட்ட கொலைகள் தொடர்ந்த வன்னம் உள்ளது. சென்ற ஆண்டில் சுமார் 14 பேர் படுகொலை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இந்திய தேசம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான துன்புறுத்தலில் மூன்று இடம் முன்னேறி இப்போது 28 வது இடத்தில் இருக்கிறது. இந்த வருட ஆரம்பித்தில் இருந்தே கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை பரவி வருகிறது. ஜெபிப்போம்...
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
நன்றி: http://evangel.fm/?p=392
No comments:
Post a Comment