ஒரு பெண் ஒரு
குருவானவரிடம் வந்து, 'ஐயா, நான் ஒவ்வொரு நாளும் ஒரு
காரியத்திற்காக ஜெபித்து கொண்டிருக்கிறேன். 'கேளுங்கள்,
அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள்,
அப்பொழுது கண்டடைவீர்கள்ளூ தட்டுங்கள், அப்பொழுது
உங்களுக்குத் திறக்கப்படும்' என்று வேதம் கூறுகிறதே,
நானும் எத்தனையோ முறை ஜெபத்தில் தேவனிடத்தில் தட்டி
தட்டி பார்த்து விட்டேன், ஆனால் எனக்கோ கதவு
திறக்கப்படவே இல்லையே, ஏன் ஐயா' என்று கேட்டாள்.
.
அதை கேட்ட அந்த பெண், 'ஆம் ஐயா, கதவை தட்டி விட்டு ஓடுகிறவர்களின் ஜெபத்தை கேட்பதாக தேவன் வாக்குதத்தம் பண்ணவில்லை, 'தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?' (லூக்கா 18:7) என்று வேதத்தில் கூறவில்லையா? நானும் அப்படி அவர் வந்து கதவை திறக்கும்வரை காத்திருந்து ஜெபிக்கபோகிறேன்' என்று கூறினாள்
.
அதற்கு குருவானவர், 'அம்மா,
சில நேரங்களில் நீங்கள் வீட்டில் இருக்கும்போது, உங்கள்
கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு, நீங்கள் போய் கதவை
திறந்து பார்த்தால், யாரும் இல்லாமல் இருப்பதை
பார்த்திருப்பீர்கள், பின் உங்களுக்கு தெரிய
வந்திருக்கும், சில குறும்பு பிள்ளைகள் கதவை தட்டி
விட்டு, ஓடி போயிருப்பதை குறித்து. அதுப்போல நாமும்,
கர்த்தரை நோக்கி கதவை தட்டுகிறோம், ஆனால் அவர் வந்து கதவை
திறக்கும் வரை காத்திருப்பதில்லை, அதற்கு முன் அந்த
குறும்பு பிள்ளைகளை போல ஓடி வந்து விடுகிறோம். நம்
ஜெபத்தை தேவன் கேட்க மாட்டார், அவர் கொடுத்த
வாக்குதத்தங்கள் எனக்கு அல்ல என்று நாமே தீர்மானித்து
போய் விடுகிறோம். அதனால் தான் நம் ஜெபங்களுக்கு பதில்
இல்லை என்று கூறினார்..
அதை கேட்ட அந்த பெண், 'ஆம் ஐயா, கதவை தட்டி விட்டு ஓடுகிறவர்களின் ஜெபத்தை கேட்பதாக தேவன் வாக்குதத்தம் பண்ணவில்லை, 'தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?' (லூக்கா 18:7) என்று வேதத்தில் கூறவில்லையா? நானும் அப்படி அவர் வந்து கதவை திறக்கும்வரை காத்திருந்து ஜெபிக்கபோகிறேன்' என்று கூறினாள்
No comments:
Post a Comment