நடிகர் ஆனந்தபாபு அவர்கள் மறைந்த முன்னாள் நடிகர் திரு.நாகெசின் மகன் ஆவார். நடிகர் நாகேசின் உண்மையான பெயர் பீட்டர் நாகேஷ். ஆனந்தபாபுவின் முழு பெயர் ஜெரால்ட் ஆனந்தபாபு. இவர்கள் கிறிஸ்தவர்கள். ஆனால் சினிமா என்கிற ஓர் விஷம் இவர்களை வேறு பாதையில் இழுத்து சென்றது. நாகேஷ் அவர்கள் தனது நடிப்பின் திறமையால் பல கோடிகளுக்கு அதிபதியாக அமர்ந்தார். அவர் வழியில் ஆனந்தபாபுவும் திறமை மிக்க நடன கலைஞ்சராக நடிகராக மாறினார். குடும்பத்தில் பணத்திற்கு குறைவில்லாமல் இருந்தது. பாவமும் பெறுகிறது. I தீமோத்தேயு 6:10 "பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள
நடிகர் ஆனந்தபாபுவின் கதையும் இதை போல பண ஆசையால் பல பாவ பழக்கங்களுக்கு ஆளானார்... இவரின் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி விஜயசேஷ மகாலில் 8-12-85 அன்று நடந்தது. மனைவி பெயர் திருமதி எம்.பி.சாந்தி. இவர்களுக்கு மூன்று மகன்களும், ஓர் மகளும் பிறந்தனர்.. குடும்ப வாழ்க்கை நன்றாக இருந்த காலம் மாறி சோதனைகளும், வேதனைகளும் மாறி மாறி வந்தன.. குடும்பத்தில் குழப்பம், நிம்மதியின்மை, வேதனைகள், கண்ணீர்கள் என்று மாறிப்போனது...
இப்படி மாறிப்போன இவர்களின் வாழ்க்கை பிரியும் நிலைக்கு வந்தது. ஆனந்தபாபுவின் படங்கள் தோல்வியடைய, புதிய நடிகர்கள் உள்ளே வர பணம் குறைய ஆரம்பித்தது. இந்நிலையில் போதைக்கு முழுவதுமாக அடிமையாகிபோனார் ஆனந்தபாபு. பல மாதங்கள் வீட்டிற்க்கு வராமல் வெளியில் சுற்றி திரிவார். பல மாதங்கள் கழித்து வந்தாலும் வீட்டில் சண்டை தான். மனைவியை அடிப்பாராம். பிறகு குடும்பத்தில் பிரட்சினைகள் அதிகமாகி வீட்டை விட்டு வெளியேறிவிடுவார்.
பிள்ளைகளை கவனிக்காமல், குடும்பத்தை உதாசீனப்படுத்தி பல இன்னல்களுக்கு ஆளாகி நிம்மதி இல்லாமல் திரிந்தார். இந்நிலையில் இவரின் மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். சில நாட்கள் கழித்து இருவரும் ஒன்றாக வாழ முடிவு செய்தனர்.. ஆனால் ஆனதபாபுவின் கேட்ட நண்பர்கள் சகவாசமும், போதை பழக்கமும் விட்டபாடில்லை.
இவரின் மனைவி கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனந்தபாபுவோ செல்ல மாட்டார். வெளியில் சுற்றி திரிந்து இரவு வீட்டிற்க்கு வருவார். பல நேரங்களில் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைவாராம்.. இவரின் மனைவி ஆலயத்திற்கு செல்வதன் மூலம் இயேசு கிறிஸ்துவுக்கும் வளர ஆரம்பித்தார். பல வருடங்களாக கணவனுக்காக ஜெபித்து வந்தார். இவரின் ஜெபமும் ஓர் நாள் கேட்க்கப்பத்தது...
