1927-ம் வருடம்
ஸ்மித் விகிள்ஸ்வொர்த் (Smith Wigglesworth) என்னும் தேவ ஊழியர், ஒரு
திறந்த சந்தைப் பகுதியில் பிரசங்கித்துக்
கொண்டிருந்தார். அங்கு ஒரு மனிதன் அங்கு இருந்த விளக்கு
கம்பத்தின்மேல் சாய்ந்துக் கொண்டு அவர் சொல்வதைக்
கேட்டுக் கொண்டிருந்தான். ஸ்மித் தன் பிரசங்கத்தை
முடித்து விட்டு, அந்த மனிதனிடம் நேரடியாகச் சென்று,
‘என்ன, உங்களுக்கு உடம்பு சரியில்லையா’ என்றுக்
கேட்டார். அதற்கு அந்த மனிதன் தன்கைகளைக் காட்டினான்.
அதில் ஒரு கத்தி பளபளத்தது.
அவன் சொனனான், தனக்கு துரோகம் செய்த மனைவியை கொல்வதற்காக தான் போய்க் கொண்டிருந்ததாகவும், அப்போது ஸ்மித் அவர்கள் பேசிக் கொண்டிருந்தததைக் கேட்டதாகவும், அவர் இயேசுவின் நாமத்திலுள்ள வல்லமையைக்குறித்து கேட்டபோது அவருக்கு அந்த இடத்திலிருந்து அசைய முடியாதபடி போனதாகவும் கூறினார். அங்குதானே, இருவரும் முழங்கால்படியிட்டு, போவோர் வருவோர் நடுவே அந்த மனிதன் இயேசுவை ஏற்றுக் கொண்டார்.
பின் ஸ்மித் அவரை தன் வீட்டிற்கு அழைத்து சென்று, அவருக்கு வேறு ஆடைகளை கொடுத்து, கொஞ்சம் பணத்தையும் கொடுத்து, அந்த மனிதன் ஒரு வீடு வாங்க உதவி செய்து, அந்த மனிதனை விட்டு வேறு ஒருவனுடன் வாழ்ந்துக் கொண்டிருந்த அவருடைய மனைவியை மன்னித்து, தன்னோடு இருக்க அழைத்தபோது அவளும் வந்து, இருவரும் ஒன்றாக இணைந்ததாகவும், அந்த மனிதர் கர்த்தருடைய ஊழியத்தை வல்லமையாக நிறைவேற்றவும் தேவன் கிருபைச் செய்தார் என்றும் ஸ்மித் தன்னுடைய புத்தகத்தில் எழுதியிருந்தார். ஆம் இயேசுவின் நாமத்தில் வல்லமை உண்டு.

No comments:
Post a Comment