Henry Ford and the Quadricycle, 1896. |
கர்த்தரை
நம்பியே ஜீவிப்போம்
மேலை நாடுகளில் அதிவேகமாக கார்களை ஓட்டி
செல்லக்கூடிய பெருவழிச்சாலைகள் உண்டு. வாகனம் பழுதாகி
விட்டால், ரோடை அடைத்து கொண்டு இராமல், ரோட்டில்
பழுதுசெய்யும் பகுதியில் வாகனத்தை நிறுத்தி பழுது
செய்து கொள்ள வேண்டும். இவ்விதமாக சாலையில் சென்று
கொண்டிருந்த கார் ஒன்று இயந்திர கோளாறினால் நின்று
விட்டது. ஓட்டுனர் காரை சரி செய்ய பல முயற்சிகளை எடுத்து
கொண்டிருந்தார்..
சற்று நேரத்தில் அந்த வழியே வந்த வயது முதிர்ந்த ஒருவர், தன் காரை நிறுத்தி, 'ஏதாவது பிரச்சனையா? என்று கேட்டார். அதற்கு ஓட்டுனர் 'ஆமாம், என்னவென்று தெரியவில்லை, நடுரோட்டில் காலை வாரி விட்டது' என்றார். முதியவர், 'நான் ஏதாவது உதவி செய்யலாமா?' என்று கேட்டார். ஏற்கனவே எரிச்சலிலிருந்த ஓட்டுனர், 'உங்கள் வேலையை பார்த்து கொண்டு போங்கள்' என்று கூறிவிட்டு, காரை இயக்குவதில் மும்முரமாய் ஈடுபட்டார். ஆனால் கார் இம்மியளவும் அசையவில்லை.
.
அவைகளையெல்லாம் கவனித்து கொண்டிருந்த அம்முதியவர், 'நான் உங்களுக்கு உதவாவிட்டாலும் நான் சொல்வதையாவது கேளுங்கள்' என்று கூறி, ஒரு சில பழுது நீக்கும் முறைகளை சொல்லி கொடுத்தார். அதன்படி செய்தபின் கார் ஸ்டார்ட் ஆனது. உடனே, அம்முதியவரை பார்த்து 'நீங்கள் யார்' என்று ஓட்டுனர் கேட்டார். 'நான்தான் இந்த காரை உருவாக்கிய போர்ட் (Ford). வயதாகி விட்டதால் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறேன்' என்றார். தனது அலட்சியமான பேச்சிற்கு மன்னிப்பு கேட்டு சென்றார் ஓட்டுனர்.
No comments:
Post a Comment