டெரி தன்
கணவருக்கு பிறந்த நாளில் ஒரு அருமையான பரிசு கொடுக்க விரும்பினாள்.
அதற்காக அவள் அநேக கடைகளில் ஏறி இறங்கி, கடைசியில் ஒரு இடத்தில் அவள்
தன் கணவருக்கு வாங்கி கொடுக்க வேண்டும் என்று விரும்பிய பொருள்
கிடைத்தது. ஆனால் அதன் விலை அவள் எதிர்ப்பார்த்ததை
விட அதிகமாக இருந்தபடியால், என்ன செய்வது என்று நினைத்தவளாக
இருந்தபோது, கடைக்காரர், 'பரவாயில்லை, நீ இப்போது இதை எடுத்து
கொண்டு போ, ஐந்து மாதங்களுக்குள்ளாய் இதன் விலையை கொடுத்து
முடித்து விடு' என்று கூறினார். ஆகவே டெரியும்
கடைக்காரருக்கு நன்றி சொல்லி
விட்டு, அந்த பொருளை எடுத்து கொண்டு வீட்டிற்கு வந்தாள்.
.
கணவரின் பிறந்த நாளுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தது. அவளுக்கு அதுவரை பொறுத்திருக்க முடியவில்லை. ஒரு நாள் கணவர் வேலைக்கு போகாமல் இருந்த நாளன்று அதை எடுத்து கணவருக்கு பரிசாக கொடுத்தாள். அதை வாங்கி கொண்ட கணவர் மிகவும் சந்தோஷப்பட்டார். அவர் ஒரு போலீசாக இருந்தபடியால், அடுத்த நாள் அவருடைய போலீஸ் போனில் அடுத்த தெருவில் இருந்த பேங்கில் கொள்ளை நடப்பதாகவும், உடனடியாக போக வேண்டும் என்ற செய்தி வரவும், அவர் உடனே அந்த இடத்திற்கு போனபோது, அந்த கொள்ளைகாரன் காரில் ஏறி வேகமாக செல்வதை கண்டார். அவனை துரத்தி கொண்டு போகும்போது, ஒரு இடத்தில் அவன் காரை நிறுத்திவிட்டு, அமைதியாக இருந்தான். இவர் அவனிடத்தில் செல்வதற்கு மெதுவாக போகும்போது அவன் தன் கையில் இருந்த துப்பாக்கியால் அவரை சுட்டான். அவரை அருகில் இருந்து சுட்டதினால் அவர் அந்த இடத்திலேயே கீழே விழுந்தார்..
அடுத்த நாள் காலையில் டெரிக்கு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. அதை கொண்டு வந்த போலீஸ் 'ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி' என்று கூறினார். கெட்ட செய்தி டெரியின் கணவர் துப்பாக்கியால் சுடப்பட்டார் என்பது, அதை கேட்டவுடன், டெரி நல்ல வேளை நாம் முன்பாகவே அவருக்கு பரிசை கொடுத்துவிட்டோம் என்று நினைத்து கொண்டிருந்த போது, போலீஸ் நல்ல செய்தி, அவர் ஆபத்தான நிலையில் இல்லாதபடி தப்பி விட்டார் என்பதாகும்.
.
டெரி தன் கணவருக்கு கொடுத்திருந்த பரிசு குண்டு துளைக்காத உடையாகும். அவருக்கு அவள் ஏற்கனவே கொடுத்து விட்டிருந்தபடியால் பக்கத்திலிருந்து துப்பாக்கியால் சுட்டபோதும் அவர் அந்த உடையை அணிந்திருந்தபடியால் அவர் உயிர் தப்பித்தார்.

No comments:
Post a Comment