புதுவருட பிறப்பில் எல்லோரும் குடும்பமாக ஆலயத்திற்கு செல்வது வழக்கம். அதைப்போல நடிகர் ஆந்தபாபுவின் குடும்பமும் ஆலயத்திற்கு செல்ல முடிவுசெய்தது. மனைவிக்கு முன் நடிக்க கற்றுக்கொண்ட ஆனந்தபாபு புதுவருட பிறப்பிற்காக ஆலயத்திற்கு வருவது போல நடித்தார். மனைவி ஆலயத்திர்க்குள்ளாக சென்றது தன நண்பர்களுடன் போதை போட சென்றார். போதையோடு வீட்டிற்க்கு வந்தார். வந்தவர் சிகரெட் பிடித்து அணைக்காமல் வைத்துவிட்டார். போதை மயக்கத்தில் தூங்கிவிட்டார். சிறிது நேரத்தில் சிகெரட் துண்டு அங்குள்ள போர்வையில் தீப்பிடிக்க வைத்தது. அந்த தீ ஆனந்தபாபுவின் கால்களில் தீப்புங்களை ஏற்படுத்தியது. போதையில் இருந்ததால் ஆனந்தபாபு தீயை அணைத்தார். காயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. யாருக்கும் சந்தேகம் வராதபடி படுத்து தூங்கினார்.
நாளாக நாளாக அச்சிறிய தீப்புண் பெரும்காயமாக மாறியது.. செல்லவைத்து நடக்க முடியாமல் போனது. மருத்துவம் பார்க்க கூடாதபடி காலம் காந்து போய்விட்டது. ஆனந்தபாபு நடக்கமுடியாமல் மிகவும் அவதிபட்டார். நண்பர்களின் தூண்டுதலின் பெயரில் இந்து கோவில்கள், பல வேண்டுதல்கள், பல மருத்துவர்கள் என்று செய்து பார்த்தார். ஆனால் கால் வழி அதிகமாகி கொண்டே போனது.
மிகவும் சோர்ந்து போன ஆனந்தபாபு ஓர் நாள் வீட்டில் தனிமையாய் இருக்கும் போது மிகவும் துக்கமுகத்துடன் இருந்தார். நன்றாக ஆடிகொண்டிருந்த கால் இன்று இப்படி ஆகிவிட்டதே என்று புலம்ப ஆரம்பித்தார். கண்ணீர் கரை கண்டது.. மிகவும் சோர்வுற்றவராய் கடைசியாக வேதாகமத்தை எடுத்து படித்து பாப்போம் என்று வேதாகமத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார்.
மெல்லிய பரிசுத்த தேவனின் சத்தம் அவரோடு பேச ஆரம்பித்தது. ஜெபித்தார். கண்ணீரோடு தேவனிடம் திரும்பினார். தன்னை முழுவதுமாக ஒப்புகொடுத்து ஜெபித்தார். ஜெபத்தில் இறுதியில் பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்று கொண்டார். புதிய உற்சாகம் அவருக்குள் வந்தது. அன்றில் இருந்து போதையை விட்டார். வேதாகமத்தை படிக்க படிக்க பரிசுத்த தேவன் தன்னோடு பேசுவதை உணர்ந்தார்.
ஆலயத்திற்கு மனைவியோடு செல்ல ஆரம்பித்தார். அதிசயத்தக்க விதமாய் கல் புண் ஆற ஆரம்பித்தது. சில நாட்களில் பூரண குணம் அடைந்தார். அதே நேரத்தில் அவர் முழுவதுமாக இயேசுவை ஏற்றுக்கொண்டு கர்த்தருக்கென்று வைராக்கியமாய் வாழ ஆரம்பித்தார்.
குடும்பத்திற்குள் சமாதானம் வந்தது. நிம்மதி வந்தது. பணம் அதிகமாக இல்லாவிட்டாலும் தேவன் கொடுத்த பெரிய சமாதானம் குடும்பத்தை தாங்கி வருகிறது..
ஆனந்தபாபுவின் ஆசை : எல்லா இடங்களிலும் தன்னுடைய சாட்சியை அறிவித்து தேவனுகேன்று ஓர் கூட்ட மக்களை ஆயத்தம் செய்யவேண்டும் என்பதுதான். இவரின் இந்த வாஞ்சையை தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள். சாத்தான் எந்த ரூபத்திலேயும் உள்ளே நுழைந்துவிடாதபடி விடாமல் ஜெபியுங்கள். உங்கள் சபைகளிலும் இவரை அழைத்து ஊழியம் செய்யுங்கள்...
தேவன் தாமே இந்த சாட்சியை படித்த உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.. ஆமென்..
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
No comments:
Post a Comment