.
இங்கே
சித்தரிக்கப்பட்ட மாடுகள் மனிதர்களைத்தான்
குறிக்கிறது. மனிதனுடைய கண்களுக்கு அடுத்த வீட்டில் உள்ள
பொருடகள் மீது எப்பொழுதும் ஒரு கண் உண்டு. இதோடு
தொடர்புடைய உவமை ஒன்றும் வேதத்திலே உண்டு. தோட்டத்தில்
வேலை செய்ய எஜமான் அனேகரை அழைக்கிறார். சிலர் காலை 8
மணிக்கே வந்து வேலையை ஆரம்பிக்கின்றனர். இன்னும் சிலர் 10
மணிக்கு, சிலர் 12 மணிக்கு வேலைக்கு வந்தனர். கூலி 100 ரூபாய்
பேசிவிட்டார். அவர்கள் மனப்பூர்வமாய் சம்மதித்த
பின்புதான் வேலையை ஆரம்பித்தனர். வேலை முடிந்து
எல்லாருக்கும் 100 ரூபாய் கூலி கொடுக்கப்பட்டது. அப்பொழுது
முந்தி வேலைக்கு வந்தவர்கள், '8மணிக்கு வந்த எங்களுக்கும்
12 மணிக்கு வந்தவர்களுக்கும் ஒரே கூலி எப்படி கொடுக்கலாம்'
என புகார் செய்தனர். அதற்கு எஜமான், 'அது என் இஷ்டம், உனக்கு
என்ன கூலி கொடுப்பதாக சொன்னேனோ அதை உனக்கு கொடுத்து
விட்டேன். மற்றவர்களுக்கு கொடுக்கும கூலியை பார்க்கவோ,
அதை உன்னுடைய கூலியோடு ஒப்பிடுவதோ உனக்குரியதல்ல, நான்
தாராள மனப்பான்மையுடன் செயல்பட்டால் நீ வண்கண்ணனாக
இருக்கலாமா?' என்று பதில் கூறுகிறார்.
No comments:
Post a Comment