Monday, December 10, 2012

தேவனின் ஆலயம்

இங்கிலாந்தில் ஒரு பணக்கார கனவான் இருந்தார். அவர் தான் மரிக்குமுன் தன் டவுனில் உள்ள மக்களுக்கு நன்மை செய்ய விரும்பினார். என்ன செய்வது என்று யோசித்து, கடைசியில் ஒரு ஆலயத்தை கட்டலாம் என்று முடிவெடுத்து, ஒரு அழகிய ஆலயத்தை கட்ட ஆரம்பித்தார்.
.
அந்த ஆலயம் கட்டி முடியும் வரைக்கும் யாரையும் அதை காண அவர் அனுமதிக்கவில்லை. கடைசியில் ஆலயத்தை பிரதிஷ்டை செய்யும் நாள் வந்தது. எல்லாரும் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு மிகவும் அழகாக அந்த ஆலய கட்டிடம் கம்பீரமாக நின்றது.
.
பிரதிஷ்டை செய்து முடித்து, அனைவரும் ஆலயத்திற்கு உள்ளே சென்ற போது, ஒரே இருட்டாக இருந்தது. உடனே சிலர், 'விளக்குகள் எங்கே? ஒரே இருட்டாக இருக்கிறது' என்று கத்தினார்கள்.
.
அப்போது அந்த கனவான், சபை மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விளக்கை கொடுத்து, ஒவ்வொருவரும் சபைக்கு வரும்போது அந்த விளக்கை கொண்டு வரவேண்டும் என்று கூறி, 'நீங்கள் அந்த விளக்கை கொண்டு வரும்போது, நீங்கள் இருக்கிற இடம் ஒளியாயிருக்கும். நீங்கள் வராமல் இருக்கும் போது, நீங்கள் இருந்த அந்த இடம் இருளாயிருக்கும். ஆகவே நீங்கள் வராமலிருந்தால் ஆலயத்தின் ஒரு பகுதி இருளாயிருக்கும் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள். தேவனின் ஆலயம் ஒளியாய் இருப்பதும், இருளாயிருப்பதும் உங்களின் கரத்தில் தான் இருக்கிறது' என்று கூறினார்.

No comments:

Post a Comment