.
ஒரு பெண்ணை
திருமணம் செய்தப்பின் கணவன், அப்பெண்ணுக்கு பத்து
வெள்ளிக்காசுகளால் ஒரு செயினை போல செய்து, அதை
அப்பெண்ணிடம் கொடுத்து, தங்கள் திருமணத்தை உறுதி
செய்வான். அதை அந்த பெண் தன் நெற்றியில் அணிந்து கொள்வாள்.
இக்காலத்தில் கைகளில் மோதிரம்போடுவதை போன்று,
அக்காலத்தில் கல்யாணம் ஆன பெண்கள் அந்த வெள்ளிக்காசை
தங்கள் நெற்றிகளில் அணிந்து கொள்வார்கள். அதில் ஒரு
வெள்ளிக்காசு காணமற்போனால் அது அவள்தன் கணவனுக்கு
துரோகம் செய்ததாக கருதப்படும். ஆகையால், ஒரு
வெள்ளிக்காசு காணாமற் போகும்போது, அப்பெண் தன்னுடைய
எல்லா வேலைகளையும் நிறுத்திவிட்டு எப்படியாவது அந்த
வெள்ளிக்காசை தேடி கண்டுபிடித்து தன் திருமணத்தை
காப்பாற்ற முயலுவாள். அதை கண்டுபிடிக்கும் வரைக்கும்
அவளுக்கு வேறு எதுவும் ஓடாது. ஏனெனில் அவளுடைய நடத்தையை
குறித்தே சந்தேகம் வரும்பட்சத்தில் அவள் அதை
கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று விளக்கைக் கொளுத்தி,
வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும்
ஜாக்கிரதையாய்த் தேடுவாள் அல்லவா? கண்டுபிடித்தபின்,
அதை மீண்டும் தன் நெற்றியில் உள்ள செயினில் கோர்த்து,
நிம்மதி பெருமூச்சுடன் மகிழ்வாள். அதைதான்
இயேசுகிறிஸ்து உவமையாக, கண்டுபிடித்தபின்பு தன்
சிநேகிதிகளையும் அயல்வீட்டுக்காரிகளையும்
கூடவரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக்
கண்டுபிடித்தேன், என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள்
என்பாள் என்று கூறினார்.
No comments:
Post a Comment